ராயல் என்ஃபீல்டு கதை முடிக்க யமஹாவின் மாஸ்டர் பிளான்! ஆர்எக்ஸ் 100 பைக்கை களத்துல இறக்கப்போறாங்க!
1980-90களில் இளைஞர்களின் பெரும் கனவாக இருந்தது யமஹா ஆர்எக்ஸ் 100 பைக், இந்த பைக்கின் சத்தம் மற்றும் ஸ்டைலுக்காகவே பலர் இந்த பைக்கை வாங்கி குவித்தனர். இளைஞர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்த பைக் இது தான். இப்படியாக இளைஞர்களை இந்த பைக் அதிகம் கவர்ந்த நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டது.
மத்திய அரசு 2 ஸ்டோக் இன்ஜின்களை நிறுத்திய பிறகு யமஹா நிறுவனமும் இந்த பைக்கை நிறுத்தியது. அதன்பிறகு இன்று வரை இந்த பைக்கிற்கு மவுசு குறையவில்லை. இன்றும் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் இந்த பைக்கை வாங்க ஏராளமான மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் இந்த பைக்கிற்கு மார்கெட்டில் மவுசும் மிகக் குறைவாக இருக்கிறது.

இந்நிலையில் யமஹா நிறுவனம் மீண்டும் இந்த பைக்கை களத்தில் இறக்கும் என்ற பேச்சு வெகு நாட்களாக இருந்து வருகிறது. இதற்கான புரோட்டோ டைப்பையும் யமஹா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த பைக் பெரிய இன்ஜின் மற்றும் அதிக வசதிகளுடன் பழைய லுக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதை யமஹா இந்தியாவின் தலைவரும் உறுதி செய்துள்ளார்.
இது எல்லாம் நீண்ட நாட்களாக இருக்கும் செய்தி தான். ஆனால் தற்போது கிடைத்த புதிய செய்தி இதன் இன்ஜின் குறித்துத் தான் பழைய பைக்கில் 2 ஸ்டோக் இன்ஜின் இருந்தது. ஆனால் தற்போது 2 ஸ்டோக் இன்ஜினை தயாரிக்க முடியாது. அதனால் யமஹா நிறுவனம் எந்த இன்ஜினை இந்த பைக்கில் பொருத்தப்போகிறது என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.

தற்போது யமஹா நிறுவனத்திடம் பிரபலமான ரைய்டர் 125 சிசி இன்ஜின் இருக்கிறது. இந்த இன்ஜினை இந்த பைக்கில் பொருத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த இன்ஜின் உடன் இந்த பைக் வந்தால் குறைந்த விலை பைக்காகத் தான் விற்பனைக்கு வரும் இந்த செக்மெண்டில் பல பைக்குகள் இருக்கின்றன. இதனால் மார்கெட் பங்கை பிடிப்பது சிரமம்.
அதனால் யமஹா நிறுவனம் 150 மற்றும் 250 சிசி இன்ஜின்களையும் வைத்திருக்கிறது. அந்த இன்ஜின்களை பொருத்தினால் சற்று பிரிமியம் ரக பைக்காக இது மாறும். இந்த செக்மெண்டில் ஆர்எக்ஸ்100 பைக் வந்தால் மார்கெட்டை பங்கைப் பிடிப்பதும் சற்று சுலபம் தான். இதில் 150 சிசி இன்ஜின் உடன் ஆர்எக்ஸ் 100 பைக் வந்தால் இதுபல்சருக்கு போட்டியாகவும், 250 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு வந்தால் ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு போட்டியாகவும் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆர்எக்ஸ் 100 பைக் 2 ஸ்டோக் இன்ஜினாக விற்பனையாகிக்கொண்டிருந்த போது 7 நொடியில் 0-100 கி.மீ வேகத்தை பிக்கப் செய்யும் செம ஸ்பீடு இன்ஜினாக இருந்தது. இதுவும் இந்த பைக்கை இளைஞர்கள் ரசிக்க முக்கியமான காரணம். இந்த பைக் இளைஞர்கள் பயன்படுத்திய பின்பு தான் பைக்கில் வீலீங் என்ற ஒரு விஷயமே பிரபலமானது குறிப்பிடத்தக்கது!


Click it and Unblock the Notifications








