வயதானவர்களுக்கு ஏற்ற ஸ்கூட்டர்... ஹீரோ மோட்டோகார்ப் தயாரிப்பில் குறையே சொல்ல முடியாது!!
ஹீரோ டெஸ்டினி 125 (Hero Destini 125), ஹீரோ மோட்டோகார்பின் புதிய மாடர்ன் 125சிசி ஸ்கூட்டர். மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்கூட்டர் ஆனது பழைய டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் இருந்து முற்றிலுமாக வேறுப்பட்டதாக உள்ளது. தோற்றம், தொழிற்நுட்ப அம்சங்கள் என என்ஜினை தவிர்த்து நிறைய விஷயங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. அதாவது, ஸ்கூட்டரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், 2024 டெஸ்டினி 125 ஸ்கூட்டரை பற்றிய விபரங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏற்கனவே வெளியீடு செய்துவிட்டது.
இந்த நிலையில், நமது டிரைவ்ஸ்பார்க் குழு கோவாவில் 2024 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரை ஓட்டி பார்த்தது. அப்போது இந்த ஸ்கூட்டரை பற்றி நிறைய விஷயங்களை நாங்கள் தெரிந்துக் கொண்டோம். அவற்றை ரிவியூவாக வழங்கி உள்ளோம். அவற்றை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.
இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக ஹீரோ டெஸ்டினி 125 விளங்குகிறது. 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா ஆக்டிவாவிற்கு நேரெதிர் போட்டியாக ஹீரோ டெஸ்டினி உள்ளது. ஆனால், சமீப காலமாக இந்த ஸ்கூட்டரின் விற்பனை பெரிய அளவில் இல்லாததை அடுத்து, டெஸ்டினியை அப்டேட் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் தயாராகியது.

அதன்படி, ஸ்கூட்டர் அப்டேட் செய்யப்பட்டுவிட்டது; இன்னும் விலைகள் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டும். 2018ஆம் ஆண்டில் முதன்முதலாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர் கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பிறகு பெறும் முக்கியமான அப்டேட்டாக இது பார்க்கப்படுகிறது. புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.95 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








