நடு ரோட்டில் உல்லாச குளியலை போட்ட இளசுகள்.. விட்டா இவங்க ரோடுலையே எல்லாத்தையும் முடிச்சுருவாங்க..
சமீப சில காலமாக இளம் ஜோடிகள் பொதுவெளியில் அநாகரீகமான செயலில் ஈடுபடும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் தலைநகரான டெல்லியில், மெட்ரோ ரயிலையே லாட்ஜாக மாற்றும் வகையில் இளம் ஜோடிகள் இருவர் பொதுமக்கள் முன்னிலையிலேயே கசமுசாவில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக இரு இளம்பெண்கள் பைக்கில் சென்றபடியே ஆரத்தழுவி தங்களுக்குள் லிப்-லாக் முத்தம் கொடுத்துக் கொண்டனர். இவ்வாறு பல்வேறு முகம் சுழிக்கக் கூடிய சம்பவங்கள் நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையிலேயே புதிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகத் தொடங்கி இருக்கின்றது.

இதுவும் இளம் ஜோடிக்கள் சார்ந்த வீடியோவே ஆகும். அந்த வீடியோவில் இளம் ஜோடிகள் இருவர் நடுரோட்டில் குளிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இருசக்கர வாகனத்தில் சென்றவாறு அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கின்றனர். இது பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்து உள்ளது.
நாடு முழுவதும் வாகன விபத்துகள் அதிகரித்துக் காணப்படும் சூழலில் இந்த மாதிரியான கசப்பான செயலில் இளம் ஜோடிகள் ஈடுபட்டிருப்பது பெரும் வேதனை அளிக்கக் கூடிய நிகழ்வாக அமைந்திருப்பதாக சமூக நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இணையத்தில் வைரலாக வேண்டும் என்ற நோக்கில் இளைஞர்கள் செய்யும் செயல்கள் பலரை கடுப்பில் ஆழ்த்தக் கூடியதாகவே காட்சியளிக்கின்றது.
அந்தவகையிலேயே இந்த நிகழ்வும் அமைந்திருக்கின்றது. அதிக விழிப்புணர்வுடன் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே விபத்துகள் அரங்கேறிவிடுகின்றன. அவ்வாறு நடைபெற்ற விபத்துகளில் உயிரிழந்தோர் பலர். இந்த மாதிரியான சூழலிலேயே ஜாலிக்காக இந்த இளம் ஜோடிகள் இருசக்கர வாகனத்தில் சென்றவாறே குளியலை போட்டிருக்கின்றனர். இவர்களின் இச்செயல் பலரை முகம் சுழிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.
இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம் உல்ஹஸ்நகரில் அரங்கேறியதாகக் கூறப்படுகின்றது. இளைஞர் ஸ்கூட்டரை ஓட்ட பின்னால் அமர்ந்திருந்த பெண், இளைஞர் மீதும், தன் மீதும் நீரை எடுத்து ஊற்றிக் கொள்கின்றார். இதற்காக தண்ணீர் நிறைந்த பக்கெட்டை அவர்கள் தங்களுக்கு இடையில் வைத்துக் கொண்டிருந்தனர்.
அதில் இருந்தே குவளை வாயிலாக நீரை எடுத்து எடுத்து தங்கள் மீது இளைஞர்கள் ஊற்றிக் கொண்டனர். சிக்னலில் நிற்கும்போது மற்றும் சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோதும் இவ்வாறு அவர்கள் செய்துக் கொண்டனர். இந்த வீடியோவே தற்போது இணைய வாசிகள் மத்தியில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
வைரலாகும் அந்த வீடியோவை தானே காவல்துறையுடன் டேக் செய்து நெட்டிசன்கள் சிலர் தங்களின் புகாரை முன் வைத்திருக்கின்றனர். இந்த புகாருக்கு பதிலளித்த காவல்துறை, "விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வீடியோ உரிய காவல்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது" என்றனர். ஆனால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.
தற்போது இந்தியாவில் நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த கிண்டல் செய்யும் விதமாக இளைஞர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. இணையத்தில் வைரலாக வேண்டும் என்கிற நோக்கில் அவர்கள் செய்த செயல் தற்போது அவர்களுக்கே விபரீதத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
இந்த இளம் ஜோடிகள் இருவரும் தலையில் ஹெல்மெட் அணியவில்லை. மேலும், ஸ்டாப் லைனை தாண்டி வந்து சிக்னலில் நின்றிருக்கின்றனர். இதுதவிர, வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்போதே குளித்திருக்கின்றனர். இது வாகன ஸ்டண்ட் செயலுக்கு சமம் ஆகும். ஆகையால் கடுமையான நடவடிக்கைகள் அந்த இளம் ஜோடிகள் மீது தானே காவல்துறை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் அரங்கேறும் பல்வேறு விபத்துகளுக்கு கவனக் குறைவும், வாகன ஸ்டண்டுகளுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இதனால்தான், போக்குவரத்துக் காவலர்கள் வாகன ஸ்டண்ட் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு தங்களின் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், இந்த ஜோடிகள் மீதும் வீடியோவை அடிப்படை ஆதாரமாகக் கொண்டே தானே போலீஸார் கடுமையான நடவடிக்கையை எடுக்க இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்ஸ்டா, யுட்யூப் உள்ளிட்டவற்றில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விநோத செயல்களைச் செய்வதாகக் கூறி இளைஞர்கள் சிலர் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அந்தவகையிலேயே, இந்த இளம் ஜோடிகள் தற்போது போலீஸிடத்தில் சிக்கலில் சிக்கி இருக்கின்றனர். அவர்கள் ஹெல்மெட் அணிந்து போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் இத்தகைய சிக்கலில் சிக்கியிருக்க மாட்டார்கள்.


Click it and Unblock the Notifications








