1.7 லட்ச ரூபாக்கு ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் பைக்கா.. ஹோண்டா சம்பவம் பண்ணுறதுக்கான முடிச்ச போட்ருச்சு!

முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா (Honda), இந்தியாவில் அதன் முதல் 300 சிசி திறன் கொண்ட ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் (Flex Fuel) மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. சிபி300எஃப் (CB300F) ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மோட்டார்சைக்கிளையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுவே இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் 300சிசி ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பைக் மாடலும்கூட. இந்த பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 1.70 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பைக்கில் ஹோண்டா நிறுவனம் 293.52 சிசி ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சினையே பயன்படுத்தி இருக்கின்றது. இ85 ரக எரிபொருளில் இயங்கும் வகையில் தயார் செய்யப்பட்ட ஓர் மோட்டாரே இதுவாகும். அதாவது,15 சதவீத பெட்ரோல் மற்றும் 85 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளில் இயங்கக் கூடிய ஓர் மோட்டாரே இதுவாகும்.

Honda cb300ff flex fuel motorcycle launches

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18.3 kW மற்றும் 25.9 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இந்த மோட்டார் உடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இணைக்கப்பட்டு உள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் அம்சம் கொண்ட ஓர் கியர்பாக்ஸே இதுவாகும். வழக்கமாக பெட்ரோல் இயங்கும்போது வெளிப்படுத்துவதைக் காட்டிலும் சற்றே அதிக ஆற்றலையே ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும்போது இந்த எஞ்சின் வெளியேற்றுகின்றது.

உதாரணமாக, சிபி300எஃப் டிஎல்எக்ஸ் ப்ரோ அதிகபட்சமாக 18 kW பவர் மற்றும் 256 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் ஹோண்டா சிபி300எஃப் பைக்கில் பலதரப்பட்ட சிறப்பம்சங்களை ஹோண்டா வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும் அனைத்தும் எல்இடி தரத்திலானவையாக இருக்கின்றன.

Honda cb300f flex fuel

இத்துடன், ரம்மியமான ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த பைக்கின் பின் பக்கத்தில் 5 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் மோனோ-ஷாக்கும், முன் பக்கத்தில் தங்க நிறத்தாலான யுஎஸ்டி ஃபோர்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஹோண்டாவின் செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் அம்சமும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், சிறந்த பிரேக்கிங் சிஸ்டத்தை வழங்கும் பொருட்டு இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. முன் பக்க வீலில் 276 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 220 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் வழங்கப்பட்டு கொடுக்கப்பட்டு உள்ளது.

வண்ண தேர்வை பொருத்த வரை இரண்டு விதமான ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. ஸ்போர்ட்ஸ் ரெட் (Sports Red) மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் (Mat Axis Grey Metallic) ஆகியவையே அவை ஆகும். இந்த பைக்கில் முக்கியமான ஓர் அங்கமாக முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருக்கின்றது.

இதன் பிரைட்னஸ் அளவை ஐந்து லெவல்களில் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும். இதுதவிர இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களையும், முக்கிய தகவல்களையும் வழங்கும் வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், கியரின் லெவல் தொடங்கி நேரம் வரையிலான தகவலை இந்த திரை வழங்கும்.

இத்துடன், 85 சதவீதத்திற்கும் அதிகமான எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் வாகனத்தில் நிரப்பப்படும் எனில் அதுகுறித்த எச்சரிக்கையையும் இந்த வாகனம் அளிக்கும். இதற்காக பிரத்யேக இன்டலிஜென்ட் எத்தனால் இன்டிகேட்டர் (Honda's Selectable Torque Control) எனும் அம்சம் ஒன்று இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், ரூ. 1.70 லட்சம் என்கிற விலையில் இந்த பைக் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருப்பதால் இந்தியர்கள் மத்தியில் சிபி300எஃப் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்கப்படுகின்றது. இந்த பைக்கை பிக்விங் டீலர் வாயிலாகவே ஹோண்டா விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. புக்கிங் பணிகள்கூட ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டது. இதன் டெலிவரி பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகனத்தை பயன்படுத்துவதனால் காற்றில் கலக்கும் அதிகப்படியான காற்று மாசுபாட்டைக் கணிசமான அளவு குறைக்க முடியும். இதன் காரணமாகவே இந்த வகை வாகனங்களுக்கு அரசும், வாகன உற்பத்தி நிறுவனங்களும் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, October 21, 2024, 10:32 [IST]
English summary
2024 honda cb300f flex fuel motorcycle launches at rs 1 7 lakh promising eco friendly performance
மேலும்... #honda motorcycle #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+