பஜாஜ் சேத்தக் பிரிமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ல இவ்வளவு அப்டேட்டா? வீடியோ ரிவியூ!

பஜாஜ் நிறுவனம் சேத்தக் என்ற பிரபலமான பெயரை தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வைத்து கடந்த 2019-ம் ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. இந்த பெயருக்காகவே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகப்பெரிய பிரபலமானது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாள நிலையில் தற்போது நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதால் இதை அப்டேட் செய்ய முடிவு செய்தது.

அதன்படி பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்டேட் செய்து 2024 சேத்தக் பிரிமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்க்க பெங்களூருக்கு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவை பஜாஜ் சேத்தக் நிறுவனம் அழைத்திருந்தது. அதன் பெயரில் எங்கள் குழு இந்த ஸ்கூட்டரை பெங்களூருவில் உள்ள சாலைகளில் ஓட்டிப் பார்த்தது. அதை நாங்கள் வீடியோ விமர்சனமாக வழங்கியுள்ளோம். அதை நீங்கள் கீழே காணலாம்.

பழைய சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலிருந்து சேத்தக் பிரிமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏகப்பட்ட விஷயங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக பவர்டெரையின் டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் சொகுசான சீட் அதன் லுக் எல்லாம் அப்படியே இருக்கிறது. வாடிக்கையாளர்கள் பிரச்சினையாக சொன்ன விஷயங்கள் மட்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2024 bajaj chetak premium electric scooter

இந்த ஸ்கூட்டரில் 3.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது. ஒரு தடவை சார்ஜ் செய்தால் சுமார் 126 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 73 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 1.53 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 16, 2024, 10:24 [IST]
English summary
2024 bajaj chetak premium electric scooter video review in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+