புது பல்சர் பைக் வேற லெவல்!! கம்மியான விலையில் 250சிசி-இல்... ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் பல்சர் பைக்காக சமீபத்தில் என்.எஸ்400 இசட் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு வரையில் பல்சர் 250 பைக்குகள் விலைமிக்கவையாக இருந்தன. 250சிசி பல்சர் பைக்குகளுள் ஒன்று பல்சர் என்250 ஆகும்.
பல்சர் என்250 பைக்கை சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அப்டேட் செய்து இருந்தது. புதிய பல்சர் என்250 பைக்கை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. நாங்கள் அப்போது பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு, இந்த புதிய பல்சர் பைக்கை பற்றிய எங்களது ரிவியூவை வழங்கியுள்ளோம். அதனை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.
ஏற்கனவே விற்பனையில் இருந்த பல்சர் என்250 பைக்கிற்கும், புதிய 2024 பல்சர் என்250 பைக்கிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. பைக்கின் கிராஃபிக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. கஸ்டமர்களை கவர இவ்வாறு பைக்குகளின் டிசைன் கிராஃபிக்ஸ் அவ்வப்போது மாற்றப்படுவது வழக்கமான ஒன்றே. பல்சர் என்250 பைக்கில் பைக்கின் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு கோல்டு நிறத்தில் யுஎஸ்டி ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய பல்சர் என்250 பைக்கில் ரைடருக்கு தகவல்களை வழங்கும் எல்சிடி திரையிலும் சில அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மற்றப்படி, என்ஜின் சிஸ்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்250 மற்றும் எஃப்250 பைக்குகளில் 249சிசி ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. 2024 பஜாஜ் பல்சர் என்250 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.51 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








