இம்பூட்டு அழகாவா ரெடி பண்ணியிருக்காங்க!.. மண பெண்ணை போல சீவி, சிங்காரிச்சு கொண்டாந்திருக்காங்க!
பஜாஜ் (Bajaj) நிறுவனம் அதன் 2024 பல்சர் என்எஸ்200 (Pulsar NS200) பைக்கை வெளியீடு செய்து உள்ளது. அட்டகாசமான ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்களைக் கொண்டதாக புதிய பல்சர் என்எஸ் 200 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கின் படங்களே தற்போது முழுமையாக வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பஜாஜ் நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் மாடல்களில் ஒன்றாக பல்சர் என்எஸ்200 இருக்கின்றது. இந்த பைக்கின் 2024 வெர்ஷனே விரைவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதை முன்னிட்டே சமீப சில நாட்களாக 2024 என்எஸ் 200 பைக்கின் டீசர் படங்களை பஜாஜ் அவ்வப்போது வெளியீடு செய்த வண்ணம் இருக்கின்றது.

அந்தவகையில், கடந்த சில நாட்களாக அங்கம் அங்கமாக அந்த பைக்கின் படங்கள் வெளியீடு செய்யப்பட்டு வந்தநிலையில், தற்போது முழுமையாக அந்த பைக்கின் படம் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக என்ன மாதிரியான அப்டேட்டுடன் பல்சர் என்எஸ்200 விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது என்பது தெரிய வந்திருக்கின்றது.
மிக முக்கியமாக இந்த பைக்கின் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை மாற்றப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ஸ்விட்ச் கியர், கண்ணாடிகள் உள்ளிட்டவையும் மாற்றியமைக்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, முக்கிய அம்சங்கள் அனைத்தும் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு புதிய பல்சரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதில் வழங்கப்பட்டு இருக்கும் எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்டது. இதில் மிக சிறந்த அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக பஜாஜ் அதன் பஜாஜ் ரைடு கன்னெக்ட் செயலியையும் இணைத்திருக்கின்றது. இதன் வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்பு யாரிடம் இருந்து வருகின்றது, குறுஞ்செய்தி, பேட்டரியின் ஹெல்த் மற்றும் திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை அறிந்துக் கொள்தல் என ஏகப்பட்ட அம்சங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
சிறப்பம்சங்கள் விஷயத்தில் மட்டுமில்லைங்க இந்த பைக்கின் வெளிப்புறத் தோற்றத்தையும் புதியதாக பிரதிபலிக்கச் செய்கின்ற வகையில் பல்வேறு மாற்றங்களை பஜாஜ் செய்திருக்கின்றது. இதன் அடிப்படையில் புதிய கிராஃபிக்குகள் இந்த பைக்கில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், புதிய வண்ண ஆப்ஷனும் இந்த பைக்கில் வழங்கப்பட இருக்கின்றது.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 199.5 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் லிக்யூடு கூல்டு, ட்ரிபிள் ஸ்பார்க், 4 வால்வுகள் கொண்ட எஃப்ஐ டிடிஎஸ்ஐ எஞ்சின் ஆகும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 24.5 பிஎஸ் பவரையும், 18.74 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய திறன் மற்றும் சிறப்பு வசதிகளைத் தாங்கிய பல்சர் என்எஸ் 200 பைக்கையே வெகு விரைவில் பஜாஜ் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது ரூ. 1.49 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதன் விலைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதன் விலை அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த நாளை எதிர் நோக்கியே இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்கள் பலர் காத்துக் கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக, பல்சர் விரும்பிகள் பலர் தவமிருக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல்சர் பைக்குகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இதன் பக்கம் கூடுதல் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு 2024 பல்சர் என்எஸ் 200 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் பஜாஜ் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









