அண்ணாமலை ரஜினி மாதிரி இந்த தேதியை காலண்டரில் குறித்து வைக்க சொல்லும் பஜாஜ்! அன்று என்ன நடக்கப்போகுது?

பஜாஜ் நிறுவனம் தனது சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்டேட் செய்து வெளியிட தயாராகியுள்ளது. அதன்படி அப்டேட் செய்யப்பட்ட சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி அறிமுகமாகிறது. தற்போது உள்ள சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து புதிதாக அப்டேட் செய்யப்பட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்னென்னவெல்லாம் மாற்றப்பட்டுள்ளன? என்ற விரிவான விபரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.

பஜாஜ் நிறுவனத்தின் ஜேடெக்ஸ் ஸ்கூட்டர் ஒரு காலத்தில் நல்ல பெயர் பெற்ற ஸ்கூட்டராக இருந்தது இந்நிலையில் அந்த பெயரை பயன்படுத்தி நிறுவனம் சேர்த்திருக்கின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வந்தது இந்த ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பற்றி சிறப்பாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இந்த ஸ்கூட்டரை அப்டேட் செய்து வெளியிட நிறுவனம் முடிவு செய்திருந்தது.

2024 bajaj chetak ev launch

அதன்படி அப்டேட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது தயாரான நிலையில் அதை வெளியிட பஜாஜ் நிறுவனம் தயாராகிவிட்டது. அதன்படி வரும் 9ம் தேதி இந்த சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அப்டேட் செய்யப்பட்டு சேர்த்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல கவனிக்கத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக இதன் டிசைன் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய இரண்டிலுமே மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சேத்தக் அர்பனி வேரியன்டை போல சேத்தக் பிரீமியம் வேரியண்ட் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 127 கிலோமீட்டர் ரேஞ்சை ஒரே சார்ஜில் தரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

2024 bajaj chetak ev launch

இது போக புதிய அப்டேட்டாக 2.88 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட வெர்ஷனில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரே சார்ஜில் 113 கிலோ மீட்டர் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக என தெரிகிறது.

நமக்கு கிழக்கு தகவலின் படி புதிய பேட்டரி பேக் கொண்ட முழுமையாக சார்ஜர் 4 மணி நேரம் 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளும் என தெரிகிறது. பெர்ஃபார்மன்ஸ் பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 73 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது. தற்போது உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் 63 கிலோமீட்டர் வேகம்தான் அதிகபட்ச வேகமாக எடுத்து பயணிக்கிறது.

2024 bajaj chetak ev launch

புதிய அப்டேட்டில் மிக முக்கிய அப்டேட்டாக இருப்பது புதிய டிஎஃப்டி ஸ்க்ரீன் தான் பழைய எல்சிடி ஸ்கிரீனை மாற்றி விட்டு புதிய டிஎஃப்டி ஸ்கிரீனை பஜாஜ் நிறுவனம் செய்த கேரக்டர் ஸ்கூட்டரில் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டரில் ஏகப்பட்ட புதிய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிமோட் லாக் மற்றும் அன்லாக், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சீட்டுக்கு அடியில் உள்ள கொள்ளளவை 18 லிட்டரில் இருந்து 21 லிட்டராக மாற்றி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த தகவல் எல்லாம் இதுவரை பஜாஜ் நிறுவனத்தால் உறுதி செய்யப்படவில்லை. ஜனவரி 9ம் தேதி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகத்தின் போது தகவல்கள் எல்லாம் வெளியிடப்படும் அப்பொழுது இது அதிகாரப்பூர்வ தகவலாக இருக்கும். பெரும்பாலும் இந்த அம்சங்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொருத்தவரை இந்தியாவில் தற்போது இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தன் பக்கம் ஈர்க்க அந்நிறுவனம் எடுத்துள்ள முக்கியமான முயற்சியாகும். இதற்கு நல்ல ஒரு ரிசல்ட் கிடைத்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் நல்ல பெயரும் கிடைத்துள்ளது. இதனால் பலர் பஜாஜ் செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் மிகப்பெரியதாக மாறி வருகிறது. ஓலா, ஏத்தர் போன்ற நிறுவனங்கள் எல்லாம் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் பஜாஜ் நிறுவனமும் அந்த இடத்தை விட்டு விடக்கூடாது என்பதற்காக சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான். அதை அப்டேட் செய்வது நல்லது பலரை எதிர்பார்க்க வைத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் சேத்தக் என்ற பெயர் நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த பெயராகும் இந்த பெயரை பயன்படுத்தி பஜாஜ் நிறுவனம் ஒரு சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் அப்டேட்டிற்காக அதன் ரசிகர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள். பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் இன்னும் ஏகப்பட்ட அப்டேட்களை பெற்று சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 1, 2024, 11:00 [IST]
English summary
2024 bajaj chetak ev launch expectations jan 9
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X