நிலைமை ரொம்ப மோசமாயிட்டே போகுது! இப்படியே போனா சீக்கிரமே இந்த நிறுவனம் இந்தியாவுக்கு டாடா காமிச்சிருவாங்க!

இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு வரவேற்பு மிக சிறப்பு வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றது. இவ்வாறே நாள் தோறும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த நிலை எல்லா நிறுவனங்களுக்கும் கிடையாது என்பதே இப்போதைய புதிய தகவல் ஆகும். இந்த தகவல் கடந்த ஏப்ரல் மாத இரண்டு சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை புள்ளி விபரங்கள் வாயிலாகவே தற்போது தெரிய வந்திருக்கின்றது.

இந்தியாவில் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் மட்டும் 65,111 மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனி ஆளாக 33,963 யூனிட்டுகள் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இது கடந்த 2023 ஆண் ஆண்டு ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் 53.90 சதவீதம் அதிக விற்பனை ஆகும்.

Okinawa sales dipped 81 60 percentage

நிறுவனம் தொடர்ச்சியாக விற்பனை வளர்ச்சியையே இந்தியாவில் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே சென்ற ஏப்ரல் மாதம் அமைந்திருக்கின்றது. இந்த நிறுவனத்திற்கு அடுத்தபடியாக டிவிஎஸ் நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனம் ஐக்யூப் எனும் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த ஸ்கூட்டர் இரண்டாம் பிடிக்கும் அளவிற்கு விற்பனையை பதிவு செய்திருந்தாலும், அது 2023 ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கை ஆகும். 2023 ஏப்ரல் மாதத்தில் இந்த நிறுவனம் 8,758 யூனிட்டுகள் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

EV sales

ஆனால், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 7,675 யூனிட்டுகள் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே விற்பனையாகி இருக்கின்றது இது 12.37 சதவீதம் விற்பனைச் சரிவாகும். அதேநேரத்தில் இந்திய நிறுவனமான பஜாஜ் ஆட்டோ மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியை 2024 ஏப்ரலில் இந்தியாவில் பதிவு செய்திருக்கின்றது.

இந்த நிறுவனம் சேத்தக் எனும் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது 7529 யூனிட்டுகள் வரை போன மாசம் விற்பனையாகி இருக்கின்றது. அதேநேரத்தில் 2023 ஏப்ரலில் வெறும் 4,093 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

நம்முடைய டிவிஎஸ் நிறுவனத்தைப் போலவே ஏத்தர் எனெர்ஜியும் போன மாசம் விற்பனைச் சரிவையே பதிவு செய்திருக்கின்றது. 47.94 சதவீதம் அது விற்பனைச் சரிவைச் சென்ற மாதத்தில் சந்தித்து இருக்கின்றது. 2023 ஏப்ரலில் 7,802 யூனிட்டுகள் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகிய நிலையில், 2024 ஏப்ரலில் 4,062 யூனிட்டுகள் மட்டுமே அது விற்பனைச் செய்திருக்கின்றது.

இதன் வாயிலாக இந்தியர்கள் கவனம் ஏத்தர் நிறுவனத்தின் மீதிருந்து மற்ற நிறுவனங்கள் மாறி இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தை கிரீவ்ஸ் எலெக்ட்ரிக்-ம், ஆறாவது இடத்தை வார்ட் விசார்டு-ம் மற்றும் எட்டாவது இடத்தை ஹீரோ மோட்டோகார்ப்-ம் பிடித்திருக்கின்றன.

கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் 2024 ஏப்ரலில் 2511 யூனிட்டுகளும் (355.72 சதவீதம் விற்பனை வளர்ச்சி), வார்டு விசார்டு மின்சார டூ-வீலர்கள் 1,205 யூனிட்டுகளும் (308.47 சதவீதம் விற்பனை வளர்ச்சி) ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்கள் 947 யூனிட்டுகளும் (553 சதவீதம் விற்பனை வளர்ச்சி) விற்பனையாகி இருக்கின்றன.

இதுபோன்று ஒரு சில பிராண்டுகள் கணிசமான அளவு விற்பனை வளர்ச்சியையும், கணிசமான அளவு விற்பனைச் சரிவையும் போன ஏப்ரல் மாதத்தில் சந்தித்து இருக்கின்ற இந்த வேளையில், பிரபல ஒகினவா நிறுவனம் மாபெரும் விற்பனைச் சரிவைச் சந்தித்து மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது.

அது 2023 ஏப்ரலில் 3,218 யூனிட்டுகள் வரை எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைச் செய்த நிலையில், 2024 ஏப்ரலில் 592 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. இது 81.60 சதவீதம் விற்பனை வீழ்ச்சியாகும். இதே நிலை இந்த நிறுவனத்திற்கு நீடிக்கும் எனில் இது இந்தியாவை விட்டே வெளியேறும் சூழல் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய தயாரிப்புகளை அதிக சிறப்பம்சங்கள் மற்றும் குறைவான விலையில் ஒகினவா விற்பனைக்குக் கொண்டு வரும் எனில் அது சந்தையை தக்க வைத்துக் கொள்ளக் கூடும். அதாவது, பழைய இடத்தை அது மீண்டும் பிடிக்க நேரிடலாம். ஆனால், சந்தையில் தற்போது மிகப் பெரிய போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஓலா இந்தியர்களின் மனம் கவர்ந்த பிராண்டாக மாறிவிட்டது. ஆகையால், அது கடுமையான போட்டியை சந்திக்கும் என்கிற நிலையே இப்போது தென்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, May 27, 2024, 22:08 [IST]
English summary
2024 april electric two wheeler sales report okinawa sales dipped 81 60 percentage
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+