2024 பஜாஜ் சேத்தக் விற்பனைக்கு அறிமுகம்!.. நம்ம நாட்டோட இந்த தயாரிப்பின் விலை இவ்ளோதானா!

பஜாஜ் (Bajaj) நிறுவனத்தால் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கப்படும் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலே சேத்தக் (Chetak) ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2024 வெர்ஷனே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. கணிசமான அப்டேட்டுகளுடன் அது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இரண்டு விதமான வேரியண்டுகளில் 2024 பஜாஜ் சேத்தக் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. அர்பேன் (Urbane) மற்றும் பிரீமியம் (Premium) ஆகியவையே அவை ஆகும். இதில், அர்பேன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 1 ரூபாக்கும், பிரீமியம் தேர்வு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 463 ரூபாக்கும் விற்பனைச் செய்யப்பட உள்ளது.

2024 Bajaj chetak

இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இவ்வளவு விலைக்கு என்ன காரணம் என நீங்கள் கேட்கலாம். அதிக விலைக்கு ஏற்ப மிக அதிக சிறப்பு வசதிகளையும், தொழில்நுட்ப வசதிகளையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்கி இருக்கின்றது. இந்த முறை 2024 வெர்ஷன் சேத்தக்கில் இன்னும் அதிக வசதிகளைத் தரும் நோக்கில் டெக்பேக் எனும் சிறப்பு தொழில்நுட்பங்கள் அடங்கிய பேக்கினை பஜாஜ் அறிமுகம் செய்திருக்கின்றது.

இதனை வாடிக்கையாளர்கள் ஆன்-லைன் வாயிலாக வாங்கிக் கொள்ள முடியும். இந்த பேக் வாயிலாக டர்ன் -பை- டர்ன் (திருப்பத்திற்கு திருப்பம்) வழித்தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம், மியூசிக் கன்ட்ரோல், கால் அலர்ட் மற்றும் டிஸ்ப்ளே தீம் ஆகியவற்றை பஜாஜ் வழங்க இருக்கின்றது.

Bajaj chetak premium instrument cluster

இதுதவிர, ஹில் ஹோல்டு, ரிவர்ஸ் மோட், ஸ்போர்ட்ஸ் மோட் ஆகிய ரைடிங் மோட்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில், ஸ்போர்ட்ஸ் மோடில் பயணிக்கும்போது அதிகபட்ச வேகமாக மணிக்கு 73 கிமீட்டரும், வழக்கமான மோடில் பயணிக்கும்போது மணிக்கு 63 கிமீ வேகத்திலும் சேத்தக்கில் பயணிக்க முடியும்.

இத்துடன், புதிய வண்ண திரையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தக் கூடிய படங்களே சமீபத்தில் இணையத்தில் கசிந்தன. இந்த நிலையிலேயே பஜாஜ் நிறுவனம் இதனை உறுதிச் செய்திருக்கின்றது. மேலும், பஜாஜின் இந்த டெக்-பேக்கை அர்பேன் தேர்விற்கு மட்டுமே வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.

Bajaj chetak premium front design

இது ஓர் முழு சார்ஜில் 113 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இத்துடன், 650 வாட் ஆஃப்-போர்டு சார்ஜிங் வசதிக் கொண்ட சார்ஜரும் வழங்கப்படும். இந்த சார்ஜிங் கருவியைக் கொண்டு சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 4 மணி நேரம் 50 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாகச் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.

பஜாஜ் சேத்தக் பிரீமியம் ஓர் முழு சார்ஜில் 108 கிமீ ரேஞ்ஜை தரும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ ஆகும். இந்த வாகனத்திலும் இணைப்பு வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், அதற்கு நாம் சந்தாவை பெற வேண்டும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதாகவே பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

பஜாஜ் நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுவரை ஒரு லட்சம் யூனிட்டுகள் வரை பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நாடு முழுவதும் விற்பனையாகி உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இது இப்போது நாடு முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட நகரங்களில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே பஜாஜ் நிறுவனம் அதன் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2024 வெர்ஷனை தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. முந்தைய வெர்ஷனுக்கு கிடைத்ததைப் போலவே இப்புதிய வெர்ஷனுக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 5, 2024, 11:32 [IST]
English summary
2024 bajaj chetak electric scooter launched it will be available in two variants
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X