குறிச்சு வெச்சிக்கோங்க... இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எங்கே பார்த்தாலும் இருக்க போகுது! டெலிவிரிக்கு இந்த வாகனமே

ஜிப் எலக்ட்ரிக் (Zypp Electric) நிறுவனம் இந்திய மார்கெட்டில் 2027ஆம் ஆண்டிற்குள் 5 இலட்ச எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தங்களது பயன்பாட்டிற்கு கொண்டுவந்து விடுவோம் என தனக்கு தானே டார்க்கெட்டை நிர்ணயித்துக் கொண்டுள்ளது. யார் இந்த ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம்? ஜிப் எலக்ட்ரிக்கின் அடுத்த திட்டங்கள் என்ன என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலக்ட்ரிக் வாகனங்களை சேவைக்காக வழங்கும், தொழிற்நுட்பம்-சார்ந்த நிறுவனம் ஜிப் எலக்ட்ரிக் ஆகும். 2017இல் துவக்கப்பட்ட ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம் மேற்கொள்ளும் முக்கியமான பணி என்னவென்றால், மற்ற கார்ப்பிரேட் நிறுவனங்களின் டெலிவிரி பணிகளை எளிதாக்குவதும், அவற்றின் டெலிவிரி வாகனங்களை எலக்ட்ரிக்காக மாற்றுவதும் ஆகும்.

zypp electric plans to deploy

இதற்காக, தொழிற்நுட்பங்கள் மூலமாக கார்ப்பிரேட் நிறுவனங்களின் டெலிவிரிகளுக்கு பல விதங்களில் ஜிப் எலக்ட்ரிக் உதவி செய்கிறது. இந்த சேவைக்காக அந்த கார்ப்பிரேட் நிறுவனங்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை இந்த நிறுவனம் கட்டணமாக பெற்றுக் கொள்ளும். தனது சேவையின் ஒரு பகுதியாக, கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் லெக்ட்ரிக்ஸ் இவி நிறுவனத்திடம் இருந்து 1 இலட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தனது பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்வதற்காக ஜிப் எலக்ட்ரிக் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், பிரபல உணவு டெலிவிரி நிறுவனமான சொமாடோ உடன் ஜிப் எலக்ட்ரிக் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன்படி, 2024ஆம் ஆண்டு முடிவதற்குள் சுமார் 1 இலட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சொமாடோ நிறுவனத்திற்கு ஜிப் எலக்ட்ரிக் வழங்கவுள்ளது. இந்த நிலையில், ஜிப் எலக்ட்ரிக் நிறுவன துணை நிறுவனரும், சிஇஓ-வுமான ஆகாஷ் குப்தா பிரபல ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

zypp electric plans to deploy

அவர் கூறியதுபடி பார்த்தால், ஜிப் நிறுவனம் 'சாஸ்' (SaaS) என்ற மென்பொருள் நிறுவனத்தின் முழு பங்கை கொண்டுள்ளது. இந்த சாஃப்ட்வேரின் உதவியுடன் தங்களது இவி வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என நம்பிக்கை உடன் தெரிவிக்கும் ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம், இதன் மூலமாக டெலிவிரிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடிகிறது என தெரிவித்துள்ளது. மேலும், தங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவின் எந்தவொரு பகுதியில் இயங்கினாலும் அதனை ஜிப் எலக்ட்ரிக்கால் கண்காணிக்க முடிகிறது.

வாகனத்தை ஓட்டும் பைலட் மற்றும் அவருக்கு டெலிவிரி வேலையை வழங்கும் கூட்டணி நிறுவனத்தின் செயலியை சாஸ் சாஃப்ட்வேர் மூலமாக ஜிப் எலக்ட்ரிக் தனது டேஸ்போர்ட் உடன் ஒருங்கிணைத்து உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த சாஃப்ட்வேரின் மூலமாக ரியல்-டைமில் டெலிவிரி சேவையை ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தால் கண்காணிக்க முடியும் என்பது மட்டுமின்றி, டெலிவிரியின் போது ரைடருக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அதனை பூர்த்தி செய்யவும் முடிகிறது.

zypp electric plans to deploy

ஜிப் எலக்ட்ரிக்கின் டெலிவிரி வாகனங்களில் முக்கியமான அம்சமாக மோட்டார் லாக்கை சொல்லலாம். இது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டும் ரைடருக்கு பாதுகாப்பை வழங்குவது மட்டுமின்றி, டெலிவிரி வாகனங்களை துல்லியமாக கண்காணிக்கவும் தங்களுக்கு வசதியை ஏற்படுத்துவதாகவும் ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தொழிற்நுட்ப அம்சங்களில் பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டமும் அடங்குகிறது.

இந்த பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் ஆனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரியின் நிலையை கண்காணித்து, அதற்கேற்ப செயல்படக்கூடியது ஆகும். அத்துடன், தங்களது சேவையை மேம்படுத்தும் விதமாகவும், பழுது பார்ப்புகளை சரியான நேரத்தில் மேற்கொள்ளும் விதமாகவும், நிர்வாகத்தில் புது, புது கண்டுப்பிடிப்புகளை கண்டுப்பிடிப்பதற்கு உதவியாகவும் இந்த தொழிற்நுட்பங்கள் இருக்கும் என ஜிப் எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிப் எலக்ட்ரிக் ஆனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனம் கிடையாது. வேறொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கி, மற்றொரு டெலிவிரி நிறுவனத்துக்கு பயன்படுத்தும் நிறுவனம். இந்த டெலிவிரி பணிகள் சுமுகமாக அமைய புதிய தொழிற்நுட்பங்களை ஜிப் எலக்ட்ரிக் பயன்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, December 25, 2023, 12:40 [IST]
English summary
Zypp electric plans to deploy 5 lakhs electric scooters by 2027
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X