அறந்தாங்கினாலே நிஷா அக்கா-ன்ற பேரு சீக்கிரமே மாறபோகுது... அப்படி என்ன புது விசயம் அங்க வரபோகுது தெரியுமா?
யமஹா நிறுவனத்தின் தரமான ஷோரூம்கள் அறந்தாங்கி மற்றும் காரைக்குடியில் திறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஷோரூமின் ஸ்பெஷல் என்ன?, இங்கு என்ன மாதிரியான வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்?, மற்றும் என்ன மாதிரியான பணிகளை யமஹா செய்து வருகின்றது?, என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
யமஹா நிறுவனம் அதன் பிரீமியம் தர இருசக்கர வாகனங்களுக்கு என பிரத்யேகமாக செயல்படுத்து வரும் ஷோரூம், ப்ளூ ஸ்கொயர். இதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் பணியில் தற்போது அந்நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. முன்னதாக இந்த ப்ளூ ஸ்கொயர் விற்பனையகங்களை நாட்டின் மிகவும் முக்கியமான நகர் புற பகுதிகளில் மட்டுமே அது திறந்து வந்தது.

எல்லா நகரங்களையும் கவர் செய்யும் முயற்சியில் யமஹா
இந்த நிலையிலேயே நாடு முழுவதும், அதாவது, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகர்புற பகுதிகளிலும் ப்ளூ ஸ்கொயர் ஷோரூமை திறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தஞ்சையிலும், அதற்கு முன்னதாக கோயம்பத்தூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்னும் சில முக்கிய பகுதிகளிலும் இந்த ஷோரூமை யமஹா நிறுவனம் திறந்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய ஷோரூம்கள்
அந்தவகையில், தற்போது புதுக்கோட்டையில் உள்ள அறந்தாங்கியிலும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியிலும் புதிதாக ப்ளூ ஸ்கொயர் ஷோரூம் திறக்கப்பட்டு இருக்கின்றன. அறந்தாங்கியில் பெஸ்ட் மோட்டார்ஸ் எனும் பெயரிலும், காரைக்குடியில் விவிஎல் மோட்டார்ஸ் எனும் பெயரிலும் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு திறக்கப்பட்டு உள்ள ப்ளூ ஸ்கொயர் ஷோரூமின் பரப்பளவு 1,652 சதுர அடி ஆகும். அறந்தாங்கியில் திறக்கப்பட்டு இருப்பது 1,615 சதுர அடி பரப்பளவுக் கொண்டதாக இருக்கின்றது.

ஏற்கனவே கூறியதைப் போல் பிரத்யேகமாக யமஹாவின் பிரீமியம் தர இருசக்கர வாகன மாடல்களுக்காக மட்டுமே இயங்கி வரும் ஷோரூமே ப்ளூ ஸ்கொயர் ஆகும். இங்கு நிறுவனத்தின் குறிப்பிட்ட சில தயாரிப்புகள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். ஆகையால், வழக்கமான இருசக்கர வாகன மாடல்களை இங்கு காண முடியாது. மேலும், இந்த மையங்கள் வாயிலாக யமஹா அதன் இருசக்கர வாகனங்களை டெஸ்ட் டிரைவ் செய்யவும் அனுமதிக்கின்றது.
எந்த மாடல்கள் அங்கு காட்சி அளிக்கும்
ஒய்இசட்எஃப்-ஆர்15 வெர்சன் 4.0 ஏபிஎஸ் (YZF-R15 version 4.0 (155cc) with ABS), ஒய்இசட்எஃப் ஆர்15எஸ் வெர்சன் 3.0 ஏபிஎஸ் (YZF-R15S version 3.0 (155cc) with ABS), எம்டி 15 வெர்சன் 2.0 ஏபிஎஸ் (MT-15 (155cc) version 2.0 with ABS) ஆகிய இருசக்கர வாகன மாடல்களே இந்த ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.

இத்துடன், நிறுவனத்தின் ப்ளூ கோர் தொழில்நுட்பம் கொண்ட இருசக்கர வாகன மாடல்களும் இங்கு காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், எஃப்இசட் 25 ஏபிஎஸ் (FZ 25 (249cc) with ABS), எஃப்இசட்எஸ் 25 ஏபிஎஸ் (FZS 25 (249cc) with ABS), எஃப்இசட்-எஸ் எஃப்ஐ ஏபிஎஸ் (FZ-S FI (149cc) with ABS), எஃப்இசட்-எஃப்ஐ ஏபிஎஸ் (FZ-FI (149cc) with ABS), எஃப்இசட்-எக்ஸ் ஏபிஎஸ் (FZ-X (149cc) with ABS) ஆகிய பைக் மாடல்களும் ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களில் நம்மால் காண முடியும்.
ஸ்கூட்டர்களையும் காணலாம்
இவற்றுடன் சேர்த்து யுபிஎஸ் வசதிக் கொண்ட ஃபஸ்ஸினோ 125 - Fascino 125 FI Hybrid (125cc), ரேஇசட்ஆர் 125 RayZR 125 FI Hybrid (125cc) மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 Street Rally 125 FI Hybrid (125cc) ஆகிய ஹைபிரிட் ஸ்கூட்டர்களையும் ப்ளூ ஸ்கொயர் ஷோரூமில் காண முடியும். இந்த வாகனங்களுக்கு என்றே பிரத்யேகமாக ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள் நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இத்தன மாநிலத்தில் இருக்கா?
இவையே நிறுவனத்தின் பிரீமியம் வசதிகள் நிறைந்த இருசக்கர வாகனங்கள் ஆகும். யமஹா நிறுவனம் ப்ளூ ஸ்கொயர் ஷோரூமை அதிகளவில் தொடங்கும் பிளானில் இருக்கின்றது. அந்தவகையில், இப்போதைக்கு தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், சத்திஷ்கர், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், ஜம்மி மற்றும் காஷ்மீர் என நாட்டின் பல்வேறு முக்கிய மாநிலங்களில் ப்ளூ ஸ்கொயர் செயல்பட்டு வருகின்றது. சுமார் 165 ப்ளூ ஸ்கொயர் மையங்கள் நாடு முழுவதும் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









