விலையை ஏத்தாம அப்டேட் வெர்ஷனை விற்பனைக்கு கொண்டு வரதுலாம் பெரிய விஷயம்.. பத்து வருஷமா விலை ஏறாமலே கிடைக்குதா!
கவாஸாகி (Kawasaki) நிறுவனம் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட 2024 எடிசன் நிஞ்சா 300 (2024 Ninja 300) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை எந்தவொரு விலை ஏற்றமும் செய்யாமல் விற்பனைக்குக் கொண்டு வந்து இருக்கின்றது. இது மற்ற வாகன உற்பத்தியாளர்களுக்கும், இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், புதிய மாற்றங்கள் சிலவற்றைச் செய்திருக்கின்றது. இதனால்தான் பலருக்கு கவாஸாகியின் இந்த செயல் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
புதிய மாற்றமாக கலர் மாற்றத்தையே செய்து இருக்கின்றது. ஆமாங்க, இரண்டு புதிய நிறத் தேர்வுகளை இந்த பைக் மாடலில் கவாஸாகி அறிமுகம் செய்திருக்கின்றது. கேன்டீ லைம் கிரீன் (Candy Lime Green) மற்றும் மெட்டாலிக் மூன் டஸ்ட் கிரே (Metallic Moondust Gray) ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.

இந்த புதிய வண்ணங்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ள வண்ண தேர்வுகளுடன் சேர்ந்து விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு இந்தியாவில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால், ஸ்போர்ட்ஸ் கார் விரும்பிகள் மத்தியிலேயே இந்த பைக் மாடலுக்கு சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டுள்ளது.
இந்த மாதிரியான சூழலிலேயே விலை ஏற்றம் செய்யப்படாமல் அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. கவாஸாகி நிறுவனம் நிஞ்சா 300 பைக்கை முதன்முதலில் 2013 ஆம் ஆண்டிலேயே அது விற்பனைக்குக் கொண்டு வந்தது. இது விற்பனைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகின்றன.
இத்தனை ஆண்டுகள் சந்தையில் நிலைத்துக் கொண்டிருப்பதே, இந்த பைக்கிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்றாக உள்ளது. இந்த இந்தியாவில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது அதன் விலை ரூ. 3.50 லட்சம் ஆகும். ஆனால், இப்போதோ அதன் விலை ரூ. 3.43 லட்சம் மட்டுமே ஆகும்.
இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பெரும்பாலும் வாகன உற்பத்தியாளர்கள் ஆண்டுகள் போக போக விலையை ஏற்ற மட்டுமே செய்யும். ஆனால், இந்த நிறுவனம் விலை குறைத்திருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் பத்து ஆண்டுகளாக விலை ஏற்றமே இல்லாமல், மாறாக விலையைக் குறைத்து கவாஸாகி நிஞ்சா 300 பைக் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்தியர்களை தன் வசம் கவர வேண்டும், விற்பனையில் மற்ற நிறுவனங்களைப் போல ஜொலிக்க வேண்டும் என்பதே இதற்கான காரணம் ஆகும். கவாஸாகி நிஞ்சா 300 பைக்கில் 296 சிசி பாரல்லல் ட்வின், லிக்யூடு கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 38.88 பிஎச்பி பவரையும், 26.1 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இது அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகிய அம்சங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலம், மிக சிறந்த ரைடு அனுபவத்திற்காக இந்த பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், மிக சிறந்த பிரக்கிங் வசதிக்காக இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், டூயல் சேனல் ஏபிஎஸ்-ம் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. கவாஸாகி நிஞ்சா 300 பைக்கின் வருகை கேடிஎம் ஆர்சி 390, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310, யமஹா ஆர்3 மற்றும் அப்ரில்லா ஆர்எஸ் 457 ஆகிய பைக் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கவாஸாகி நிஞ்சா 300 விற்பனைக்கு வந்திருப்பது, குறிப்பாக, விலை ஏறாமலேயே விற்பனைக்கு வந்திருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. எனவே வரும் நாட்களில் இதற்கு வரவேற்பு இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








