தங்க நிற யுஎஸ்டி ஃபோர்க் உடன் விற்பனைக்கு வந்திருக்கும் பல்சர் என்250.. இவ்ளோ கம்மி விலையில் இந்த அம்சத்துடனா!

பஜாஜ் பல்சர் 250 (Bajaj Pulsar N250) பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கின் விலை மற்றும் அதில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

2024 பஜாஜ் பல்சர் என்250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கிற்கு அறிமுகமாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 829 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

Bajaj pulsar n250

2024 பஜாஜ் பல்சர் என்250 மாடலைக் காட்டிலும் வெறும் ரூ. 1,829 மட்டுமே அதிக விலையில் இந்த பைக் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விலை உயர்விற்கு அப்டேட்டே காரணம் என கூறப்படுகின்றது. அப்படி என்ன அப்டேட்டுகள் இந்த பைக் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

முந்தைய வெர்ஷன் பல்சர் என்250 மாடலில் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் 2024 பல்சர் என்250 மாடலில் அதே 37 மிமீ அளவுள்ள யுஎஸ்டி ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், புதிதாக மூன்று வண்ண தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

Bajaj pulsar n250 engine

வெள்ளை, சிவப்ப மற்றும் கருப்பு ஆகியவையே அவை ஆகும். இதில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற தேர்வுகளில் தங்க நிற யுஎஸ்டி ஃபோர்க்கே வழங்கப்பட்டு இருக்கும். அத்துடன், சில்வர் நிறத்தால் அதன் எஞ்சின் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இதேபோல், எக்சாஸ்ட் மஃப்ளரும் இதே சில்வர் நிறத்தாலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

அதேவேளையில், கருப்பு நற ஆப்ஷனில் அனைத்தும் கருப்பு நிறத்தாலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதேவேளையில், குறிப்பிட்ட சில அணிகலன்கள் மட்டும் சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். சிவப்பு நிறத்தை எஞ்சின் குவார்டு, ஹெட்லைட், ஃப்யூவல் டேங்க் உள்ளிட்ட முக்கிய அணிகலன்களில் நம்மால் பார்க்க முடியும்.

Bajaj pulsar n250 fuel tank

இதைத்தொடர்ந்து இந்த பைக்கில் புதிய எல்சிடி திரையையும் பஜாஜ் வழங்கி இருக்கின்றது. பல்சர் என்150 மற்றும் பல்சர் என்160 ஆகிய மாடல்களிலும் இதே திரையே வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ப்ளூடூத் இணைப்பு, செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தி, அழைப்புகளைக் காணும் வசதி பல்வேறு சிறப்புகளை உள்ளிடக்கியதே பல்சர் என்250 ஆகும்.

இதுதவிர, நேவிகேஷனை இந்த திரை வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை இது வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஸ்பீடோ மீட்டர், ஓடோமீட்டர், ஃப்யூவல் லெவர் மற்றும் மைலேஜ் விபரங்கள் போன்ற தகவலையும் இந்த திரை வழங்கும். இத்துடன், பைக்கின் சுவிட்ச் கியர்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.

Bajaj pulsar n250 intrument cluster

மேலும், அதிக பாதுகாப்பான ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக புதிய பல்சர் என்250 பைக்கில் மூன்று மோட்கள் கொண்ட ஏபிஎஸ் சிஸ்டத்தை பல்சர் வழங்கி இருக்கின்றது. மழை, ரோடு மற்றும் ஆஃப்-ரோடு ஆகிய மோட்கள் கொண்ட ஏபிஎஸ் சிஸ்டமே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிராக்சன் கன்ட்ரோலும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆஃப் செய்துக் கொள்ள முடியும் என பஜாஜ் தெரிவித்து இருக்கின்றது. ஆனால், ஆஃப்-ரோடு பயணத்தின்போது மட்டுமே அதை செய்ய முடியும். எஞ்சினைப் பொருத்த வரை 249 சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 24.5 பிஎச்பி பவரை 8,750 ஆர்பிஎம்மிலும், 21.5 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Bajaj pulsar n250 rear wheel cluster

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பஜாஜ் பல்சர் பைக்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே 2024 பல்சர் என்250 மாடலை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் இப்போது கிடைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிக வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 10, 2024, 14:00 [IST]
English summary
2024 bajaj pulsar n250 launched in india with usd fork
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X