சோஹோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு இந்த பைக்கை வாங்கிட்டாரா! பில்லியனர் வாங்கி இருக்கும் இந்த பைக்கை நீங்களும் வாங்கலாம்
சோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓ-வுமான ஸ்ரீதர் வேம்புவை அறியாதவர்களே இருக்க முடியாது. தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து தற்போது உலகளவில் தனக்கென ஓர் தனி சாம்ராஜ்யத்தை இவர் உருவாக்கி இருக்கின்றார். மேலும் உலகளவிலும் அறியப்படும் நபராக அவர் மாறி இருக்கின்றார்.
ஆகையால், இந்திய இளைஞர்கள் பலருக்கு இவரே ரோல் மாடலாக இருக்கின்றார். குறிப்பாக, இளம் தொழில்முனைவோர்களுக்கு இவரே மிக சிறந்த இன்ஸ்பைரேசனும் ஆவார். ஸ்ரீதர் வேம்புவின் தற்போதைய சொத்துமதிப்பு சுமார் 5 பில்லியனுக்கும் அதிகம் என கூறப்படுகின்றது. இத்தகைய பெரும் பணக்காரரான இவர் ஓர் சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அல்ட்ராவைலட் எனும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கையே அவர் வாங்கி இருக்கின்றார். இதை ஸ்ரீதர் வேம்பு டெலிவரி பெறும் புகைப்படமே தற்போது வெளியாகி உள்ளது. அல்ட்ராவைலட் நிறுவனமும் தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைதள பக்கங்கள் வாயிலாக இந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கின்றது.
சமீபத்தில் பிரபல மலையாள திரைப்பட நடிகர் துல்கர் சல்மானும் இந்த பைக்கை டெலிவரி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே ஸ்ரீதர் வேம்பும் இந்த சூப்பரான பைக்கை கையில் பெற்றிருக்கின்றார். இதன் வாயிலாக அல்ட்ராவைலட் எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கிற்கு பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற தொடங்கி இருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது.

துல்கர் சல்மான் டெலிவரி பெற்றது அல்ட்ராவைலட் எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கின் சிறப்பு பதிப்பு ஆகும். அதன் விலை ரூ. 4.5 லட்சத்திற்கும் அதிகம் என கூறப்படுகின்றது. ஆனால், இதன் துள்ளியமான விலை விபரம் அறியப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. அதேவேளையில், இதன் வழக்கமான பதிப்போ ரூ. 3.8 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
சூப்பர் பைக்குகளுக்கு இணையான ஸ்டைலில் இந்த பைக்கை அல்ட்ராவைலட் உருவாக்கி இருக்கின்றது. தோற்றத்திற்கு ஏற்பவே அதன் செயல்பாடும் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கில் மிட் மவுண்டட் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அது 36.2 பிஎச்பி பவரையும், 85 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும்.
மேலும், இந்த பைக்கால் வெறும் 3.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை அசால்டாக தொட்டுவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதுதவிர, 0-100 கிமீ வேகத்தையும் வெறும் 8.3 நொடிகளிலேயே அது எட்டிப்பிடித்துவிடும். மேலும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கி.மீ ஆகும்.
இத்தகைய சூப்பரான திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக்கையே ஸ்ரீதர் வேம்பு தற்போது டெலிவரி பெற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 206 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஆனால், நகர்புற பயன்பாட்டின்போது இதன் ரேஞ்ஜ் 175 கிமீட்டருக்கும் குறைவாகவே இருக்கும்.
இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 7.1 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர இந்த பைக்கில் 5 அங்குல வண்ண டிஎஃப்டி திரையும், முன் பக்கத்தில் 41 மிமீ யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ ஷாக் சன்பென்ஷனும் வழங்கப்பட்டு உள்ளன.
மேலும், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன்பக்கத்தில் 320 மிமீ டிஸ்க்கும், பின்பக்கத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், இந்த பைக்கில் போஷ் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இது கூடுதல் பாதுகாப்பான பிரேக்கிங்கிற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும் வெவ்வேறு வித்தியாசமான ரைடிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக அல்ட்ராவைலட் இந்த இ-பைக்கில் மொத்தம் 3 விதமான ரைடு மோட்களை வழங்கி இருக்கின்றது. அவை, கிளைடு, காம்பேட் மற்றும் பேலிஸ்டிக் ஆகியவையே ஆகும். ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான வேக திறனை வெளியேற்றும். எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கை முழுமையாக சார்ஜ் ஏறதாழ 7-8 மணி நேரம் வரை ஆகும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்ரீதர் வேம்பு இந்திய இளைஞர்கள் பலரின் ரோல் மாடலாக இருந்து வருகின்றார். இவர் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கி இருப்பது அவரை பின் தொடரும் பலரையும் மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின்சார வாகனங்கள் பசுமை இயக்கத்திற்கு மிக முக்கியமான தேர்வாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









