பசங்க எல்லாம் வேட்டிய கட்டிட்டு கிளம்ப போறாங்க.. புடவைக்காக டூ-வீலரிலேயே உலகை சுற்ற கிளம்பும் 27 வயது இளம்பெண்
புனேவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஹோண்டாவின் பிரபல ஹைனெஸ் சிபி 350 பைக்கைக் கொண்டு உலகின் 30-க்கும் அதிகமான நாடுகளை சுற்று வர திட்டம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான இருசக்கர வாகன மாடல்களில் ஹைனெஸ் சிபி 350 (Honda Highness CB350) மாடலும் ஒன்று. இந்த இருசக்கர வாகனத்திலேயே இளம் பெண் ஒருவர் 30-க்கும் அதிகமான நாடுகளுக்கு பயணிக்க திட்டமிட்டு இருக்கின்றார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் ரமிலா லப்தே.

27 வயதே ஆகும் இவரே இந்தியாவில் இருந்து புறப்பட்டு சுமார் 1 லட்சம் கிமீ தூரம் வரையில் டூ-வீலரிலேயே பயணிக்க திட்டமிட்டிருக்கின்றார். 20 முதல் 30 நாடுகளுக்கு இருசக்கர வாகனத்திலேயே பயணிக்க உள்ளார், ரமிலா. இவர் ஓர் இளம் சமூக தொழில்முனைபவர் ஆவார்.
மராட்டியத்தின் கலாச்சார ஸ்டைலில் புடவை அணிந்தே தன்னுடைய ஒட்டுமொத்த பயணத்தையும் அவர் ரமிலா மேற்கொள்ள இருக்கின்றார். இவ்வாறு அவர் செய்வதற்கு ஓர் காரணம் உண்டு. நம் நாட்டின் பாரம்பரிய உடையான புடவையை புரமோட் செய்வதே அந்த காரணம் ஆகும். இந்த காரணத்திற்காகவே அவர் 20 முதல் 30 நாடுகள் வரை இருசக்கர வாகனத்தில் பயணிக்க பிளான் போட்டு இருக்கின்றார்.

ஆமாங்க, அவருடைய இந்த ஒட்டுமொத்த பயணமும் புடவையை புரமோட் செய்யவே மேற்கொள்ளப்பட உள்ளது. நாளை (மார்ச் 09) தன்னுடைய பயணத்தை ரமிலா தொடங்க இருக்கின்றார். மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவு வாயில் இருந்து இவரின் உலக நாடுகளுக்கான பயணம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
இவருடைய பயணத்தை அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கொடி அசைத்து தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிகழ்வில் அம்மாநிலத்தின் முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலரும் பங்குகொள்ள இருக்கின்றனர். ரமிலாவின் இந்த பயணம் சுமார் ஓராண்டுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, சரியாக அடுத்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி தன்னுடைய இந்த கலாச்சார பிரச்சார பயணத்தை முடித்துக் கொண்டு ரமிலா தாய் நாடு திரும்புவார் என தெரிகின்றது. இந்த பயணத்தின் வாயிலாக மஹாராஷ்டிராவின் பாரம்பரிய புடவையை மட்டுமல்ல மாநிலத்துவத்தின் தனித்துவமான தயாரிப்புகள் மற்றும் பிற சிறப்புகள் குறித்தும் அவர் பிரச்சாரம் செய்ய இருக்கின்றார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்திற்காக அவர் ஹோண்டாவின் ஹைனெஸ் சிபி350 பைக்கையே பயன்படுத்த இருக்கின்றார். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350-க்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட மோட்டார்சைக்கிளே இது ஆகும். ஹோண்டா ஹைனஸ் சிபி 350 பைக்கில் 348.3 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த எஞ்ஜின் 20.7 எச்பி பவரையும், 30 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த மோட்டாருடன் சேர்த்து 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த பைக் லாங் டிரைவிற்கு ஏற்ற வாகனம் ஆகும். எனவேதான் இதனை தனது உலக சுற்று பயணத்திற்காக ரமிலா தேர்வு செய்திருக்கின்றார்.
இருசக்கர வாகனத்தில் லாங் டிரைவ் செல்வது என்பது மிகுந்த ஆபத்தான செயல் ஆகும். எனவேதான் லாங் டிரைவிற்கு இருசக்கர வாகனம் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. இருப்பினும் இது ஓர் சாகச பயணம் என்பதால் மோட்டார்சைக்கிள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், பாதுகாப்பு கவசங்கள் சிலவற்றை அணிந்த வண்ணம் தனது பயணத்தை ரமிலா தொடங்க திட்டமிட்டிருக்கின்றார்.
குறிப்பாக, ஹெல்மெட், கையுறை, ஷூ (காலணி) உள்ளிட்டவற்றை அணிந்த வண்ணம் தனது பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றார். இதன் வாயிலாக ஆபத்தான நேரங்களில் ஓரளவு பாதுகாப்பை நம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.ரமிலாவின் கலாச்சார பயணத்திற்கு அம்மாநில மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. மேலும், ரமிலாவின் இந்த செயல் நம்ம ஊரு பாரம்பரிய வேட்டி-சட்டைக்காக பசங்க யாராச்சும் உலக டூர் கிளம்புவாங்களா என கேட்கச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications









