சூப்பர் மீட்டியோரை கையில் பெற மாச கணக்குல காத்திருக்க தயாராக இருக்கும் இளைஞர்கள்! இத்தன மாசத்த தொட்டிருச்சா!
இந்தியாவில் அதிக காத்திருப்பு காலத்தைக் கொண்ட காராக மஹிந்திராவின் தார் மற்றும் எக்ஸ்யூவி 700 மாடல்கள் இருக்கின்றன. அதீத வரவேற்பின் காரணத்தினால் இந்த இரு கார் மாடல்களுக்கும் ஒரு வருடம் மேலாக காத்திருப்பு காலம் நீடித்து காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரம் மற்றும் மாநிலம் வாரியாக இந்த காத்திருப்பு காலம் மாறுபட்டு தென்படுகின்றது.
இந்த மாதிரியான சூழ்நிலையில் இதேமாதிரியான சூப்பரான காத்திருப்பு காலத்தை ஓர் பைக் இந்தியாவில் பெற தொடங்கி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாக சூப்பர் மீட்டியோர் 650 பைக் இருக்கின்றது. இந்த பைக்கிற்கு தற்போது யாருமே எதிர்பார்த்திராத அளவிற்கு அமோக வரவேற்பு இந்திய இளைஞர்கள் மத்தியில் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

இதன் விளைவாக இப்பைக்கிற்கான காத்திருப்பு காலம் பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிளை விற்பனைக்குக் கொண்டு வந்து ஒரு சில மாதங்களே ஆகின்றன. ஜனவரி மாதத்தின் மைய பகுதியிலேயே இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தொடர்ச்சியாக இந்த பைக் மாடலுக்கு காத்திருப்பு காலம் அதிகரித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 3 முதல் 4 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேவேளையில், சென்னை போன்ற முக்கிய மெட்ரோ நகரங்களில் காத்திருப்பு காலம் சற்று குறைவாக தென்படுவதாகக் கூறப்படுகின்றது. 2 முதல் 3 மாதங்கள் வரையே மெட்ரோ நகரங்களில் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிற்கு காத்திருப்பு காலம் நிலவுகின்றது. சூப்பர் மீட்டியோர் 650 ஒட்டுமொத்தமாக 3 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஆஸ்ட்ரல், இன்டர்ஸ்டெல்லர் மற்றும் செலஸ்டியல் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் உயர்நிலை வேரியண்டான செலஸ்டியலுக்கே மிக மிக அதிகளவில் டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆகையால் அதற்கே காத்திருப்பு காலம் பலமடங்கு நீடித்துக் காட்சியளிக்கின்றது. அதாவது, 4 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் கொண்ட தேர்வாக செலஸ்டியல் காட்சியளிக்கின்றது.

இதற்கு அடுத்தபடியாக ஆஸ்ட்ரல் தேர்விற்கு 2 முதல் மூன்று மாதங்களும், இன்டர்ஸ்டெல்லருக்கு 3 மாதங்கள் வரையிலும் காத்திருப்பு காலம் நிலவுகின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் இந்த பைக்கை விற்பனைக்காக ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இங்கிலாந்திற்கான ஏற்றுமதி பணிகள் சமீபத்தில் தொடங்கின. பெட்டிகள் வாயிலாக இந்த பைக் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கை பைக்கை லாங் டிரைவ் பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக உருவாக்கி இருக்கின்றது. மேலும், இப்-பைக்கில் 648 சிசி பேரல்லல் ட்வின் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 46.7 பிஎச்பி பவரையும், 52.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதனுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மோட்டாரில் இணைக்கப்பட்டுள்ளது.

நவீன கால சிறப்பு கருவிகளாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் டிரிப்பர் நேவிகேஷன் பாட், டிஜிட்டல் டிஸ்பிளே உடன் கூடிய அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட், யூஎஸ்டி ஃபோர்க் (முன் பக்கத்தில்), டூயல் ஷாக் அப்சார்பர்கள் (பின் பக்கம்), அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய லிவர்கள், அலாய் வீல்கள் மற்றும் எல்இடி லைட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன், சிறந்த பிரேக்கிங் வசதிக்காக இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. ரூ. 3.48 லட்சம் தொடங்கி ரூ. 3.78 லட்சம் வரையிலான விலையில் இந்த பைக் விற்கப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.


Click it and Unblock the Notifications









