எதை வாங்குவது? ஒரே குழப்பமா இருக்கே... கம்மியான விலையில் புது பஜாஜ் பல்சர் பைக்குகள்!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் புதிய 2024 பல்சர் என்250 மற்றும் எஃப்250 பைக்குகளை ஒன்றன்பின் ஒன்றாக சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு பைக்குகளில் ஒரே மாதிரியான என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. என்ஜினை தாண்டி, இந்த பல்சர் 250 பைக்குகளுக்கு இடையேயான ஒற்றுமைகளை இனி பார்க்கலாம்.

பல்சர் பைக்குகளுக்கு அறிமுகமே தேவையில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு பல்சர் பைக்குகள் நாடு முழுவதும் பிரபலமாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை பற்றி தெரியாதவர்கள் கூட பஜாஜ் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் பல்சர் பைக்குகளை பற்றி அறிந்து வைத்துள்ளனர்.

pulsar n250 and f250 similarities

பல்சர் பைக்குகளிலேயே விலைமிக்கதாக பல்சர் என்.எஸ்400 இசட் பைக் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கின் அறிமுகத்திற்கு முன்பு வரையில், பல்சர் 250சிசி பைக்குகள் விலைமிக்கவையாக இருந்தன. 250சிசி-இல் பல்சர் என்250 மற்றும் எஃப்250 என இரு பைக்குகள் 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பல்சர் 250 பைக்குகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது.

2024 பல்சர் என்250 பைக் சில வாரங்களுக்கு முன்னரே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2024 பல்சர் எஃப்250 தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. 2024 பல்சர் என்250 பைக்கை போல், 2024 பல்சர் எஃப்250 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையும் ரூ.1.51 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இரண்டையும் ஒரே விலையில் வாங்கலாம்.

pulsar n250 and f250 similarities

விலையை போல், இந்த பைக்குகளில் ஒரே மாதிரியான அப்கிரேட்களே கொண்டுவரப்பட்டு உள்ளன. செமி-ஃபேயிரிங் மோட்டார்சைக்கிளான எஃப்250 பைக்கில் 2024ஆம் ஆண்டிற்கான முக்கியமான அப்டேட்டாக கிளிப்-ஆன் ஹேண்டில்பார்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், என்250 பைக்கில் இத்தகைய ஹேண்டில்பார்ஸ் கொடுக்கப்படவில்லை. ஆதலால், இந்த இரு பல்சர் 250 பைக்குகளை வேறுப்படுத்தி காட்டுவதில் ஹேண்டில்பார்ஸ் முக்கியமானதாக விளங்குகிறது.

எஃப்250 பைக்கில் புதிய ஹேண்டில்பார்ஸ் உடன் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், எல்இடி விளக்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்விட்ச் கியர் உள்ளிட்டவை பயணத்தை இன்னும் சவுகரியமானதாக மாற்றும் வகையில் அப்கிரேட்களாக கொடுக்கப்பட்டுள்ளன. 2024 பல்சர் என்250 பைக்கில் வழங்கப்பட்டுள்ள முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையை 2024 எஃப்250 பைக்கிலும் பெறலாம்.

pulsar n250 and f250 similarities

ப்ளூடூத் மூலம் இணைக்கக்கூடிய இந்த திரையின் மூலமாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் மொபைல் போன் செயலியின் உதவிகளை பெறலாம். அட்வான்ஸான ஹேண்டில்பார்ஸை பெற்றாலும், என்250 பைக்கில் வழங்கப்படும் யுஎஸ்டி ஃபோர்க்குகள் எஃப்250 பைக்கில் வழங்கப்படவில்லை. 2024 பல்சர் எஃப்250 பைக்கில் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

என்250 பைக்கில் யுஎஸ்டி ஃபோர்க்குகள் கோல்டு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 2024 எஃப்250 பைக்கில் ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் மழை, சாலை & ஆஃப்-ரோடு என 3 ரைடிங் மோட்கள் என்று பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த தொழிற்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 2024 பல்சர் எஃப்250 பைக்கில் பெரிய அளவிலான பெடல் டிஸ்க்குகள் மற்றும் அகலமான டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

pulsar n250 and f250 similarities

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையை ஒரே அளவில் நிர்ணயிக்க, 2024 பல்சர் என்250 மற்றும் எஃப்250 பைக்குகளில் தொழிற்நுட்ப அம்சங்களில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது, என்250 பைக்கில் கிடைக்காத சில அம்சங்கள் எஃப்250 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், சில வசதிகளை என்250 பைக்கில் மட்டுமே பெற முடியும். இருப்பினும், பெரும்பான்மையான பாகங்களில் இவை இரண்டும் ஒரே மாதிரியானவைகளாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, May 20, 2024, 23:41 [IST]
English summary
2024 bajaj pular n250 and f250 similarities check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X