பெரியவங்க ஓட்டுற மாதிரி மினி ரேஸ் பைக்கை உருவாக்கிய யமஹா.. இது இந்தியா வந்துச்சு ஓலாவுக்கு சங்கு கன்ஃபார்ம்!

யமஹா (Yamaha) நிறுவனத்தின் மினி ரேஸ் பைக் கான்செப்ட் (mini race bike concept) மாடல் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. இ-எஃப்வி (E-FV) எனும் பெயரிலேயே இந்த பைக்கை அது வெளியீடு செய்திருக்கின்றது.

இது ஓர் எலெக்ட்ரிக் பைக் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதையே முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. மேலும், இதனை விரைவில் வெளி உலகில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் யமஹா அறிவித்து இருக்கின்றது. விரைவில் ஜப்பான் மொபிலிட்டி ஷோ (Japan Mobility Show) அந்நாட்டில் நடைபெற இருக்கின்றது.

Yamaha e fv electric mini race bike

அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 வரையில் இந்த வாகன கண்காட்சி நடைபெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் பல தங்களின் புதிய தயாரிப்புகளையும், எதிர் கால தயாரிப்புகளையும் காட்சிப்படுத்த இருக்கின்றனர்.

இந்த ஷோவின் வாயிலாகவே யமஹாவும் அதன் இந்த புதிய மினி எலெக்ட்ரிக் பைக்கைக் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றது. இந்த வாகனத்தை மட்டுமல்ல இன்னும் பிற கான்செப்ட் மாடல்களையும் அது ஜப்பான் மொபிலிட்டி ஷோ வாயிலாக இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Yamaha e fv electric mini race bike motor

அந்தவகையில், நிறுவனத்தின்கீழ் சுயமாக இயங்கும் (ஓட்டுநர் தேவைப்படா பைக்) மற்றும் ஹைட்ரஜன் பவர்டு வாகனம் உள்ளிட்டவையே காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. இருப்பினும், பலரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய யமஹாவின் தயாரிப்பாக இ-எஃப்வி இருக்கின்றது. தாழ்வான வீல்பேஸ் மற்றும் குட்டியான உருவ அமைப்பை அதுக் கொண்டிருக்கின்றது.

இதனாலேயே பலரின் மனதை அந்த பைக் தற்போது கவர்ந்துள்ளது. இதுதவிர, உயரமான விண்ட் ஸ்கிரீன், இ-எஃப்வி எனும் பேட்ஜ் (பெரிய அளவில்), ஃப்யூவல் டேங்க் போன்ற அமைப்பு, அப்ஸ்வெப்ட் டெயில் பகுதி, மெல்லிய மற்றும் தடிமனான அமைப்பைக் கொண்ட இருக்கை உள்ளிட்ட அம்சங்களையும் இந்த பைக் கொண்டிருக்கின்றது.

Yamaha e fv electric mini race bike side view

மேலும், சிறிய அலாய் வீல்கள், க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் போன்ற அம்சங்களையும் இந்த குட்டி ரேஸ் பைக் தன்னுள் தாங்கி இருக்கின்றது. எனவே இன்றைய கால இளசுகளின் மனம் கவர்ந்த பைக்காக இது கட்டாயம் மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சொல்லபோனால் ஹாலிவுட் படங்களில் வரும் ரோபோ மெஷின் வாகனத்தைப் போன்ற தோற்றத்தில் புதிய யமஹா இ-எஃப்வி பைக் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த தோற்றமே மனதைப் பறிக்கும் வகையில் உள்ளதாக பலர் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். யமஹாவின் பிரபல எலெக்ட்ரிக் பைக் மாடலான டிஒய்-இ 2.0 மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி பேக் ஆகியவையே இந்த புதிய கான்செப்ட் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், இந்த பைக்கின் உற்பத்தி பணிகள் எப்போது தொடங்கும்? மேலும், இது எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும்? என்பது போன்ற விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுகுறித்த விபரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், இந்தியாவில் இந்த பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்படுமா என்கிற விபரங்களும் வெளியாகவில்லை.

இது விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரியவில்லை. அதேவேளையில், இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இப்போது இல்லை என்றாலும் எதிர்காலத்தில் யமஹாவின் இதுபோன்ற அரிய வகை தயாரிப்புகள் விற்பனைக்குக் கிடைப்பதற்கான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல அளவில் வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் புதுமுக மின்சார வாகனங்களுடன் இந்தியாவை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. விரைவில் இதே பாணியை யமாஹவும் இந்தியாவில் கையாளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 20, 2023, 22:20 [IST]
English summary
Yamaha revealed concept model e fv electric mini race bike
மேலும்... #யமஹா #yamaha #electric bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X