கலர், சஸ்பென்ஷன் எல்லாமே மாறிடுச்சு!! பல்சர் பைக்கில் பஜாஜ் நிறைய வொர்க் பண்ணி இருக்கு!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) அதன் என்250 பைக்கை மேம்படுத்தி சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு முன் விற்பனையில் இருந்த பழைய பல்சர் என்250 பைக் உடன் ஒப்பிடுகையில் புதிய மாடல் எந்த அளவிற்கு சிறப்பானது என்பதை ஒவ்வொரு பிரிவு வாரியாக இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

கலர் ஆப்ஷன்ஸ் (Colour Options): 2024 பஜாஜ் பல்சர் என்250 பைக் மொத்தம் 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ப்ரூக்ளின் பிளாக், பளபளப்பான ரேசிங் சிவப்பு மற்றும் பேர்ல் மெட்டாலிக் வெள்ளை என்பன அந்த 3 பெயிண்ட் ஆப்ஷன்கள் ஆகும். இதில், ரேசிங் சிவப்பு மற்றும் ப்ரூக்ளின் கருப்பு பெயிண்ட் ஆப்ஷன்கள் மட்டுமே பழைய என்250 பைக்கில் இருந்து அப்படியே கொண்டுவரப்பட்டுள்ளன.

2024 n250 vs old n250

மற்றப்படி, பழைய என்250 பைக்கில் வழங்கப்பட்டுவந்த கரீபியன் நீலம் மற்றும் டெக்னோ கிரே பெயிண்ட் ஆப்ஷன்கள் நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளன. பெயிண்ட் ஆப்ஷன்கள் திருத்தப்பட்டு இருப்பதற்கு ஏற்ப பைக்கில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களின் டிசைனும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோல் டேங்கில் தடிமனான எழுத்துகளில் '250' ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்பம்: 2024 பல்சர் என்250 பைக்கில் முதல்முறையாக ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சாலை, மழை மற்றும் ஆஃப்-ரோடு என 3 வெவ்வேறு விதமான ஏபிஎஸ் லெவல்களும் புதிய என்250 பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹேண்டில்பாரின் இடது பக்கத்தில் இருக்கும் பொத்தான் மூலமாக இந்த மோட்களை ரைடர் மாற்றிக் கொள்ளலாம்.

இவற்றுடன், புதிய டிஎஃப்டி டிஸ்பிளேவையும் 2024 பல்சர் என்250 பைக் பெற்றுள்ளது. பல்சர் என்150 மற்றும் என்160 பைக்குகளில் வழங்கப்பட்டு வந்த இந்த டிஸ்பிளேவை தற்போது என்250 பைக்கிலும் பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ப்ளூடூத் இணைப்பு வசதியை கொண்ட இந்த டிஎஃப்டி டிஸ்பிளே மூலமாக மொபைல் போன் நோட்டிஃபிகேஷன்ஸ் மற்றும் நேவிகேஷனை பெறலாம்.

சஸ்பென்ஷன்ஸ்: 2024 பல்சர் என்250 பைக்கில் பஜாஜ் நிறுவனம் கொண்டுவந்துள்ள மிக முக்கிய அப்டேட் புதிய 37மிமீ தலைக்கீழான ஃபோர்க் சஸ்பென்ஷன் ஆகும். அதுவே, பழைய என்250 பைக்கில் 37மிமீ-இல் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு கொடுக்கப்பட்டு இருந்தன. இதன் மூலமாக, பல்சர் என்250 பைக் பார்ப்பதற்கு ஸ்டைலிஷானதாக மாறியிருப்பது மட்டுமின்றி, பைக் ஹேண்ட்லிங்கும் சிறப்பானதாக கிடைக்கும்.

2024 n250 vs old n250

ரிம்கள் & டயர்கள்: பெட்டர் ஹேண்ட்லிங்கிற்காக அப்டேட் செய்யப்பட்ட பல்சர் என்250 பைக்கில் 10மிமீ கூடுதல் அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்படி, புதிய என்250 பைக்கில் முன் சக்கரத்தில் 110/70-17 அளவுள்ள டயரும், பின் சக்கரத்தில் 140/70-17 அளவுள்ள டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

அதுவே, பழைய பல்சர் என்250 பைக்கில் 100/70-17 அளவுள்ள டயர் முன்பக்கத்திலும், 130/70-17 அளவுள்ள டயர் பின் சக்கரத்திலும் பொருத்தப்பட்டு வந்தன. ஏற்கனவே கூறியதுபோல், அகலமான டயர்கள் 2024 பல்சர் என்250 பைக்கில் சிறந்த பிடிமானத்தை வழங்கும். குறிப்பாக, வளைவுகளில் திரும்பும்போது அகலமான டயர்கள் பெரிதும் உதவியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்கின் தோற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், பயணிகளின் பாதுகாப்பு விஷயத்திலும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இதன் விளைவாகவே, 3 ஏபிஎஸ் ரைடிங் லெவல்களை பல்சர் என்250 பைக் பெற்றுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் திரையை ப்ளுடூத் உடன் இணைக்கும் வசதியும் நாம் எதிர்பார்த்ததை போல் புதிய பல்சர் என்250 பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 13, 2024, 8:00 [IST]
English summary
2024 bajaj pulsar n250 vs old pulsar n250 check full comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+