Nycil Cool Powder-ஐ பைக்கிற்கு பூசிய இளைஞர்... எதுக்குனு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க... வைரல் வீடியோ!

இளைஞர் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தின் இருக்கையின்மீது முகத்திற்கு தடவ பயன்படுத்தப்படும் நைஸில் கூல் பவுடரை கொட்டும் வீடியோக் காட்சிகள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ஏன், இவ்வாறு வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனத்திற்கு இளைஞர் இவ்வாறு பவுடர் பூசிவிட்டார் என்பது பற்றிய சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

சுவாரஷ்யங்களுக்கு சற்றும் தட்டுப்பாடு இல்லாததே இணையம். நாள்தோறும் இணையத்தில் வெவ்வேறு விதமான விநோத சம்பவங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது இணையத்தில் ஓர் வீடியோ மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனம் முழுக்க முகத்திற்கு பூச பயன்படுத்தப்படும் பவுடரை கொட்டும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

Youth uses nycil powder on bike

'எதற்காக இளைஞர் அவ்வாறு செய்தார் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பியிருக்கலாம்?', வெயிலினால் ஏற்படும் அதிக உஷ்னத்தைக் குறைக்கும் பொருட்டே இளைஞர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகின்றது. இந்தியாவில் கோடை வெயில் இப்போதே வெளுத்து வாங்க தொடங்கிவிட்டது. மரங்கள் சூழ்ந்த பகுதியில் அமர்ந்திருந்தாலும், உஷ்ணமான காற்று வீசி மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலில் இருந்து தன்னுடைய டூ-வீலரை பாதுகாக்கும் பொருட்டே அந்த இளைஞர் தன்னுடைய பஜாஜ் பல்சர் பைக்கிற்கு பவுடரை பூசி இருக்கின்றார். வெயிலினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு, தற்காலிக குளிர்ச்சியான உணர்வை வழங்கக் கூடிய பவுடர்களை சில நிறுவனங்கள் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய பவுடரே நைஸில் ஆகும். இந்த பவுடரையே இளைஞர் இருசக்கர வாகனத்தில் கொட்டி இருக்கின்றார். வாகனத்தின் பதிவெண்ணை வைத்து பார்க்கையில் இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் அரங்கேறி இருப்பது தெளிவாக தெரிகின்றது. மேலும், இந்த சம்பவம் செல்லூர் ராஜு சம்பவத்தையே மிஞ்சி விட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

இப்போது அடித்துக் கொண்டிருக்கும் வெயிலில் ஒரு சில நிமிடம் வாகனத்தை நிறுத்திவிட்டு, மீண்டும் அமர்ந்தால், மீண்டும் உட்கார முடியாத அளவிற்கு பின்-பக்கம் பழுத்துவிடும். இந்த உச்சபட்ச வெயிலே இந்தியா முழுவதிலும் காணப்படுகின்றது. இதனை சமாளிக்கும் பொருட்டே குஜராத்தைச் சேர்ந்த இளைஞர் தன்னுடைய பல்சர் பைக்கின்மீது நைஸில் பவுடரை கொட்டி இருக்கின்றார்.

ஆனால், இது விளையாட்டாக செய்யப்பட்ட செயலாகும். இணையத்தில் டிரெண்டாவதற்காக நெட்டிசன்கள் சிலர் விநோத செயலில் ஈடுபடுவதுண்டு. அந்தவகையிலேயே இந்த நபரும் விளையாட்டாக, வெயிலில் இருந்து பைக்கை காக்கும் வழி என கூறி, நைஸில் பவுடரை கொட்டி இருக்கின்றார். இவ்வாறு செய்வதனால் எந்த பலனும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

உங்கள் வாகனத்தை வெயிலில் இருந்து காக்க வேண்டும் என நினைத்தால், அதனை பாதுகாப்பான பார்க்கிங் பகுதியில் நிறுத்துவதே நல்லது. குறிப்பாக, மேற்கூரை இருக்கும் பார்க்கிங்கில் நிறுத்த வேண்டும். இல்லை எனில் மரத்தடி அல்லது அதிகம் நிழல் நிறைந்த பகுதியில் வாகனங்களை நிறுத்தலாம்.

இதன் வாயிலாக மட்டுமே வெயிலிடம் இருந்து வாகனங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். அல்லது வாகன போர்வைகளைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் வாயிலாகவும் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து லேசாக வாகனங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறு செய்வதனால் வாகனத்தின் புது தன்மையின் ஆயுட்காலத்தையும் நீட்டித்துக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதீத வெயிலில் வாகனங்களை நிறுத்துவதனால் அதன் நிறம் விரைவில் மங்கச் செய்துவிடும். குறிப்பாக, சில பாகங்கள் பாதிப்படையவும் செய்யலாம். இவை அனைத்திலும் இருந்து வாகனங்களை பாதுகாக்க வேண்டும் நல்ல பார்க்கிங் ஸ்பேஸ் உங்களுக்கு கட்டாயம் தேவை. அதேவேளையில், சில கெமிக்கல் பூச்சுகளும் வெயிலில் இருந்து வாகனங்களை பாதுகாக்கும் விதமாக விற்பனைக்குக் கிடைக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, April 15, 2023, 17:09 [IST]
English summary
Youth uses nycil powder to protect his bike from the heat
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+