இந்த நிற தேர்வுக்காகவே எல்லாரும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கை வாங்கி குவிக்க போறாங்க! விலையும் இவ்ளோதானா!!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் 2024 எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி (2024 Edition Xtreme 160R 4V) பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 500 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். காஸ்மெட்டிக் மற்றும் சிறப்பம்சங்களில் லேசாக அப்டேட் செய்யப்பட்டே இந்த பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. மேலும், ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.
புதிதாக கெவ்ளர் பிரவுன் (Kevlar Brown)) எனும் நிறம் 2024 எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி-யில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த புதிய நிற தேர்வு மற்ற நிற தேர்வுகளைக் காட்டிலும் அதிக ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இதற்கேற்ப அதன் தனித்துவமான கிராஃபிக்குகள் உள்ளன.

மேலும், இந்த புதிய நிற தேர்வுடன் சேர்த்து ஏற்கனவே விற்பனையில் இருந்த நியான் ஷூட்டிங் ஸ்டார் (Neon Shooting Star) மற்றும் ஸ்டீல்த் பிளாக் (Stealth Black) ஆகிய நிற தேர்வுகளிலும் புதிய எக்ஸ்ட்ரீம் 160 ஆர் விற்பனைக்கு கிடைக்கும். முன்னதாக பார்த்த மாற்றங்களைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் 2024 வெர்ஷனில் ஹீரோ செய்யவில்லை.
குறிப்பாக, யுஎஸ்டி ஃபோர்க், இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என பல அம்சங்கள் அப்படியே வழங்கப்பட்டு இருக்கின்றன. அதேவேளையில், புதிய வெர்ஷனில் ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கையே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இருப்பினும், அதன் ஸ்போர்ட்டி லுக்கில் எந்த குறைச்சலும் ஏற்படவில்லை.

பின்னால் அமர்ந்து பயணிப்பவரின் வசதிக்காக ஒற்றை துண்டு இருக்கை வழங்கப்பட்டு இருக்கின்றது. முன்னதாக ஸ்பிளிட் செய்யப்பட்ட இருக்கையே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து இந்த பைக்கில் முன்னதாக பயன்படுத்தப்பட்டிருந்த அதே 17 அங்குல வீலே இப்போதும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
மேலும், டிராக் ரேஸ் டைமர் மற்றும் ஆக்சலரேஷனை ரெக்கார்ட் செய்யும் வசதி ஆகியவற்றுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, அவசர கால பிரேக்கிங் வசதியும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது சடென் பிரேக்குகளின்போது இன்டிகேட்டர்களை வேகமாக ஒளிரச் செய்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை வழங்கும்.
இதுபோன்று இன்னும் பல பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய பைக்காகவே 2024 எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த பைக்கில் 163.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 16.6 பிஎச்பி பவரையும், 14.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
5 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டி இருக்கின்றது. இதன் வருகை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் ஹோண்டா ஹார்னெட் 2.0 ஆகியவற்றிற்கு மிகப் பெரிய போட்டியாக அமைந்திருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் இந்த பைக் மாடல்களின் விற்பனையில் லேசான தொய்வு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய பிரபல 160 சிசி திறன் கொண்ட பைக் மாடலான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி-யை அது புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. வரும் பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களை இந்த பைக் வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஹீரோ நிறுவனம் விற்பனை வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க இந்த பைக் பெரும் உதவியாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








