2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
இந்திய 2-வீலர் மார்க்கெட் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. ஒரு காலத்தில் 1 லட்ச ரூபாய்க்கு பைக் என்றாலே ஆச்சிரியமாக பார்த்த நம் மக்கள் இன்றோ ரூ.2 லட்சம் - ரூ.3 லட்சம் என்றால் கூட தாராளமாக வாங்க ஆரம்பித்துவிட்டனர். அத்தகையவர்களுக்காக ரூ.2.5 லட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய 10 மோட்டார்சைக்கிள்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 (TVS Apache RTR 310): டிவிஎஸ் மோட்டாரின் புத்தம் புதிய அப்பாச்சி பைக் இதுவாகும். ஷார்ப் லைன்களுடன் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.42 லட்சமாக உள்ளது. இந்த பைக்கில் 312சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஹோண்டா சிபி300ஆர் (Honda CB300R): ஹோண்டாவின் லேட்டஸ்ட் நியூ-ஸ்போர்ட்ஸ் கேஃப் ரேஸர் ஸ்டைல் பைக். இந்த பைக்கில் 286சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்கு ட்யூயல்-சேனல் ஏபிஎஸ்-ஐ இந்த பைக்கில் ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது. சிபி300ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.40 லட்சமாக உள்ளது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் (KTM 250 Adventure): கரடு, முரடான ஆஃப்-ரோடுகளுக்கும் கொண்டு செல்லக்கூடிய தரமான கேடிஎம் பைக் இதுவாகும். இதற்காக ஆஃப்-ரோடு ஏபிஎஸ் மோட் வசதி இந்த பைக்கில் கொடுக்கப்படுகிறது. 250 ட்யூக் பைக்கில் பொருத்தப்படும் அதே 248.8சிசி என்ஜின் இந்த பைக்கிலும் பொருத்தப்படுகிறது. 250 அட்வென்ச்சரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.45 லட்சம் ஆகும்.

யமஹா ஆர்15 வி4 (Yamaha R15 V4): இந்தியாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக இருக்கும் பைக். ஏரோடைனாமிக்கிற்கு ஏற்ற டிசைனில், விவிஏ சிஸ்டம் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்படும் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.82 லட்சமாக உள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350): ராயல் என்ஃபீல்டின் மாடர்ன் க்ரூஸர் பைக்காக விளங்கும் இதில் சவுகரியமான ரைடிங் பொசிஷன் கிடைக்கிறது. பயணத்திற்கான வழிக்காட்டும் திரை வசதியை பெற்ற முதல் ராயல் என்ஃபீல்டு பைக்கான இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.03 லட்சமாக தற்சமயம் உள்ளது. இதில் 349சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது.

சுஸுகி ஜிக்ஸெர் எஸ்.எஃப் 250 (Suzuki Gixxer SF250): சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கு பெரியதாக வரவேற்பு இல்லை என்பதை முதலில் கூறியே ஆக வேண்டும். எஸ்.எஃப்250 ஆனது இருப்பதிலேயே விலையுயர்ந்த ஜிக்ஸெர் பைக் ஆகும். ஸ்போர்டியான டிசைனை கொண்ட இந்த பைக்கில் 249சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் இந்த பைக்கில் இடம்பெறுகிறது.

பஜாஜ் டோமினார் 400 (Bajaj Dominar 400): பஜாஜ் ஆட்டோவின் பவர்ஃபுல்லான க்ரூஸர் பைக்காக விளங்கும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.29 லட்சமாக உள்ளது. இந்த பைக்கில் 373.3சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. சுமாரான மைலேஜை வழங்கக்கூடிய இந்த பைக் நீண்ட தொலைவு பயணங்களுக்கு ஏற்றதாக விளங்குகிறது.

ஹீரோ மேவ்ரிக் 440 (Hero Mavrick 440): மாடர்ன் வசதிகளை கொண்ட ரெட்ரோ-ஸ்டைல் பைக் மேவ்ரிக் 440 ஆகும். ஹீரோ மோட்டோகார்பின் லேட்டஸ்ட் பைக் மற்றும் இருப்பதிலேயே விலையுயர்ந்த ஹீரோ பைக். ஆற்றல்மிக்க 441சிசி என்ஜினை கொண்டிருப்பதால், செயல்திறன்மிக்க ஹீரோ பைக்காகவும் மேவ்ரிக் விளங்குகிறது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.99 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

ஜாவா 42 (Jawa 42): மார்க்கெட்டில் பிரபலமான ஜாவா பைக்கான இது அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு மாடர்ன் தரத்தில் விற்பனையில் உள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்படுகின்ற 293சிசி என்ஜின் சிறந்த மைலேஜை வழங்கக்கூடியதாக உள்ளது. ரூ.1.98 லட்சத்தில் இருந்து ஜாவா 42 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் உள்ளன.

கேடிஎம் 200 ட்யூக் (KTM 200 Duke): 2012ஆம் ஆண்டில் கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் பைக் 200 ட்யூக் ஆகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வரும் கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.98 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொலைத்தூர பயணங்களை அவ்வப்போது மேற்கொள்வதற்கு கொஞ்சம் ஆற்றல்மிக்க பைக்குகள் ஏற்றவையாக இருக்கும். அதாவது, மிகவும் விலையுயர்ந்த பைக்காக இல்லாமல், அதேநேரம் மலிவான பைக்காகவும் இல்லாமல் இவ்வாறான பைக்குகள் ஏற்றதாக இருக்கும். அதேபோல், மைலேஜ் அதிகம் கிடைக்கும் என்பதால் இந்த பைக்குகள் அன்றாட பயன்பாட்டிற்கும் சரியானவைகளாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









