பொம்மை பைக் கூட இவ்வளவு விற்பனையாகாது!! ஸ்பிளெண்டர் பைக்குகளில் அப்படி என்ன தான் இருக்கு என்று தெரியலயே!

இந்தியாவில் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 இரு சக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றியும், கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் அவை எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வழக்கம்போல், கடந்த 2024 ஏப்ரல் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனமாக முதலிடத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்பிளெண்டர் பைக்குகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 20,959 ஆகும். அதுவே, 2023 ஏப்ரல் மாதத்தில் 2 லட்சத்து 65,225 ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

10 two wheelers april 2024

இந்த வகையில், ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை ஆனது கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும், இந்த ஆண்டு ஏப்ரலில் 21.01%, அதாவது 55,734 அதிகரித்துள்ளது. இதற்கடுத்து 2வது இடத்தில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 2 லட்சத்து 60,300 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை காட்டிலும் 14,284 யூனிட்கள் குறைவாக 2023 ஏப்ரலில் 2 லட்சத்து 46,016 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

3வது இடத்தை பஜாஜ் பல்சர் தன்வசப்படுத்தி உள்ளது. இந்தியாவில் 125சிசி-இல் இருந்து 250சிசி வரையில் பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த மாதத்தில் 1 லட்சத்து 44,809 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 15,371 பல்சர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 29,438 பல்சர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

10 two wheelers april 2024

4வது இடத்தில் உள்ள ஹோண்டா ஷைன் பைக்கின் விற்பனை சமீப காலங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. 2023 ஏப்ரலில் வெறும் 89,261 ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 42,751 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்படி பார்க்கும்போது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் சுமார் 53,490 ஷைன் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் 5வது இடத்தில், ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் உள்ளது. இந்த விலை குறைவான ஹீரோ பைக் கடந்த மாதத்தில் மொத்தம் 97,048 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் 78,700 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 6வது மற்றும் 7வது இடங்களில் முறையே டிவிஎஸ் ஜூபிட்டர் மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் உள்ளன.

10 two wheelers april 2024

இவை இரண்டும் முறையே கடந்த ஏப்ரல் மாதத்தில் 77,086 மற்றும் 61,960 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரலில் இவை இரண்டும் முறையே 59,583 மற்றும் 52,231 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 8வது இடத்தில், இந்தியாவில் தற்போதைக்கு வேகமாக விற்பனையில் முன்னேற்றம் கண்டுவரும் டிவிஎஸ் ரைடர் உள்ளது.

125சிசி பைக்குகள் பிரிவில் மைலேஜ் மற்றும் ஸ்டைல் என இரண்டையும் எதிர்பார்ப்பவர்களின் முதன்மையான சாய்ஸாக மாறிவரும் டிவிஎஸ் ரைடர் கடந்த மாதத்தில் மொத்தம் 51,098 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2023 ஏப்ரலில் 31,491 ரைடர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 2 இடங்களில் டிவிஎஸ் அப்பாச்சி (45,520) மற்றும் பஜாஜ் பிளாட்டினா (44,054) பைக்குகள் உள்ளன.

10 two wheelers april 2024

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை எப்போதும் உச்சத்தில் இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. ஏற்கனவே கூறியதுபோல், ஹோண்டா ஷைன் பைக்குகளின் விற்பனையும் மாதத்திற்கு மாதம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இவை எல்லாவற்றையும் விட, டிவிஎஸ் ரைடர் சமீப காலமாக மக்கள் அதிகம் பேர் வாங்கக்கூடிய பைக்காக உருவெடுத்து வருகிறது. ஆதலால், வரும் மாதங்களில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கும் இந்த டாப்-10 லிஸ்ட்டில் நுழையலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 18, 2024, 11:56 [IST]
English summary
10 two wheelers that most sold in april 2024 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X