ஸ்ப்ளெண்டர் எல்லாம் ஓரமா போ! 65கிமீ மைலேஜ் தரும் இந்த பைக்கை தான் மக்கள் விரும்பி வாங்குறாங்க!
சமீபகாலமாக 125 சிசி செக்மெண்டில் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த செக்மெண்டில் ஏகப்பட்ட வாகனங்கள் விற்பனையாகி வந்தாலும், கடந்த ஏப்ரல் மாத நிலவரங்களின்படி ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. இதன்படி நாம் இங்கே கடந்த ஏப்ரல் மாதம் 125 சிசி செக்மெண்டில் விற்பனையான வாகனங்கள் குறித்த விபரங்களையும் இதில் ஏன் ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் விற்பனை அதிகமாக இருக்கிறது என்ற விரிவான விபரங்களையும் தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
125 சிசி செக்மெண்டில் உள்ள பைக்குகளின் விற்பனை அதிகரித்து உள்ளது. இதன்படி கடந்த ஏப்ரல் மாத விற்பனை விபரங்கள் வெளியாகி உள்ளன .அதன்படி 125சிசி செக்மெண்டில் மட்டும் மொத்தம் 3,14,385 பைக்குகள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,46,437 பைக்குகள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 67,948 பைக்கள் விற்பனையாகியுள்ளன இது 27.57% வளர்ச்சியாகும்.

இந்த 125 சிசி செக்மெண்டில் தற்போது ஹோண்டா சிபி ஷைன், பஜாஜ் பல்சர், டிவிஎஸ் ரைடர், ஹீரோ ஸ்ப்ளெண்டர், ஆகிய பைக்குகள் விற்பனையாகி வருகின்றன. இந்த பைக்குகள் எல்லாம் சிட்டி பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் நீண்ட தூரம் பயணம் செல்லவும் உதவி வருகிறது. முதல் முறையாக பைக் வாங்கும் பலர் இந்த செக்மெண்டில் தான் தங்கள் பைக்குகளை வாங்குகிறார்கள். இதனால் இந்த செக்மெண்டில் பைக்கில் விற்பனை அதிகரித்துள்ளது.
இருப்பதிலேயே அதிகமாக ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. அதன்படி 1,21,338 பைக்குகள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 89,261 பைக்கில் மட்டுமே விற்பனையா இருந்தது.அதை ஒப்பிடும்போது தற்போது 35.94% விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. ஒரு லட்சம் எண்ணிக்கையை தாண்டி விற்பனையான ஒரே பைக் இதுதான்.

அடுத்ததாக பஜாஜ் பல்சர் பைக்கை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 87,850 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 78,779 பைக்குகள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது 11.52% அளவிற்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பைக் மீதும் இளைஞர்கள் மோகம் கொண்டுள்ளார்கள்.
மூன்றாவது இடத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் ரைடர் பைக் இருக்கிறது. இந்த பைக் கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 51,098 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2023-ம் ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது 62.23 சதவீத அளவிற்கு இதன் விற்பனை என்பது வளர்ச்சி அடைந்துள்ளது. இதை தொடர்ந்து ஹீரோ நிறுவனத்தின் இரண்டு பைக்குகள் இருக்கின்றன அதன் விபரங்களை பார்ப்போம்.
ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் கிளாமர் ஆகிய பைக்குகளும் இதே செக்மெண்டில் சிறப்பான விற்பனையை பெற்று வருகின்றன. அதன்படி ஸ்பிளெண்டர் பைக்கின் விற்பனை என்பது 34.85 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியை சதித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22,595 பைக்குகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 34,681 பைக்குகள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ கிளாமர் பைக்கை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 18,747 பைக்கில் விற்பனையாகி 55.68 சதவீதம் அளவுக்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக் இருக்கிறது. இந்த பைக் மொத்தம் 12,532 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த பைக் கடந்த ஜனவரி மாதம் தான் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
125சிசி செக்மெண்டில் ஹீரோ நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் பைக் இருந்தாலும் அதையெல்லாம் பின்னுக்கு தள்ளி ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் தான் சிறப்பாக விற்பனையாகி வரும் பைக்காக இருக்கிறது. மக்கள் மத்தியில் இந்த பைக்குக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இதன் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்த பைக்கின் மைலேஜ் தான். இந்த பைக் ஒரு லிட்டருக்கு 65 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 125சிசி செக்மெண்டில் இந்தியாவில் முதல் முறையாக பைக் வாங்குபவர்கள் அதிக எண்ணிக்கையில் வாங்குகிறார்கள். இதனால் ஏகப்பட்ட பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இந்த பைக்குகளில் அதிக மைலேஜ் தரும் பைக்குகள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இதனால் இந்த செக்மெண்டில் உள்ள பைக் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக மைலேஜ் கொண்ட பைக்குகளை அறிமுகப்படுத்தினால் நிச்சயம் விற்பனை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








