கோவையில் யமஹா வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்த செம சான்ஸ்! ரேஸ் டிராக்கில் சீறிப் பாய்ந்தனர்!

யமஹா மோட்டார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டாவது ஆண்டாக டிராக் டே நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. கோவையில் உள்ள காரி மோட்டார் ரேஸ் டிராக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்தியது. "தி கால் ஆஃப் தி ப்ளூ" பிராண்டின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகத் தான் இந்த நிகழ்ச்சியை யமஹா நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது யமஹா வாடிக்கையாளர்களுக்கு ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டும் அனுபவத்தை வழங்குவதற்காக இ்நத ஏற்பாட்டைச் செய்திருந்தது.

யமஹாவின் இந்த டிராக் டே நிகழ்ச்சி உலகளவில் தனது பிராண்டின் இமேஜை ரேஸ் பாரம்பரியத்துடன் சேர்ந்து தனது பிராண்டை போசிஷன் செய்வதற்காக நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 1000த்திற்கும் மேற்பட்ட யமஹா ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் யமஹா ஆர்15, எம்டி15, மற்றும் ஏரோக்ஸ் 155 பைக்குகளை வைத்திருக்கும் 300 யமஹா பைக் உரிமையாளர்கள் தங்கள் பைக்குகளுடன் டிராக்கில் பயணித்தனர்.

கோவையில் யமஹா வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்த செம சான்ஸ்! ரேஸ் டிராக்கில் சீறிப் பாய்ந்தனர்!

இந்த நிகழ்ச்சியில் ரேஸ் டிராக்கில் வாடிக்கையாளர்கள் தங்கள் பைக்கில் லீன் ஆங்கிள், ஹைஸ்பீடு கார்னர்கள், பிரேக்கிங் மற்றும் பாடி லாக்குவேஜ் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு வேகமாக நேர் கோட்டில் பயணிப்பது, அவர்கள் பைக்குகளின் உள்ள க்விக் ஸ்விஃப்டர்கள், புல்லிங் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவற்றைப் பற்றி நன்று தெரிந்து கொள்ள முடிந்தது.

கோவையில் யமஹா வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்த செம சான்ஸ்! ரேஸ் டிராக்கில் சீறிப் பாய்ந்தனர்!

யமஹா டிராக் டே நிகழ்ச்சியில் இந்த ரேஸ் டிராக்கில் பைக்கை ஓட்டுவதற்கும், பொது சாலைகளில் பைக்கை ஓட்டுவதற்கும் என்ன வித்தியாசம் என்பது சொல்லிக் கொடுக்கப்பட்டது. வாடிக்கையாளர்களும் அதை ஓட்டி பார்த்து அனுபவித்தனர். இது போக "தி கால் ஆஃப் தி ப்ளூ வீக் எண்ட்" என்ற பெயரில் ஒரு ஒருங்கிணைப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் யமஹா வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் யமஹா வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்த செம சான்ஸ்! ரேஸ் டிராக்கில் சீறிப் பாய்ந்தனர்!

இந்த நிகழ்ச்சியின் போது யமஹா டிராக் ரேஸ், ஜிம்கானா ரைடு, ஸ்லோ ஸ்பீட் பேலன்சிங், போன்ற பல நிகழ்ச்சிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் அங்கு வந்திருந்தவர்களுக்கு யமஹா நிறுவனத்தின் பைக்குகளுக்கான டெஸ்ட் ரைடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது போக யமஹா பைக்குகள் மற்றும் ஆக்ஸசரீஸ் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

யமஹா நிறுவனம் இந்த "தி கால் ஆஃப் தி ப்ளூ" மூலம் இந்தியா முழுவதும் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற தனித்துவமான டிராக் டே நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தும் என அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது போக அந்த நிகழ்ச்சியில் டிராக் ரைடின் அனுபவம், போஷர் பயிற்சி, டெஸ்ட் சிட்டிங் மற்றும் பாதுகாப்பு குறித்த விஷயங்களும் அறிவுரையாக வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 11, 2023, 18:30 [IST]
English summary
Yamaha organized call of the blue track day event in Kovai
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+