ஆக்டிவா கொஞ்சம் ஓரமா நில்லு.. சைலண்ட் ஸ்டார்ட் - ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட் வசதியுடன் ஃபஸ்ஸினோ எஸ் அறிமுகம்!

இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டர் மாடலுக்கு போட்டியாக விற்பனையில் உள்ள ஸ்கூட்டர் மாடலே ஃபஸ்ஸினோ (Fascino) ஆகும். யமஹா (Yamaha) நிறுவனத்தின் மிக சிறந்த தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது. இந்த ஸ்கூட்டர் மாடலிலேயே யமஹா நிறுவனம் புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபஸ்ஸினோ எஸ் (Fascino S) எனும் வேரியண்டையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. புதிய தேர்வில் புதிய சிறப்பம் வசதி ஒன்றையும் அது அறிமுகம் செய்திருக்கின்றது.

'திருப்பி பதில் கொடு' (Answer Back) எனும் அம்சத்தையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த அம்சத்துடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஃபஸ்ஸினோ எஸ் வேரியண்டின் விலை மற்றும் பிற முக்கிய சிறப்புகள் பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Yamaha fascino s

யமஹா நிறுவனம், அதன் 'தி கால் ஆஃப் தி ப்ளூ' (The Call of the Blue) எனும் பிரச்சாரத்தின் கீழே ஃபேசினோ எஸ் வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர வேரியண்ட் ஆகும். இதனை மூன்று வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது, யமஹா.

மேட் ரெட் (Matte Red), மேட் பிளாக் (Matte Black) மற்றும் டார்க் மேட் ப்ளூ (Dark Matte Blue) ஆகியவையே அவை ஆகும். இதல் முதல் இரண்டு தேர்வுகளுக்கும் ரூ. 93,730-ம், கடைசி தேர்விற்கு ரூ. 94,530-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

இத்துடன் மிக சிறந்த வசதியாக திருப்பி பதில் கொடு எனும் அம்சத்தை அது இந்த புதிய தேர்வில் வழங்கி இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக அனைத்து இன்டிகேட்டர்களையும் தூரத்தில் இருந்தே ஒளிர முடியும். இதேபோல், ஹாரனையும் ஒலிக்கச் செய்ய முடியும். இரண்டையும், இரண்டு நிமிடங்களுக்கு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேவேளையில், இதற்கு தனியாக செயலியை நாம் தரவிறக்கம் செய்ய வேண்டும். ஆமாங்க, யமஹா செயலி இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும். மேலும், இந்த சிறப்பம்சத்துடன் சேர்த்து சைலண்டாக ஸ்டார்ட்டாகும் வசதி, ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி உள்ளிட்டவையும் யமஹா ஃபஸ்ஸினோவின் இந்த புதிய தேர்வில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதன் வாயிலாக எரிபொருள் பலமடங்கு மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தகுந்தது. யமஹா இந்த அம்சத்தை ஏற்கனவே தன்னுடைய அனைத்து ஹைபிரிட் ஸ்கூட்டர் தேர்வுகளிலும் வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மற்ற ஃபஸ்ஸினோ 125 மாடலில் பொருத்தப்பட்டுள்ள அதே எஞ்சினே இதிலும் பொருத்தப்பட்டு இருக்கின்றது.

125 சிசி ஏர் கூல்டு மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் 8.04 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்சின் பிஎஸ் VI-க்கு இணக்கமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த எஞ்சினில் ஒரு அமைதியான தொடக்கத்தையும், மேம்படுத்தப்பட்ட பவர் அசிஸ்ட் செயல்திறனுக்காகவும் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) எனும் கருவிப் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 5.2 லிட்டர் வரையில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ள முடியும். 99 கிலோ எடையுள்ள இந்த ஸ்கூட்டர் லிட்டர் ஒன்றிற்கு 50 கிமீட்டர் வரையிலான மைலேஜை நம்மால் பெற முடியும். தொடர்ந்து, 21 லிட்டர் வரையிலான பொருட்களை இதில் எடுத்துச் செல்ல முடியும். எனவே தினசரி பயன்பாட்டிற்கு உகந்த ஸ்கூட்டர் மாடலாக இது காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யமஹா ஃபஸ்ஸினோ ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவாவிற்கு மட்டுமல்ல இன்னும் பல ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கின்றது. அந்தவகையில், சுஸுகி பர்க்மேன் 125 (Suzuki Burgman Street 125), டிவிஎஸ் ஜுபிடர் 125 (TVS Jupiter 125) மற்றும் ஹீரோ டெஸ்ட்டினி (Hero Destini 125) ஆகியவற்றிற்கு அது போட்டியாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 10, 2024, 14:18 [IST]
English summary
0yamaha fascino s launched at rs 93730 with advanced features
மேலும்... #yamaha #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+