பழைய மாடலைவிட 9ஆயிரம் ரூபா மட்டுமே அதிகம்.. ஆனா 30 ஆயிரம் ரூபா சம்பளம் வாங்குறவங்களால இந்த பைக்க வாங்க இயலாது!

உலக புகழ்பெற்ற பிரீமியம் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி (Kawasaki), இந்தியாவில் அதன் அப்டேட் செய்யப்பட்ட இசட்900 (Z900) பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. உலக அளவில் இரண்டு சக்கர வாகன காதலர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கவாஸாகி பைக் மாடல்களில் இசட்900-ம் ஒன்றாகும்.

இந்தியாவிலும் கணிசமான அளவு நல்ல வரவேற்பு இந்த பைக்கிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பணக்கார இளைஞர்களே இந்த பைக்கை விரும்பி வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதன் அதீத விலை காரணமாக அவர்களுக்கு மட்டுமே எட்டும் கனியாக இருக்கின்றது. ரூ. 10 லட்சம் விலைக் கொண்டதே இசட்900 ஆகும்.

Kawasaki z900

தலைநகர் டெல்லியில் இதன் துள்ளியமான எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 9.29 லட்சம் ஆகும். இது முந்தைய மாடலைக் காட்டிலும் வெறும் 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகம் ஆகும். ஆமாங்க, அப்டேட் செய்யப்படாத கவாஸாகி இசட்900 ரூ. 9.20 லட்சம் என்கிற விலையில் விற்கப்பட்டது.

இந்த நிலையிலேயே அப்டேட் செய்யப்பட்ட இசட்900 மாடலை வெறும் 9 ஆயிரம் ரூபாய் கூடுதல் கவாஸாகி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதேவேளையில் பெயரளவில் மட்டுமே இந்த பைக்கில் அது அப்டேட்டுகளை செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. மெக்கானிக்கல் அம்சங்கள், சிறப்பம்சங்கள், ஹார்ட்வேர் மற்றும் பல விஷயங்களில் புதிய வெர்ஷன் மற்றும் பழைய வெர்ஷன் இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

Kawasaki z900 light

2024 கவாஸாகி இசட்900 பைக்கில் இரண்டு விதமான வண்ண தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அவை மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் (Metallic Spark Black) மற்றும் மெட்டாலிக் மேட் கிரஃபேன் ஸ்டீல் கிரே (Metallic Matte Graphene Steel Grey) ஆகும். கவர்ச்சியான தோற்றத்திற்கு சற்றும் குறைச்சலில்லாத ஓர் பைக் மாடலே இசட்900 ஆகும்.

இதன் அழகிற்கு பிளஸ்ஸாக பைக்கில் உள்ள சிங்கிள் பாட் எல்இடி ஹெட்லைட், கட்டுமஸ்தான ஃப்யூவல் டேங்க், ஸ்பிளிட் வகை இருக்கை, மிகவும் முரட்டுத் தனமான பாடி பேனல்கள் ஆகியவை உள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தும் பைக்கின் கவனத்தை திருப்பும் வகையில் உள்ளன.

Kawasaki z900 rear wheel

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த பைக் சாலையில் சென்றால் கட்டாயம் சாலையில் உள்ள அனைவரும் இந்த பைக்கை திரும்பி பார்ப்பது நிச்சயம். இத்தகைய தரமான பைக்காகவே கவாஸாகி இசட்900 காட்சியளிக்கின்றது. இந்த பைக்கில் 948 சிசி இன்லைன் 4 சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சினையே கவாஸாகி பயன்படுத்தி இருக்கின்றது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 123.6 பிஎச்பி பவரையும், 98.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. டிரெல்லிஸ் ஃப்ரேமைக் கொண்டே இந்த பைக்கை கவாஸாக கட்டமைத்திருக்கின்றது. மேலும், சிறந்த இயக்க அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த பைக்கின் முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Kawasaki z900 buttons

இதேபோல், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவற்றுடன் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் 300 மிமீ அளவுள்ள டிஸ்க் இரண்டும், பின் பக்க வீலில் 250 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ்-ஸும் வழங்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, டிராக்சன் கன்ட்ரோல், பவர் மோட், ரைடிங் மோட், முழு எல்இடி லைட்டுகள் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஎஃப்டி திரை ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அப்டேட் இசட்900 பைக்கின் வருகையால், டுகாட்டி மான்ஸ்டர், பிஎம்டபிள்யூ எஃப்900ஆர் மற்றும் டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ரேஞ்ஜ் ஆகிய பைக்குகளுக்கு மிகப் பெரிய போட்டியாக அமைந்திருக்கின்றது.

Kawasaki z900 display

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கவாஸாகி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கணிசமான அளவிலேயே வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், அது மிகப் பெரிய போராட்டாங்களுக்கு மத்தியிலேயே நாட்டில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பெரும் செல்வந்தர்கள் மத்தியில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைப்பதனாலேயே இது இப்போதும் இந்தியாவில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 22, 2024, 10:46 [IST]
English summary
2024 kawasaki z900 bike launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X