Yamaha MT-07, YZF R7 பைக்குகளுக்கு அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் திறப்பு! த்ரில்லான ரைடு அனுபவம் வேணடுமா?..

யமஹா (Yamaha) நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஸ்போர்ட் மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட இருசக்கர வாகனங்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக யமஹா இருக்கின்றது. இதேபோல், நிறுவனத்தின் பைக்குகளின் செயல்திறனும் நம்மை பிரம்மில் ஆழ்த்தக் கூடியதாக இருக்கின்றன.

இதன் காரணமாகவே இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தனி ரசிக பட்டாளமே நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த ரசிகப் பட்டாளத்தை விரிவாக்கும் செய்யும் விதமாக நிறுவனம் அதன் இரு புதுமுக மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Yamaha mt 07 and yzf r7

எம்டி-07 (MT-07) மற்றும் ஒய்இசட்எஃப் ஆர்-7 (YZF R7) ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களையே நிறுவனம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. தன்னுடைய இந்திய வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் விதமாகவே இந்த இரு புது முகங்களையும் யமஹா நாட்டில் களமிறக்க இருக்கின்றது.

இவற்றிற்கான புக்கிங் பணிகளே தற்போது இந்தியாவில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் ஆகும். குறிப்பிட்ட சில டீலர்களே புதுமுக பைக்குகளுக்கான புக்கிங்கைத் தொடங்கி இருக்கின்றனர். ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையிலான முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

Yamaha mt 07

யமஹா நிறுவனம் புதுமுக பைக்குகளின் வருகையை உறுதிப்படுத்தும் முன்னரே இந்த நடவடிக்கையில் யமஹா டீலர்கள் களமிறங்கி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை மூழ்க வைக்கும் வகையில் அமைந்து உள்ளது. அதேவேளையில், நடப்பாண்டின் இரண்டாம் பாதிக்குள் இரு மோட்டார்சைக்கிள்களும் விற்பனைக்கு அறிமுகமாகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பன்முக பிரீமியம் வசதிக் கொண்ட பைக்குகளாக இவை இந்திய சந்தையைக் களம் காண இருக்கின்றன. இப்போது, வரை இந்த பைக்குகளில் என்ன மாதாரியான சூப்பர்-டூப்பர் அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தவில்லை. விரைவில் இதுபற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Yamaha yzf r7

அதேவேளையில், இந்த பைக்குகள் தினசரி பயன்பாடு மற்றும் லாங் டிரைவ்களுக்கு ஏற்றதாக இருக்கும் என தெரிகின்றது. இதற்கேற்ப தொழில்நுட்ப கருவிகள் மற்றும் உபகரணங்களும் மிக தாராளமாக எம்டி-07 மற்றும் ஒய்இசட்எஃப் ஆர்7 பைக்குகளில் இடம் பெற இருக்கின்றன. யமஹாவின் இந்த இரு மோட்டார்சைக்கிள்களிலும் 689 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 73 பிஎச்பி பவரையும், 67 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மோட்டார் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாக இருந்தாலும், உருவ தோற்றத்தில் இரண்டிற்கும் இடையில் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் எம்டி-07 ஸ்ட்ரீட்-ஃபைட்டர் ஸ்டைலிலும், ஆர்7 ஃபேர்டு ரக மோட்டார் சைக்கிளாகவும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

அனைத்து தரப்பு டூ-வீலர் காதலர்களையும் இவை எளிதில் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்குகள் விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கவாஸாகி நிஞ்ஜா 650, ஹோண்டா சிபிஆர் 650ஆர், கவாஸாகி இசட்650 மற்றும் டிரையம்ப் டிரிடெண்ட் 660 பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

யமஹா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என இந்தியாவில் தனித்துவமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஸ்போர்ட்ஸ் பைக்குகளை விரும்புவோர் மத்தியிலேயே இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்து வருகின்றது. இதனை இரட்டிப்பாக்கும் வகையிலேயே யமஹா எம்டி-07 மற்றும் ஒய்இசட்எஃப் ஆர்7 பைக்குகளை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, April 14, 2023, 8:42 [IST]
English summary
Yamaha mt07 yzf r7 bookings open unofficially
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X