ரோட்டுல இறங்குனா சும்மா சீறி பாயும்! யமஹாவின் ஆர்3 பைக் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
யமஹா நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒய்இசட்எஃப் ஆர் 3 என்ற பைக்கை இன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூபாய் 4.65 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட பைக்காக இந்த பைக் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதால் அதிக விலைக்கு இந்த பைக் விற்பனையாகிறது. இது குறித்த முழுமையான விவரங்களை காணலாம் பாருங்கள்.
யமஹா நிறுவனம் நீண்ட நாட்களாக இந்தியாவில் தரமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி விற்பனையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என்று மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க ஏராளமான மக்கள் மற்றும் ரசிகர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் யமஹா நிறுவனம் தற்போது ஒய்இசட்எஃப் ஆர் 3 என்ற புதிய பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூபாய் 4.65 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக் முழுமையாக வெளிநாட்டில் கட்டமைக்கப்பட்ட பைக்காக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதனால் இந்த பைக்கின் விலை அதிகமாக இருக்கிறது. இத்துடன் சேர்த்து யமஹா எம்டி-03 என்ற பைக்கையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த யமஹா ஆர் 3 பைக்கை பொறுத்தவரை மார்க்கெட் சமீபத்தில் அறிமுகமான அப்பில்லா ஆர் எஸ் 457 என்ற பைக் இருக்கும் கவாஸகிக்கு நிஞ்சா 400, நிஞ்சா 300, ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது. இது மிகப்பெரிய அளவில் போட்டியை ஏற்படுத்தும் என தெரிகிறது.
இதுபோக மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் கேடிஎம் ஆர்சி 390, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310, பிஎம்டபிள்யூ ஜி3 ஆர்ஆர் ஆகிய பைக்குகளையும் இதை போட்டி பைக்குகளாக சொல்லலாம். ஆனால் இதன் விலை மிகக் குறைவு தான். இந்த பைக்குகள் எல்லாம் இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்யப்படுவதால் விலை குறைவாக இருக்கும்.
தற்போது அறிமுகமாகியுள்ள யமஹா எம்டி-03 பைக் மற்றும் யமஹா ஆர்3 பைக் ஆகிய இரண்டு பைக்கிலும் ஒரே இன்ஜினை கொண்டதாக இருக்கிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை 321சிசி லிக்யூட் கூல்டு, இன் லைன் டிவின் சிலிண்டர், டிஓஎச்சி 4 வால்வு, ஃப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 42 பிஎஸ் பவரை 10,750 ஆர்பிஎம் மேலும் 29.5 என்எம் டார்க் திறனை 9000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக் குறைந்த எடை பிரைமில் தயாரிக்கப்பட்டுள்ள பைக்காக உள்ளது. முன்பக்கம் தலைகீழாக பொருத்தப்பட்ட ஃபோர்க்குகள் உள்ளன. இதுபோக பெரிய ஸ்விங் ஆர்ம் மற்றும் மோனோகிராஸ் ரியர் சஸ்பென்ஷன் உள்ளன. பைக்கின் முன்பக்கம் மல்டி ஃபங்ஷன் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக பைக்கில் அனைத்து லைட்டிங் எல்இடி லைட் உள்ளன.
இந்த பைக் குறித்து யமஹா நிறுவனத்தின் சேர்மன் கூறும்போது: " இந்த இரு பைக்குகளும் யமஹா நிறுவனத்தால் சிறப்பாக விற்பனை செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம். யமஹாவின் அதிகபட்ச தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை வைத்து இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இளம் வாடிக்கையாளர்களை இந்த பைக்குகள் சுண்டி இழுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இளம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான திரில்லான ரைடிங் அனுபவம் இந்த பைக்கில் கிடைக்கும். மேலும் இந்தியாவில் பல பிரீமியம் பைக்குகளை அறிமுகப்படுத்த நாங்கள் ஆவலாக இருக்கிறோம். இந்த பைக்குகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்த பைக்கை இந்தியாவில் தயாரிக்கவும் நாங்கள் யோசனை செய்து வருகிறோம். நல்ல வரவேற்பு கிடைத்தால் நிச்சயம் இந்தியாவில் தயாரித்து குறைவான விலையில் அறிமுகப்படுத்துவோம்." என்று கூறினார்.
யமஹா நிறுவனத்தின் இந்த பைக் வாடிக்கையாளர்களால் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட பைக்காகவும் இந்த பைக்கை வாங்க பலர் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். முக்கியமாக இளைஞர்கள் பலர் இந்த பைக் மீது மிகப்பெரிய ஆர்வத்தில் இருக்கிறார்கள். இதனால் இந்த பைக்கின் விற்பனை நிச்சயம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக்கின் புக்கிங் மற்றும் டெலிவரி குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா நிறுவனம் தொடர்ந்து பிரிமியம் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கி வருகிறது. யமஹா நிறுவனம் மட்டுமல்ல மேலும் பல நிறுவனங்கள் இந்தியாவில் எதிர்காலத்தில் பிரீமியம் ரக பைக்குகள் அதிகமாக விற்பனையாகும் என்ற பேச்சு நிலவுவதால் தங்கள் வாகனங்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதில் இந்த வாகனமும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications








