உலகம் முழுவதும் 350 பேர் தான் இந்த பைக்கை வாங்க முடியும்! விலையை கேட்டா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது 2024 ரோடு மாஸ்டர் எலைட் என்ற பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் லிமிடெட் எடிஷன் பைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வெறும் 350 பைக்குகள் மட்டுமே தயாராகி விற்பனைக்கு அறிமுகமாகிறது. அதில் இந்தியர்களும் இந்த பைக்கை வாங்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். இந்த பைக் ரூபாய் 71.82 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அமெரிக்காவின் முதல் பைக் கம்பெனியாக இந்தியன் மோட்டார் சைக்கிள் கம்பெனி இருக்கிறது. இந்நிறுவனம் சொகுசு டூரிங் ரக பைக்குகளை தயாரிக்கும் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. தற்போது அந்நிறுவனம் தனது ரோடு மாஸ்டர் எலைட் என்ற லிமிடெட் எடிஷன் பைக்கை சர்வதேச அளவில் தயாரித்துள்ளது. இந்த பைக்கை தற்போது இந்தியாவிற்கும் இந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

2024 Indian Roadmaster Elite launched

இது ஒரு லிமிடெட் எடிஷன் பைக் என்பதால் உலகம் முழுவதும் வெறும் 350 பைக்குகள் மட்டுமே தயாராகிறது. இந்த பைக் இந்தியாவிற்கும் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 3 டோன் பெயிண்ட் ஸ்கீமில் அறிமுகமாகிறது. இதில் பேஸ் கலராக சிவப்பு கலரும், கருப்பு நிற ஹைலைட் கான்ட்ராஸ்ட்டாக வழங்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் இருக்கிறது.

இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள கேண்டி ரெட் என்ற பெயிண்ட் ஸ்கீம் 1904ம் ஆண்டு இந்தியன் மோட்டார் சைக்கிள் சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக இந்த கலர் ஸ்கிம்மை நிறுவனம் தனது பைக்கில் பொருத்தியுள்ளது. இதுபோக மூன்றாவது கலராக தங்க நிற கலர் கொண்டு இந்த பைக்கின் லோகோ மற்றும் லெட்டரிங் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளன.

2024 Indian Roadmaster Elite launched

இந்த பைக்கில் பத்து ஸ்போக் கொண்ட டைமெண்ட் கட் அலாய் அளவில் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த பைக்கை பார்ப்பதற்கு வித்தியாசமான லுக்கை கொடுக்கும் வகையில் இருக்கிறது. தூரத்திலிருந்து பார்க்கும் போதும் இந்த பைக்கின் கவனத்தை இந்த ஸ்போக் வீல் இருக்கிறது. இதுபோக இந்த பைக்கில் ஏகப்பட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் வியக்கும் வகையில் இருக்கின்றது.

முக்கியமாக இந்த பைக்கில் எல்இடி லைட் பொருத்தப்பட்டுள்ளது இதுபோக டிஎஃப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார் பிளேவை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஹீட்டர் மற்றும் கோல்ட் சீட் ஆப்ஷன்களும் உள்ளன. இந்த பைக்கில் 12 ஸ்பீக்கர்கள் உள்ளது. இதற்காக 600 வாட் மியூசிக் சிஸ்டமும் இணைக்கப்பட்டுள்ளது.

இது பைக்கின் இன்ஜினை பொறுத்தவரை 1800 சிசி தண்டர் ஸ்ட்ரோக் 116 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஏர் கூல்டு இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வி-ட்வின் ரக இன்ஜினாக இருக்கிறது. இந்த இன்ஜின் 120 பிஎச்பி பவரையும் 170 என்எம்ம் டார்க் திறணையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் நேரடியாக 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்த பைக் ஒரு மிட்-ரேஞ்ச் பெர்ஃபார்மென்ஸ் தரும் பைக்காக இருக்கிறது. முக்கியமாக டூரிங் பயன்பாடுக்காக இந்த பைக் சிறப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சிறப்பு அம்சமே இதில் வழங்கப்பட்டுள்ள பெயிண்டிங் தான். இந்த பெயிண்டிங்கை சிரமப்பட்டு இந்த பைக்கை தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் செய்து வருகிறார்கள். ஒரு பைக்கின் பெயிண்டிங் முடிக்க 24 மணி நேரம் வரை தேவைப்படும் என இதை பெயிண்ட் செய்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பைக்குகள் என்றாலே வசதிகள் அதிகமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்த பைக்கில் அதிக சொகுசு வசதி கொண்டிருக்கும் வகையில் இந்த பைக்கை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. டிரெடிஷனல் டிசைனில், மார்டன் தொழில்நுட்பத்தை உட்பகுதியில் இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் ரைடிங் அனுபவம் சிறப்பாக இருக்கும். இப்படியான அனுபவத்தை வேறு எந்த பைக்கிலும் பெற முடியாத வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அமெரிக்காவில் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அமெரிக்காவிலேயே மிகப்பெரிய மவுசு இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பை லிமிடெட் எடிஷனாக அறிமுகப்படுத்தி அதை இந்தியாவிற்கும் கொண்டு வந்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்தியாவில் இந்த பைக்கை யாராவது வாங்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 2, 2024, 13:08 [IST]
English summary
2024 indian roadmaster elite launched india rs 71 82 lakh
மேலும்... #indian motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+