ரூ. 59,999-க்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.. இதை ஓட்ட லைசென்ஸ், வாகன பதிவு என எதுவும் அவசியமில்ல..

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யூலூ தன்னுடைய முதல் பர்சனல் பயன்பாட்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. 'யூலூ வின்' (Yulu Wynn) என்கிற பெயரில் அது விற்பனைக்குக் கிடைக்கும். இந்தியாவின் முதல் ஈசி மொபிலிட்டிய வாகனமாக இந்த எலெக்ட்ரிக் டூ-வீலர் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.

அதாவது, மிக சுலபமான இயக்க அனுபவத்தை வழங்கக் கூடிய வாகனமாக இதனை யூலூ தயாரித்து இருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டியைப் போல் குறைவான எடை, எளிமையான தோற்றம் மற்றும் நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனமாக இதனை யூலூ தயாரித்து இருக்கின்றது.

Yulu wynn front view

அறிமுகமாக யூலூ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 59,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த விலையில் இன்னும் ஒரு சில தினங்களுக்கு மட்டுமே யலூ வின் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு பின்னர் அதன் விலை உயர்த்தப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அதன் பின்னர் ரூ. 64,999-க்கே யூலூ வின் விற்கப்பட இருக்கின்றது. அறிமுகத்தை முன்னிட்டு தற்போது யூலூ வின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் பணிகள் தொடங்கி உள்ளன. ரூ. 999 முன் தொகையின்கீழ் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ஒரு வேளை உங்களுக்கு திடீரென யூலூவை வாங்க விருப்பமில்லை எனில், எந்த நேரத்தில் இந்த புக்கிங்கை ரத்து செய்து கொள்ளலாம்.

Yulu wynn colours

இந்த தொகையை முழுவதுமாக நிறுவனம் திருப்பிக் கொடுத்துவிடும். ஒரு ரூபாய்கூட புக்கிங் ரத்துக்காக கட்டணமாக பிடிக்கப்பட மாட்டாது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் காத்திருப்பிற்கு பின்னரே இந்த எலெக்ட்ரிக் டூ-வீலரை யூலூ நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.

நிறுவனத்தின் நீண்ட கால ஆராய்ச்சியினாலேயே இவ்வாகனத்தை குறைவான விலையில் உருவாக்க முடிந்திருக்கின்றது. அதேவேளையில், இந்தியர்களைக் கவர கூடிய அம்சங்கள் பலவற்றை அதில் யூலூ சேர்த்திருக்கின்றது. மிக முக்கியமாக ஸ்வாப்பபிள் பேட்டரி வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரியை கழட்டி மாட்ட ஒரு நிமிஷம் மட்டுமே போதுமானது ஆகும்.

Yulu wynn side view

இந்த அம்சம் பேட்டரியை எங்கு வைத்து வேண்டுமானாலும் சார்ஜ் செய்துகொள்ள நம்மை அனுமதிக்கும். வீடு, அலுவலகம் என எங்கு வேண்டுமானாலும் யூலூ வின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதுதவிர எக்கசக்க சிறப்பு வசதிகளை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் யூலூ வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், சாவியே இல்லாமல் இ-ஸ்கூட்டரை பயன்படுத்தும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்கூட்டருடன் இணைத்துக் கொள்ளும் விதமாக பிரத்யேக செல்போன் செயலி வழங்கப்பட்டு இருக்கும். இந்த செயலி உடன் இணைக்கும் பட்சத்திலேயே சாவியே இல்லாமல் அதை பயன்படுத்திக் கொள்ள முடியும். அப்படினா வேறு யாரும் இந்த டூ-வீலரை ஓட்ட முடியாதா என நினைத்துக் கொள்ள வேண்டும்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களையும் இந்த டூ-வீலரை இயக்கிக் கொள்ள நம்மால் அனுமதிக்க முடியும். மேலும், இதனை இயக்க லைசன்ஸ், வாகன பதிவு என எந்த முக்கிய ஆவணங்களும் தேவைப்படாது. அதேவேளையில், 16 வயதுக்கு உட்பட்டவர்களாலும் யூலூ வின்-ஐ ஓட்டிக் கொள்ள முடியும். இதுதவிர, மாத சந்தா திட்டத்தின்கீழும் யூலூ வின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்பாட்டிற்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யூலூ வின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் ரேஞ்ஜ் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதநை யூலூ செயலி அல்லது யூலூவின் அதிகாரப்பூர்வ தளத்தின் வாயிலாக வாங்கிக் கொள்ள முடியும். மேலும், இப்போதைய நிலவரப்படி பெங்களூருவில் மட்டுமே இது விற்பனைக்குக் கிடைக்கும். விரைவில் நாட்டின் பிற நகரங்களிலும் அது விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, April 28, 2023, 18:02 [IST]
English summary
Yulu launches wynn at introductory price of rs 55555
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X