டிவிஎஸ் பைக்குகளில் இது தனி ரகம்!! மக்கள் அதிகம் வாங்கும் டாப்-10 பைக்குகளில் உங்களது ஃபேவரட் இருக்கா?

இந்தியாவில் கார்களை காட்டிலும் பைக்குகளே அதிகம் விற்பனையாகுபவை என்பது நமக்கு தெரிந்த விஷயம். கடந்த 2024 ஏப்ரல் என்கிற ஒரு மாதத்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றுள், 2024 ஏப்ரலில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பைக் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வழக்கம்போல், கடந்த 2024 ஏப்ரல் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளாக ஹீரோ ஸ்பிளெண்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சுமார் 3 லட்சத்து 20,959 யூனிட்கள் ஹீரோ ஸ்பிளெண்டர் ஆகும்.

10 bikes that sold most

அதாவது, இந்தியாவில் பைக்கை வாங்கும் 3இல் ஒரு கஸ்டமர் நிச்சயமாக ஸ்பிளெண்டர் பைக்கை வாங்குகின்றனர். கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் வெறும் 2 லட்சத்து 65,225 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை ஆனது கிட்டத்தட்ட 21.01%, அதாவது 55,734 யூனிட்கள் அதிகரித்துள்ளது.

ஸ்பிளெண்டருக்கு அடுத்து, இந்த வரிசையில் 2வது இடத்தில் பஜாஜ் பல்சர் உள்ளது. 125சிசி-இல் இருந்து 250சிசி வரையில் பல்வேறு விதமான என்ஜின்களில் பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் புதிய ஆற்றல்மிக்க பல்சர் என்.எஸ்400 இசட் பைக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை சமீப காலமாக கணிசமாக அதிகரித்து வருகிறது.

10 bikes that sold most

2023 ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 15,371 பல்சர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 44,809 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பல்சர் பைக்குகளின் விற்பனை 25.52% அதிகரித்துள்ளது. பல்சர் பைக்குகளின் விற்பனை ஆவது பரவாயில்லை, இதற்கடுத்து இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ள ஹோண்டா ஷைன் பைக்குகளின் விற்பனை ஆனது அதனை காட்டிலும் வெகுவாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெறும் 89,261 ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த 2024 ஏப்ரல் மாதத்தில் சுமார் 1 லட்சத்து 42,751 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஷைன் பைக்குகளை ஹோண்டா கூடுதலாக விற்பனை செய்துள்ளது. விற்பனையில், பல்சருக்கும், ஷைனுக்கும் இடையே வெறும் 2 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

10 bikes that sold most

இந்த வரிசையில் 4வது இடத்தில் விலை குறைவான ஹீரோ பைக்கான எச்.எஃப் டீலக்ஸ் 97,048 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 2023 ஏப்ரலில் 78,700 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 5வது இடத்தை அனைவரையும் ஆச்சிரியமளிக்கும் விதமாக டிவிஎஸ் மோட்டாரின் ரைடர் பிடித்துள்ளது. ஏனெனில், கடந்த ஏப்ரல் மாதத்தில் டிவிஎஸ் ரைடர் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஆனால், 2023 ஏப்ரலில் 31,491 டிவிஎஸ் ரைடர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 6வது மற்றும் 7வது இடங்களில் டிவிஎஸ் அப்பாச்சி மற்றும் பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் உள்ளன. இவற்றின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 45,520 மற்றும் 44,054 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 (29,476), ஹோண்டா யூனிகார்ன் (25,889) மற்றும் ஹீரோ பேஷன் (25,751) உள்ளன.

10 bikes that sold most

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனையை முறியடிக்க இனி புதியதாக ஒரு மோட்டார்சைக்கிள் பிறந்துதான் வரவேண்டும். அந்த அளவிற்கு, மாதத்திற்கு மாதம் ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஹீரோ மோட்டோகார்பின் புதிய 125சிசி பைக்கான எக்ஸ்ட்ரீம் 125ஆர் வரும் மாதங்களில் இந்த வரிசையில் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 21, 2024, 8:00 [IST]
English summary
10 bikes that sold most in april 2024 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X