பெட்ரோல் போட்டு முடியலன்னு கஷ்டப்படும் சோமாட்டோ டெலிவரி பாய்ஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ஸிப் எலெக்ட்ரிக் நிறுவனம் சோமாட்டோ நிறுவனத்துடன் கை கோர்த்து 2024ம் ஆண்டிற்குள் 1லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உணவு டெலிவரிக்காக களம் இறக்கவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

உலகம் முழுவதும் கார்பன் ஃபுட் பிரிண்ட்களை குறைக்க உலக நாடுகளும், தனியார் நிறுவனங்களும் இறங்கியுள்ளன. அதிகமான கார்பன் வெளியாவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து கார்பன் வெளியிடாத அல்லது மிகக் குறைவான கார்பன் வெளியாகும் படி தனது பிஸ்னஸ் மாடல்களை மாற்ற வேண்டும் எனப் பல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதில் சோமாட்டோ நிறுவனமும் ஒன்று.

zypp electric partnered with zomato

சோமாட்டோ நிறுவனம், தனது நிறுவனத்தின் டெலிவரியால் ஏற்படும் கார்பனை வரும் 2030ம் ஆண்டிற்குள் 0 ஆக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் கை கோர்த்து இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் நடைமுறையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் தான் ஸிப் எலெக்ட்ரிக் நிறுவனம் சோமாட்டோ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

இந்த நிறுவனங்களின் ஒப்பந்தப்படி வரும் 2024ம் ஆண்டின் முடிவிற்குள் ஸிப் நிறுவனத்தின் 1 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவின் பல்வேறு பகுதியில் சோமாட்டோ டெலிவிரிக்காக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 35 மில்லியன் கிலோ அளவிலோ கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்க முயற்சிக்கிறது. மேலும் தினமும் ஒரு கோடி டெலிவரிகள் இந்த ஸிப் எலெக்ட்ரிக் வாகனம் மூலம் நடக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளது.

zypp electric partnered with zomato

ஸிப் எலெக்ட்ரிக் நிறுவனம் சோமாட்டாே மட்டுமல்ல ஸ்விகி, பிக் பேஸ்கேட், அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸெப்டோ, பிளிங்க்இட் ஆகிய நிறுவனங்களுடன் கை கோர்த்து லாஸ்ட் மைல் டெலிவரிக்காக அதன் வாகனங்களை வழங்கியுள்ளது. கடந்தாண்டு இந்நிறுவனம் அல்ட் மொபிலிட்டி என்ற நிறுவனத்துடன் கை கோர்த்தது.

அதன்படி 15 ஆயிரம் எலெக்ட்ரிக் டூவீலர்கள் அந்நிறுவனத்தின் லாஸ்ட் மைல் டெலிவரிக்காக டில்லி பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் இந்நிறுவனம் தனது வாகனங்களின் எண்ணிக்கையை 3 மடங்களாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு 18 மில்லியன் கிலோ கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்க முடியும் எனத் திட்டமிட்டுள்ளது.

இன்று இந்தியாவில் பெரு நகரங்களில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து விட்ட நிலையில் டெலிவரி தொழிலில் இருக்கும் பலர் லீஸ்களுக்கு டெலிவரி வாகனங்களை எடுக்கும் எண்ணத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்றபடி ஸிப் நிறுவனம் பி2பி லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அக்ரீகேட்டர்களுக்காக லீஸ் முறையில் வாகனங்களை வழங்கி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதற்குப் பல விதமான முயற்சிகள் தேவை, ஸிப் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த வித்தியாசமான முயற்சி நிச்சயம் கவனிக்கதக்கது, அதே நேரத்தில் கார்பன் கட்டுப்பாட்டிற்கும் மிகப்பெரிய உதவியைச் செய்யக்கூடியது. இது போன்ற திட்டங்கள் தொடர வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 26, 2023, 10:10 [IST]
English summary
Zypp electric partnered with zomato to deploy one lakh electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+