இது வேற லெவல் சாதனை! 200வது ப்ளூ ஸ்கொயர் ஷோரூமை திறந்த யமஹா!
யமஹா நிறுவனம் தனது 200வது ப்ளூ ஸ்கொயர் ஷோரூமை திறந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. தனது பிரீமியம் டூவீலருக்காக திறக்கப்பட்ட பிரத்தியேகமான இந்த ஷோரூமில் டூவீலர் மட்டுமல்லாமல் அது சார்ந்த மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
யமஹா நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகத்தையும் என்கேஜ்மென்டையும் கொண்டு வருவதற்காகக் கடந்த 2018 ஆம் ஆண்டு "தி கால் ஆப் தி ப்ளூ" என்ற பெயரில் ஒரு பெரும் பிரச்சாரத்தைத் துவங்கியது. இதன் தொடக்கமாகக் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ப்ளூ ஸ்கொயர் என்ற புதிய அவுட்லைட்டுகளையும் திறக்க துவங்கியது.

இந்த ப்ளூ ஸ்கொயர் அவுட்லெட் மூலம் யமஹா நிறுவனம் தனது பிரீமியம் தயாரிப்புகளை விற்பனை செய்யத் துவங்கியது இதன் மூலம் யமஹா தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான மற்றும் தரமான தயாரிப்புகளைச் சுலபமாகக் கொண்டு செல்ல முடியும் என்ற நோக்கில் இதைச் செய்துள்ளது.
இந்த ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள் யமஹா ரேசிங் டிஎன்ஏ உடன் ஒரு ஆழமான தொடர்பை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளூ ஸ்கொயர் ஷோரூமில் வெறும் விற்பனை செய்யும் இடமாக மட்டுமில்லாமல் யமஹா வாடிக்கையாளர்களுக்கு பைக்கின் தொடர்பான அனைத்து விதமான பொருட்களையும் சேவைகளாக வழங்கும் இடமாகவும் இது செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் படிப்படியாக ஒவ்வொரு ஷோரூம்களாக திறக்கப்பட்டு தற்போது இந்தியா முழுவதும் 200 ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களை யமஹா நிறுவனம் திறந்துள்ளது. இது யமஹா நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான மைல் கல்லாக அமைந்துள்ளது. இந்த ஷோரூம்கள் ஒரே மனநிலையில் நபர்களை இணைக்கும் இடமாகவும் இருக்கிறது.
யமஹா நிறுவனம் இந்த ஷோரூமில் தனது மேக்ஸி ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் ஆன அரோக்ஸ் 150 ஸ்கூட்டரை விற்பனை செய்கிறது. இது மட்டுமில்லாமல் யமஹா நிறுவனத்தில் டிராக்சன் கண்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்ட ஒய்இசட்எப் ஆர்15 வி4, ஒய்இசட்எப் ஆர்15எஸ் வி3, எம்டி15 வி2, எஃப்இசட்எஸ் எஃப்ஐ வெர்சன் 4,

எஃப்இஸட் எஸ்எப்ஐ வெர்ஷன் 3, எஃப்இசட் எஃப்ஐ வெர்சன் 3, எஃப்இசட் எக்ஸ், ஃபேசினோ 125 எப்ஐ ஹைபிரிட், ரே இசட்ஆர் 125 எப்ஐ ஹைபிரிட், ரே இசட்ஆர் ஸ்டிரீட் ரேலி 125 எபஐ ஹைபிரிட் ஆகிய தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.
யமஹாவின் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஸ்கூட்டர்கள் அதிக மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர்கள் எல்லாம் யமஹாவின் ப்ளூ ஸ்கொயரில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. வருங்காலத்தில் யமஹா ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களில் சர்வதேச அளவில் உள்ள நிறுவனத்தின் தயாரிப்புகளான அதிக இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யமஹா தயாரிப்புகளுக்கு என ஒரு பெயர் உள்ளது. யமஹாவின் பிரீமியம் தயாரிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்த ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள் அமைந்துள்ளது. 200வது ஷோரூமை யமஹா திறந்துள்ளது அந்நிறுவனத்திற்கு மிக முக்கியமான மைல்கள் தான். இந்தியாவில் சர்வதேச அளவிலான அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் வரும்போது இந்த ஷோரூங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications









