யப்பா... தாறுமாறாக இருக்கு!! யெஸ்டி அட்வென்ச்சர் & ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளில் புதிய நிறங்கள் அறிமுகம்!

ஒரு காலத்தில் இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய ஜாவா மற்றும் யெஸ்டி பிராண்ட்கள் கடந்த சில வருடங்களில் மீண்டும் இந்தியாவில் ஆக்டிவ் ஆகியுள்ளன. தற்சமயம் இந்த இரு பிராண்ட்களில் இருந்தும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த புதிய 2023ஆம் ஆண்டில் அவற்றின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஸ்பெஷல் எடிசன்கள் புதிய பெயிண்ட் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தில் ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகளுக்கு புதிய நிறங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது யெஸ்டி பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்ட மற்ற 2 மோட்டார்சைக்கிள்களான அட்வென்ச்சர் மற்றும் ஸ்க்ராம்ப்ளரில் புதிய பெயிண்ட் நிறத்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, போல்ட் கருப்பு என்ற பெயரிலான பெயிண்ட் தேர்வில், முழுவதும் கருப்பு நிறத்திலும் பெட்ரோல் டேங்க் மற்றும் சைடு பேனல்களில் மட்டும் சிவப்பு & சில்வர் நிற ஹைலைட்களை பெற்றுள்ள யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய நிறங்களில் யெஸ்டி அட்வென்ச்சர் & ஸ்க்ராம்ப்ளர் பைக்ஸ்!

இந்த நிறத்தில் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் விலை ஆனது ரூ.2.10 லட்சம் ஆகும். யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கிற்கு வொய்ட் அவுட் என்ற பெயரில் புதிய பெயிண்ட் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. புதிய பெயிண்ட் தேர்வில் யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கின் பெட்ரோல் டேங்க் மட்டும் வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டிருப்பதுடன், அதே பெட்ரோல் டேங்கில் நீலம் மற்றும் கருப்பு நிற ஹைலைட் பட்டைகள் ஸ்க்ராம்பளர் பைக்கை போன்று கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பெயிண்ட் தேர்வில் யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கின் விலை ஆனது ரூ.2.15 லட்சம் ஆகும். இந்த அட்வென்ச்சர் பைக்கிற்கான வொயிட் அவுட் நிறம் ஆனது பனி நிறைந்த மலைப்பகுதியை இன்ஸ்பிரேஷனாக கொண்டும், ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள போல்டு பிளாக் ஆனது வானில் பறக்கும் ஜெட்களை இன்ஸ்பிரேஷனாக கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக யெஸ்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய நிறங்களில் இந்த மோட்டார்சைக்கிள்களின் அறிமுகம் குறித்து ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆஷிஷ் சிங் ஜோஷி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

புதிய நிறங்களில் யெஸ்டி அட்வென்ச்சர் & ஸ்க்ராம்ப்ளர் பைக்ஸ்!

அவர் கூறியிருப்பதாவது, "யெஸ்டி கேரக்டரில் அட்வென்ச்சர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் இரு ஐகான்கள் ஆகும். குறிப்பிட்ட பைக் ஆர்வலர்களின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் இவை நெடுஞ்சாலை பயணம் அல்லது குறுகிய தூர பயணத்திற்கு ஸ்போர்டியான ரைடிங்கை வழங்கவல்லவை. புதிய நிறங்கள் இவற்றின் பண்பை மேலும் மெருக்கேற்றியுள்ளன, வெளியுலகில் இவற்றின் மீதான பார்வையை அதிகரித்துள்ளன" என்றார்.

யெஸ்டி அட்வென்ச்சர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளில் புதிய பெயிண்ட் நிறத்தேர்வை தவிர்த்து வேறெந்த எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. அதாவது வழக்கமான 334சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் உடன் தான் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த என்ஜின் யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கில் அதிகப்பட்சமாக 29.8 பிஎச்பி மற்றும் 29.84 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையிலும், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளரில் 28.7 பிஎச்பி மற்றும் 28.2 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் பொருத்தப்படுகிறது.

புதிய நிறங்களில் யெஸ்டி அட்வென்ச்சர் & ஸ்க்ராம்ப்ளர் பைக்ஸ்!

என்ஜின் உடன் இந்த இரு மோட்டார்சைக்கிள்களிலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆனது அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் இணைக்கப்படுகிறது. தொழிற்நுட்ப அம்சங்களாக இந்த பைக்குகளில் யுஎஸ்பி சார்ஜிங் வசதியை ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கும் யெஸ்டி நிறுவனம் ட்யூவல்-டோன் ஏபிஎஸ், ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷனையும் கொடுக்கிறது. இந்த பைக்குகளில் மழை, சாலை மற்றும் ஆஃப்-ரோடு என மொத்தம் 3 ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன.

நிறுவனத்தின் சிஇஓ ஆஷிஷ் சிங் ஜோஷி கூறியிருப்பது போல் இவை இரண்டும் பர்பஸ்-பில்டு மோட்டார்சைக்கிள்கள் ஆகும். இதில் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் ஆனது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் விலை குறைவான ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளுள் ஒன்று. யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கிற்கு சந்தையில் விற்பனையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன், கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் போட்டியாக உள்ளன. இதில் குறிப்பாக, ஹிமாலயன் யெஸ்டி அட்வென்ச்சருக்கு நேரடி போட்டி மாடலாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 3, 2023, 10:13 [IST]
English summary
Yezdi adventure scrambler bikes launched in new colours
மேலும்... #யெஸ்டி #yezdi #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+