மோசம் போய்ட்டோம்! இந்திய மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய யமஹா! இப்படி பண்ணுவாங்கன்னு கனவுல கூட நெனச்சு பாக்கல!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) தற்போது நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே முன்னணி நிறுவனங்கள் பலவும் போட்டி போட்டு கொண்டு, இந்திய சந்தையில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.
தற்போதைய நிலையில் இந்தியாவில், ஏத்தர் (Ather), ஓலா (Ola), டிவிஎஸ் (TVS) மற்றும் பஜாஜ் (Bajaj) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. ஹோண்டா (Honda) நிறுவனம் கூட தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேகமாக தயாராகி வருகிறது.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பது ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Activa Electric Scooter) ஆகும். இந்த வரிசையில் யமஹா (Yamaha) நிறுவனமும், இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு கொண்டுள்ளது.
இது தொடர்பாக, யமஹா இந்தியா நிறுவனத்தின் தலைவர் இசின் சிஹானா (Eishin Chihana), கடந்த 2022ம் ஆண்டு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்திய சந்தைக்கான யமஹா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நியோ (Neo) என்பதுதான் அந்த அறிவிப்பு. இது ஐரோப்பிய சந்தைகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

ஆனால் நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை யமஹா நிறுவனம் கைவிட்டு விட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம், யமஹா நிறுவனம் நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வராது. இது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்து கொண்டிருந்தவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பதிலாக ஸ்போர்ட்டியான எலெக்ட்ரிக் டூவீலர் ஒன்றை யமஹா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் மாற்றி அறிமுகம் செய்வதற்குதான் யமஹா நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் ஐரோப்பிய வாடிக்கையாளர்களை காட்டிலும், இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் என யமஹா நிறுவனம் கருதுகிறது. இயக்குவதற்கு குறைவான செலவு மட்டுமே ஆகும் என்பதுதான், இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்து வருகிறது.
ஆனால் யமஹா தயாரிப்பை வாங்கும் ஒருவரின் எண்ணம் வேறாக இருக்கும். செயல்திறன் மற்றும் மதிப்பு ஆகியவற்றுக்குதான் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவேதான் நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை யமஹா நிறுவனம் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக செயல்திறன் மிக்க ஸ்போர்ட்டியான புதிய எலெக்ட்ரிக் டூவீலர் ஒன்றை விற்பனைக்கு களமிறக்க யமஹா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இங்கே நல்ல விஷயம் என்னவென்றால், இந்த புதிய எலெக்ட்ரிக் டூவீலரை உருவாக்கும் பணிகளை யமஹா நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டதாம். அடுத்த 2-3 ஆண்டுகளில், யமஹாவின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என காத்து கொண்டிருந்த இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி கவலையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் யமஹா நிறுவனம் அதற்கு பதிலாக செயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் டூவீலர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி அந்த கவலையை போக்க செய்வதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








