299 கி.மீ வேகத்தில் சீறிப் பாயும் பைக்கை புக் செய்த டிடிஎஃப் வாசன்! விலையை கேட்டா மயக்கமே வந்துடும்!
தமிழகத்தின் மிகப் பிரபலமான மோட்டோலாக் யூடியூபர் டிடிஎஃப் வாசன். இவர் பைக்குகளை ஓட்டி அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர். இவர் அதிவேகமாக பைக்குகளை ஓட்டுகிறார் என்ற சர்ச்சையும் சமீபத்தில் வெளியானது. இவர் மீது போலீசாரும் வழக்குகளை எல்லாம் பதிவு செய்தனர். ஆனால் இன்றைய இளைஞர்கள் சிறுவர்கள் எனப் பலர் இவரது வீடியோக்களை தீவிரமாக ரசிக்கின்றனர்.
இவர் ஒரு வீடியோவை வெளியிட்ட அது மிகப்பெரிய அளவில் டிரெண்டாகிறது. இவர் வெளியிட்ட வீடியோவில் இவர் பைக்குகள் குறித்து அதிகம் பேசியுள்ளார். குறிப்பாக சூப்பர் பைக்குகளை தமிழக இளைஞர்களுக்குப் பெரிய அளவில் அறிமுகப்படுத்தி வைத்ததே இவர் தான் என்று சொல்ல வேண்டும். இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் புதிதாக ஒரு பைக் ஒன்றை புக்கிங் செய்யப்போவதாக அறிவித்து அந்த பைக்கை அவர் புக் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவில் வாங்கப்போகும் பைக் குறித்துத் தேடி வருகின்றனர். அந்த பைக் குறித்துத் தான் விரிவாகக் காணப்போகிறோம்.
அவர் அந்த வீடியோவில் புக்கிங் செய்வதாகச் சொன்ன பைக் சுஸூகி நிறுவனத்தின் ஹயபுஸா ஜென் 3 பைக் தான். இந்த பைக் நீண்ட நாட்களாக மக்களிடம் வரவேற்பைப் பெற்ற பைக் ஆகும். இதில் 3வது தலைமுறை பைக் கடந்த 2021ம் ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகமானது. பழைய பைக்குகளிலிருந்து முழுமையாக மாற்றம் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 1340 சிசி லிக்யூட் கூல் இன்-லைன் 5 சிலிண்டர் இன்ஜினாகும். இது அதிகமான பவர் மற்றும் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த பைக்கின் சேஸிஸ் ரைடரின் போசிஷன் மற்றும் பைக்கின் அதிக பவர் ஆகியவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ரைடர்கள் வேகமாகச் செல்லும் போதும், மெதுவாகச் செல்லும் போதும் கான்ஃபிடென்ஸை வழங்கும் போசிஷனை வழங்குகிறது.
இந்த பைக்கின் முன்பக்கம் எல்இடி ஹெட்லைட், எல்இடி டர்ன் சிக்னல், எல்இடி டெயில் லைட் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இதுபோக ஹெட்லைட்டிற்கு மேலே டூரிங் ஸ்கிரின் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேகமாகச் செல்லும் போது முகத்தில் காற்று அடிக்காத படி இது தடுக்கும். பைக்கின் கண்ணாடியைப் பொருத்தவரை கார்பன் லுக் கவர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் பின்பக்கம் ரைடருக்கான சீட் இருக்கிறது. அது தேவையில்லை என்றால் அதை மூடிக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் டேக்கில் ஹயபுஷா டேங்க் பேட் அமைக்கப்பட்டுள்ளது. இது போக வீல்களில் ரிம்களில் சிவப்பு மற்றும் தங்க நிற சுஸூகி லோகோவுடன் கூடி டீக்கல் வழங்கப்பட்டுள்ளது. ரைடர் சீட்டிற்கும், பின் சீட்டிற்கும் இடையே லக்கேஜ் களை வைத்துக் கட்டிக்கொள்ள லக்கேஜ் கூக் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் பிரேக்குகளை பொருத்தவரை முன்பக்கம் பிரெம்போ ஸ்டைல்மா, 4 பிஸ்டன், ட்வின் டிஸ்க் ஏபிஎஸ் ஆப்ஷன் கொண்ட பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே பின்பக்கம் நிஸ்ஸின், 1 பிஸ்டன், சிங்கிள் டிஸ்க், ஏபிஎஸ் ஆப்ஷன் கொண்ட பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
சஸ்பென்சனை பொருத்தவரை முன்பக்கம் தலைகீழாகப் பொருத்தப்பட்ட டெலஸ்கோபிக் காயில் ஸ்பிரிங், ஆயில் டேம்ப்டு சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் லிங்க் டைப், காயில் ஸ்பிரிங், ஆயில் டேம்ப்டு சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் மொத்தம் 266 கிலோ எடை கொண்டது. 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு கொண்டது. 125மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. 1480 மிமீ வீல் பேஸ் கொண்ட பைக் ஆகும்.
இந்திய பைக்கின் விலையைப் பொருத்தவரை எக்ஸ்ஷோரூம் விலையாக ரூ16.5 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் அதிகபட்சமாக 299 கி.மீ வேகத்தில் சீறி பாயும் அதற்கு மேல் வேகம் செல்லாதபடி அதை செட் செய்து வைத்துள்ளனர். இந்த பைக் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.2 நொடியில் பிக்கப் செய்துவிடும்.
இந்த பைக்கை ஓட்டும் போது ஆக்டிவ், பேசிக், கம்ஃபோர்ட் ஆகிய 3 மோடுகள் உள்ளன. அதில் ஆக்டிவ் மோட் பைக்கின் அதிக திறனைக் காட்டும், பேக் மோட் சாதாரண ஒரு பைக் போலவே செயல்படும். கம்போர்ட் மோட் ஒரு சொகுசு பைக் போலச் செயல்படும் இதில் அதிக வேகமாக எல்லாம் பயணிக்க முடியாது. அதிக வேகம் வேண்டும் என்றால் ஆக்டிவ் மோடில் பயணிக்க வேண்டும். பேசிக் மோடின் முழு வேகத்தைப் பிக்கம் செய்யக் கொஞ்சம் நேரம் பிடிக்கும். ஆக்டிவ் மோடில் விரைவாகப் பிடித்துவிடும்.
இந்த பைக் பல பைக் ரைடர்களின் கனவு பைக் இந்த பைக்கை டிடிஎஃப் வாசன் தற்போது புக் செய்துள்ளார். இந்த பைக்கை அவர் மார்ச் 27ம் தேதிக்கு பிறகு டெலிவரி எடுக்கப்போவதாகத் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த பைக்கை அவர் வாங்கப்போகும் செய்தி தற்போது காட்டுத்தீயாகச் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








