மீண்டும் வரப்போகுது யமஹா ஆர்எக்ஸ்100 ! ஆனா இந்த விஷயத்தை மட்டும் மாத்தப்போறாங்களாம்!
யமஹா நிறுவனம் தனது ஆர்எக்ஸ்100 பைக்கை மீண்டும் வெளியிடப் போவதாக நீண்ட நாட்களாக கூறிவரும் நிலையில் இப்போது அது குறித்த முக்கியமான ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த புதிய இன்ஜின் உடன் அதிக பவருடன் விற்பனைக்கு வரப்போவதாக தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
யமஹா நிறுவனத்தின் ஆர்எக்ஸ் 100 இன்றைய 90 கிட்ஸ் யாரும் மறக்க முடியாத ஒரு பைக்காக இருக்கிறது. அந்த காலத்தில் ரோட்டில் ஒரு ஆர்எக்ஸ் 100 பைக் போனாலே அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு வித்தியாசமான சத்தம் ஏற்படுத்தும். இதனாலேயே இந்த பைக்கை பலர் விரும்பி வாங்கி சாலையில் ஓட்டி வந்தனர். இன்றும் இந்த பைக்குக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவிற்கு மவுசு இருக்கிறது.

இந்நிலையில் யமஹா நிறுவனம் இந்த பைக்கை மீண்டும் புதுப்பித்து விற்பனைக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன்படி இந்த புதிய யமஹா ஆர்எக்ஸ்100 பைக் புதிய லுக்கிலும் அதிக பவர் கொண்ட பைக்காக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யமஹா ஆர்எக்ஸ்100 பைக் ஒரு 100சிசி இன்ஜின் கொண்ட பைக்காக இதற்கு முன்பு விற்பனையாகி வந்தது.
தற்போது அதன் இன்ஜின் பவரை 200சிசி அல்லது அதற்கு அதிகமான திறன் கொண்ட இன்ஜினை கொண்டு வடிவமைக்க யமஹா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆர்எக்ஸ்100 பைக்கின் பழைய இன்ஜினாக இருந்தது 2ஸ்டோக் தான் ஆனால் புதிய இன்ஜின் 4ஸ்டோக் இன்ஜினாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் 2026ம் ஆண்டு தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்எக்ஸ்100 பைக் முதன் முதலாக 1985ம் ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது அதன் பின்னர் 1996ம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது அப்பொழுது 2 ஸ்ட்ரோக் இன்ஜினிற்கு இந்தியாவில் தடை வந்தது காரணமாக இந்த பைக் நிறுத்தப்பட்டது இந்த பைக் புதிதாக அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும்போது ரூ1 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல முக்கியமான அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம் அதன்படி இந்த பைக்கில் டிஸ்க் பிரேக்குகள் அலாய் வீல்கள் டிசைன் மற்றும் எல்இடி ஹெட் லைட்கள் மற்றும் டி ஆர் எல் ஆகியன இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த பைக் முற்றிலும் மாடலான லுக்கிலும் அதே நேரம் பழைய கனவு தன்மையை மாற்றாமலும் மக்கள் மத்தியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிப்படுத்தும் திறன் பொன்னாக இருந்தது இந்த பைக்கில் இரண்டு வீளிலும் ட்ரம் பிரேக்கர் பொருத்தப்பட்டிருந்தன 10 லிட்டர் பெட்ரோல் டேங்க்கும் டிக் டாக் மெக்கானிசமும் இருந்தது இதை எல்லாம் மாற்றப்பட்டு தற்போது புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும்படி இந்த பைக் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு அம்சமே அந்த பைக்கில் உள்ள இன்ஜினில் இருந்து வெளியாகும் சத்தம் தான் இந்த சத்தம் புதிய யமஹா rx100 பைக்கில் இருக்குமா என்ற விவரம் தெரியவில்லை ஒட்டுமொத்தமாக இன்ஜினையே மாற்ற வேண்டியது இருப்பதால் இதே போன்ற சத்தம் இருக்கும் என எதிர்பார்க்க முடியாத இருந்தாலும் யமஹா ரசிகர்கள் விரும்பும் வகையில் இந்த பைக்கின் சத்தம் இருக்கும்படி இதன் சைலன்சர் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆர்எஸ்100 என்ற பெயருக்காகவே இந்த பைக்கில் விற்பனை சிறப்பாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அதுவும் இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் இந்த பைக்கில் சில அம்சங்கள் இருந்தால் மட்டுமே போதுமானது. இந்த பைக்கின் விற்பனை நிச்சயம் பெரிய அளவில் இருக்கும் தற்போது மார்க்கெட்டில் உள்ள பைக்குகளில் விற்பனையை சரிக்கும் அளவிற்கு இதன் விற்பனை இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற நாடுகளில் சிறிய ரக பைக்குகளுக்கு என்றுமே வரவேற்பு இருக்கும். இந்த பைக்குகள் இளைஞர்களை கவரும் வகையில் இருந்தால் நிச்சயம் இதை விற்பனை சிறப்பாக இருக்கும். ஆர்எஸ்100 போன்ற பாரம்பரியமிக்க பைக்குகள் மீண்டும் அறிமுகமாகும் போது அதன் ஒரிஜினல் தன்மை மாறாமல் இருந்தால் நிச்சயம் இந்த முறையும் ஒரு வளம் வரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








