யமஹாவின் இந்த வருஷத்துக்கான பிளான் என்ன? தெரிஞ்சா புது டூ-வீலர் வாங்குற பிளானை இப்போதைக்கு தள்ளி போட்ருவீங்க!

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் யமாஹவும் ஒன்று. உலகளவில் நிலவுவதை போலவே நம் நாட்டிலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் யமஹா மிக உறுதியாக உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் இந்த ஆண்டில் சில புதுமுக இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அவை என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். நிறுவனத்தின் புதிய வரவுகள் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் 250 சிசி பிரிவிற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் தங்களின் புதுமுகங்களைக் களமிறக்கிய வண்ணம் இருக்கின்றனர்.

யமஹா

ஆனால், இந்த பிரிவில் யமஹா பெரிய அளவில் கவனம் செலுத்தாத நிலை தென்படுகின்றது. எனவே இந்த இடத்தை பூர்த்தி செய்யும் வகையிலும், இதேபோல், இதுவரை ஒரு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தையும் யமஹா விற்பனைக்குக் கொண்டு வராத நிலையும் உள்ளது. எனவே இந்த இடங்களை நிரப்பும் வகையிலும் யமஹா நிறுவனம் புதிய இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் யமாஹ நிறுவனம் எஃப்இசட்-எக்ஸ்25, யமஹா ஆர்7, எம்டி 09, எம்டி 07 மற்றும் நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய இருசக்கர வாகன மாடல்களையே விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது.

எஃப்இசட்-எக்ஸ்25:

இன்றைய கால இளைஞர்கள் மத்தியில் ரக்கட்டான தோற்றம் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் முரட்டுத் தனமான தோற்றம் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு உகந்தது என்பதற்கு சான்றாக இருக்கின்றது. மேலும், லாங் டிரைவிங்கு ஏற்றதாக உள்ளது. இதை விரும்பக் கூடியவர்கள் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றனர். அதாவது, இருசக்கர வாகனத்தில் லாங் டிரைவ் செல்ல வேண்டும் என விரும்புபவர்களின் எண்ணிக்க சற்றே உயர்ந்துக் காணப்படுகின்றது.

யமஹா

இத்தகையோரைக் கவரும் யமஹா கொண்டு வர திட்டமிட்டுள்ள பைக் மாடலே எஃப்இசட் எக்ஸ் 25 ஆகும். ராயல் என்பீல்டு மற்றும் ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களின் நியோ ரெட்ரோ மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் விதமாக இதன் வருகை அமைய இருக்கின்றது. தற்போது 250 சிசி பிரிவிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவில் தனது பங்களிப்பை வழங்கும் விதமாகவே இந்த 250 சிசி வாகனத்தை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, யமஹா. ஆனால், இதன் துள்ளியமான வருகை நாள் பற்றிய விபரம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

யமஹா ஆர்7:

இந்தியாவில் களமிறக்க யமஹா நிறுவனம் திட்டமிட்டிருக்கும் பைக் மாடல்களில் ஆர்7-ம் ஒன்று. இது ஓர் 4 சிலிண்டர் மோட்டார் கொண்ட பைக் ஆகும். அதிக திறனை வெளிப்படுத்துவதில் வல்லமை மிக்க தயாரிப்பாக இருக்கின்றது. இதற்காக 689 சிசி இன்லைன் ட்வின்-சிலிண்டர் மோட்டாரே பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 73 பிஎச்பி பவரையும், 67 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. ஆர் 7 ஓர் மிடில் வெயிட் ஸ்போர்ட் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இதன் துள்ளியமான அறிமுகம் பற்றிய விபரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதன் வருகை அமைய இருக்கின்றது.

யமஹா

எம்டி 08 மற்றும் எம்டி 07:

மேலே பார்த்த இருசக்கர வாகன மாடல்களை போலவே யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் எம்டி08 மற்றும் எம்டி 07 ஆகிய இரு பைக் மாடல்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவற்றின் துள்ளியமான வருகை பற்றிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் 2023 ஆம் ஆண்டிற்குள் இதன் வருகை உறுதி செய்யப்படும் என தெரிவிக்கின்றன. எம்டி 07 - 700 சிசி பிரிவிலும், எம்டி 09 - 900 சிசி பிரிவிலும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:

இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க தொடங்கிவிட்டன. உதாரணமாக சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் விடா எனும் புதிய பிராண்டின்கீழ் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இதேபோல், டிவிஎஸ் மற்றும் பஜாஜ் உள்ளிட்ட இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் மின்சார டூ-வீலரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றன. இவற்றின் வரிசையிலேயே வெகு விரைவில் யமஹா இணைய இருக்கின்றது.

இந்த இணைவின் அடிப்படையில் நிறுவனம் நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யமஹா இறு வெவ்வேறு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை உலக சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இ01 மற்றும் நியோ ஆகிய மாடல்களையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டுள்ளது. இதில், நியோ எனும் மாடலையே அது விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha plan for 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X