இந்த யமஹா பைக்கின் அறிமுகத்துக்கு தான் நாடே காத்துக்கிட்டு இருக்கு!! அறிமுகமாகும் மாதம் இதுதான்!

யமஹா ஆர்3 (Yamaha R3) பைக் இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்கிற விபரங்கள் பிரத்யேகமாக நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்துள்ளது. 2020ஆம் ஆண்டு வரையில் விற்பனையில் இருந்த இந்த யமஹா ஸ்போர்ட்ஸ் பைக் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்குவர உள்ள தகவல் யமஹா பைக் பிரியர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

யமஹா, ஜப்பானை சேர்ந்த பிரபல மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான இது பிரீமியம் தரத்திலான பைக்குகளை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதற்கு உதாரணங்களாக பல்வேறு யமஹா பைக்குகளை சொல்லலாம். அத்தகைய யமஹா பைக்குகளுள் ஒன்று, ஆர்3 ஆகும். இந்த பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என ரசிகர்கள் பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

yamaha yzf-r3 india launch details

இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதத்தில் நொய்டாவில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வேறு சில புதிய மோட்டார்சைக்கிள்களுடன் ஆர்3 பைக்கையும் யமஹா காட்சிக்கு நிறுத்தியது. இதனால், யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்கிற கேள்வியுடன் இருந்த ரசிகர்களுக்கு, இந்த பைக் இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்படும் என்கிற பதில் கிடைத்தது. ஆனால் அது எப்போது நடக்கும் என்ற விபரங்கள் எதையும் யமஹா வெளியிடவில்லை.

இன்னும் சொல்லப்போனால், ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தப்பட்டதற்கு பின், யமஹா ஆர்3 பைக் குறித்த பேச்சுகள் அப்படியே நின்று போகின. இதற்கிடையில், கடந்த 2023 ஜூன் மாத இறுதியில், ஆர்3 பைக்குகளுக்கான முன்பதிவுகளை யமஹா டீலர்ஷிப் மையங்கள் மிகவும் ரகசியமாக, அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கியுள்ளதாகவும், ரூ.5,000 - ரூ.25,000 வரையிலான முன்தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன.

yamaha yzf-r3 india launch details

இந்த நிலையில், யமஹா ஆர்3 பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் பிரத்யேகமாக நமக்கு கிடைத்துள்ளன. அதன்படி பார்க்கும்போது, புதிய யமஹா ஆர்3 மோட்டார்சைக்கிள் வருகிற 2023 டிசம்பர் மாதத்தின் முதல் 2 வாரங்களில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அதாவது, ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு, 1 வருடத்திற்கு உள்ளாக ஆர்3 விற்பனைக்கு வருகிறது.

யமஹா ஆர்3 மோட்டார்சைக்கிளில் 321சிசி, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. லிக்யுடு-கூல்டு என்ஜினான இது அதிகப்பட்சமாக 10,750 ஆர்பிஎம்-இல் 41 பிஎச்பி மற்றும் 9,000 ஆர்பிஎம்-இல் 29.5 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

yamaha yzf-r3 india launch details

சஸ்பென்ஷனுக்கு இந்த பைக்கில் முன்பக்கத்தில் தலைக்கீழான டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. இதில் பின்பக்க மோனோஷாக்கை, கொடுக்கப்படும் சுமைக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். பிரேக் பணிகளை இந்த பைக்கில் முன் சக்கரத்தில் 298மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 220மிமீ டிஸ்க்கும் கவனித்து கொள்கின்றன.

யமஹா ஆர்3 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தைக்கு ஒன்றும் புதியது கிடையாது. முதன்முதலாக 2015இல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக் கடந்த 2020ஆம் ஆண்டு வரையில் விற்பனையில் இருந்தது. 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்குவந்த பிஎஸ்6 மாசு உமிழ்வு கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப பைக்கை அப்டேட் செய்ய விரும்பாத காரணத்தினால் ஆர்3-இன் விற்பனையை இந்தியாவில் யமஹா நிறுத்தியது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் யமஹா ஆர்15 பைக்குகளுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்களை டார்க்கெட் செய்தே 2015இல் ஆர்3 பைக்கை யமஹா கொண்டுவந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு ஆர்3 பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வருகிற 2023 டிசம்பர் மாதத்தில் இருந்து துவங்கவுள்ள யமஹா ஆர்3 பைக்கின் 2வது இன்னிங்ஸ் ஆவது சிறப்பாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 29, 2023, 22:02 [IST]
English summary
Yamaha yzf r3 india launch exclusive information
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X