தேதியை அறிவிச்சுட்டாங்க.. யமஹா கெத்து காட்ட போகுதோ இல்லையே நம்ம ஊரு புள்ளிங்கோ இத வச்சி சீன் காட்ட போறாங்க!

இந்திய இருசக்கர வாகன காதலர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வரும் யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மற்றும் எம்டி-03 ஆகிய இரு பைக்குகளின் அறிமுக நாள் பற்றிய விபரம் வெளியாகி இருக்கின்றது. அது எப்போது என்கிற விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்கள் பலரின் பிரியமான இருசக்கர வாகன பிராண்டாக யமஹா (Yamaha) உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவின் இருசக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக இரு புதுமுக பைக்குகளை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஒய்இசட்எஃப்-ஆர்3 (YZF-R3) மற்றும் எம்டி-03 (MT-03) ஆகியவையே அவை ஆகும்.

Yamaha mt 03

இந்த இரண்டு பைக் மாடல்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சற்று அதிகம். குறிப்பாக, பைக் காதலர்கள் மத்தியில் இவற்றின் வருகைக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இவ்விரு பைக்குகளின் அறிமுக நாள் விபரமும் தற்போது வெளியாகி இருக்கின்றது.

வருகின்ற டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்றே இரு பைக்குகளும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. உருவத்தால் வேறுபட்டு காட்சியளிக்கும் இந்த பைக்குகள் எஞ்சின் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. அந்த வகையில், ரெண்டு பைக்குகளிலும் 321 சிசி ட்வின் சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Yamaha mt 03

இந்த மோட்டார் அதிகபட்சமாக 42 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. ஒரே பிளாட்பாரத்தில் வைத்து இரு பைக் மாடல்களும் தயார் செய்யப்பட்டு இருப்பதால் எஞ்சினைப் போலவே சிறப்பம்சங்கள் சிலவற்றிலும் இந்த பைக்குகள் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன.

அந்தவகையில், எல்இடி இலுமினேஷன் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட எல்சிடி திரை என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த திரை ஸ்பீடோ மீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், டேக்கோ மீட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் மற்றும் ஃப்யூவல் லெவல் ரீட்-அவுட் என ஏகப்பட்ட வசதிகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Yamaha yzf r3 runingshot

இந்த வசதிகள் ஒய்இசட்எஃப்-ஆர்3 மற்றும் எம்டி-03 என இரண்டிலுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், இரு பைக்குகளின் முன் வீலிலும் யுஎஸ்டி ஃபோர்குகள் மற்றும் பின் வீலில் மோனோஷாக் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த சஸ்பென்ஷன் செட்-அப் பள்ளம்-மேடு நிறைந்த சாலையை சமாளிக்க ஏதுவானவை ஆகும்.

இதேபோல், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த பைக்குகலில் டிஸ்க் பிரேக் உடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. வீல்களைப் பொருத்த வரை 17 அங்குல வீலே இரு பைக்குகளிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இவற்றுடன், ட்யூப் லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

Yamaha yzf r3

இவ்வாறு அனைத்து அம்சங்களையுமே இரு பைக்குகளும் ஒரே மாதிரியானதாகவே பெற்றிருக்கின்றன. அதேவேளையில், லுக்கில் இரண்டுமே மாறுபட்டுக் காட்சியளிக்கும். ஆர்3 ஓர் முழுமையாக அலங்கரிக்கப்பட்ட டூ-வீலர் மாடல் ஆகும். இதற்காக கூடுதல் பேனல்கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சூப்பரான பைக்குகளையே விரைவில் இந்தியாவில் யமஹா விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

அதன் 'ப்ளூ ஸ்கொயர்' விற்பனையகம் வாயிலாகவே இந்த பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன. இப்போது அறிமுக தேதி பற்றிய விபரங்கள் மட்டுமே வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றன. டெலிவரி செய்யப்படும் நாள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இது பற்றிய விபரங்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 'ப்ளூ ஸ்கொயர்' என்பது யமஹா நிறுவனத்தின் பிரீமியம் தயாரிப்புகளுக்கு என்றே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட விற்பனையகம் ஆகும். இங்கு, பிராண்டின் உயர்நிலை மற்றும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த டூ-வீலர்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இந்த ஷோரூம்களை விரிவாக்கம் செய்யும் பணிகளிலேயே நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 21, 2023, 11:02 [IST]
English summary
Yamaha yzf r3 and mt 03 india launch date announced
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X