யமஹா எம்டி03 மாடலில் புதிய நிற தேர்வுகள் அறிமுகம்! இதுக்காகவே இந்தியர்கள் குவிய போறாங்க! விலையையும் ஏத்தலையாம்

யமஹா (Yamaha) நிறுவனம் அதன் புகழ்பெற்ற பைக் மாடல்களான எம்டி 03 (MT-03) மற்றும் எம்டி 25 (MT-25) ஆகிய இரண்டையும் புதிய வண்ண தேர்வுகளுடன் அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக அளவிலேயே இந்த பைக் மாடல்களில் புதிய வண்ண தேர்வுகளை யமஹா அறிமுகம் செய்து உள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் யமஹா நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே எம்டி 03 மற்றும் ஒய்இசட்எஃப்-ஆர்3 (YZF-R3) ஆகிய இரண்டு பைக் மாடல்களையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ஆனால், எம்டி-25 இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையிலேயே அது எம்டி 03 மற்றும் எம்டி 25 ஆகிய இந்த இரண்டு பைக் மாடல்களையும் புதிய வண்ண தேர்வுகளுடன் உலக சந்தைக்காக அது அப்டேட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Yamaha mt-03 amp amp mt-25 new colours

குறிப்பு: படம் உதாரணத்திற்காக வழங்கப்பட்டது. எனவே இந்தியாவில் அந்த புதிய வண்ண தேர்வுடன் எம்டி-03 விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. எம்டி-03 பைக் மாடலில் டார்க் ப்ளூயிஷ் கிரே மெட்டாலிக் (Dark Bluish Gray Metallic), டீப் பர்ப்லிஷ் ப்ளூ மெட்டாலிக் (Deep Purplish Blue Metallic) மற்றும் டார்க் மேட் கிரே மெட்டாலிக் (Dark Matte Gray Metallic) வண்ண விருப்பங்களை வழங்குகிறது.

எம்டி-25 மாடலிலும் இதே வண்ணத் தேர்வுகளே வழங்கப்படுகின்றன. இந்த புதிய நிற தேவ்ருகளினால் பைக்கின் விலை அதிகரித்திரகுக்குமோ என அஞ்ச வேண்டாம். அதன் விலையில் எந்த மாற்றத்தையும் யமஹா செய்யவில்லை. இந்தியாவில் எம்டி-25 எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

அதேவேளையில், எம்டி-03 விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய வண்ண தேர்வுகள் இந்தியாவில் 2024 ஜூலை 30 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. யமஹா நிறுவனம் எம்டி-03 மற்றும் எம்டி-25 இரண்டையும் ஒரே சேஸ் மற்றும் ஒரே வடிவமைப்பு தத்துவத்தைக் கொண்டே தயார் செய்திருக்கின்றது.

ஆகையால், லுக்கில் இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதேவேளையில், எஞ்சின் விஷயத்தில் மட்டும் இரண்டிற்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் நிலவுகின்றது. அந்தவகையில், எம்டி-03 பைக்கில் 41.4 பிஎச்பி மற்றும் 29.5 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் 321 சிசி லிக்யூடு கூல்டு டிஓஎச்சி (DOHC) எஞ்சினே பொருத்தப்பட்டுள்ளது.

6 ஸ்பீடு கியர்பாக்ஸே ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் அம்சத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த பைக் தற்போது மிட்நைட் பிளாக் மற்றும் மிட்நைட் சியான் ஆகிய நிற தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. எம்டி-25 இது ஓர் சிறிய எஞ்சின் கொண்ட பைக் மாடல் ஆகும்.

இதில் 249 சிசி பாரல்லல் ட்வின் டிஓஎச்சி 4V திரவ-குளிரூட்டப்பட்ட எஞ்சினே வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 35 பிஎச்பி பவரையும், 22.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எம்டி-03 மற்றும் எம்டி-25 இந்த இரண்டும் ரோபோட்டைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது.

எல்இடி ஹெட்லைட், எல்இடி இண்டிகேட்டர்கள், கவுல் பொருத்தப்பட்ட ஓஆர்விஎம் (பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடி)-கள், கவர்ச்சியான கைப்பிடிகள், செதுக்கப்பட்ட தோற்றம் கொண்ட ஃப்யூவல் டேங்க், இரண்டு துண்டு அமைப்புடைய இருக்கைகள் உள்ளிட்டவற்றாலேயே இந்த பைக் மாடல்கள் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. மேலும், இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வாயிலாக எரிபொருள் அளவு, கியரின் நிலை, நிகழ்நேர மற்றும் சராசரி எரிபொருள் சிக்கனம், பயண மீட்டர், கடிகாரம் போன்ற பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்டி வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய வண்ண தேர்வின் வாயிலாக ஈர்க்கும் பொருட்டு யமஹா நிறுவனம் புதிய வண்ண தேர்வுகளை எம்டி-03 மாடலில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 26, 2024, 23:44 [IST]
English summary
2024 models of yamaha mt 03 and mt 25 motorcycles get fresh colours
மேலும்... #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+