ஆக்டிவா எல்லாம் பழைய காலம்! இந்த ஸ்கூட்டரை இனி எல்லாரும் வாங்க போறாங்க! இதுல என்ன இருக்குது!
சுஸூகி நிறுவனம் தனது அவெனீஸ் 125 ஸ்கூட்டரை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை அந்நிறுவனம் அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்கூட்டரில் புதிய கலர் ஆப்ஷன்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதுபோக இந்த ஸ்கூட்டரில் என்னென்ன அப்டேட்கள் எல்லாம் கொண்டுவரப்பட்டுள்ளன? இது ஸ்கூட்டர் என்ன விலைக்கு அறிமுகமாகியுள்ளது? இதிலுள்ள அம்சங்கள் என்ன? என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சுஸூகி நிறுவனம் தனது அவெனீஸ் 125 என்ற ஸ்கூட்டரை கடந்த 2022ம் ஆண்டு முதல் முறையாக இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பெயரை வரவேற்ப்பை பெற்றது. சுஸூகி நிறுவனத்தின் ஆக்செஸ் மற்றும் பர்க்மென் ஸ்கூட்டர்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சுஸூகி நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகும் ஸ்கூட்டராக இருக்கிறது.

புதிய கலர் ஆப்ஷனாக கிளாஸி ஸ்பார்க்கிள் பிளாக் /பியர்ல் மிரா ரெட், சேம்பியன் எல்லோ நம்பர் 2/ கிளாஸி ஸ்பார்க்கிள் பிளாக், கிளாஸி ஸ்பார்க்கிள் பிளாக்/ பியர்ஸ் கிளேஸியர் ஒயிட் ஆகிய கலர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் ஜென்ஸி மற்றும் இளம் தலைமுறை அதிகம் ஈர்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கலர்கள் எல்லாம் அவர்களை அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டு அந்த கலர்களில் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வடிவமைப்பு ஸ்போர்ட்டியாகவும், போட்டி நிறுவனங்களின் தயாரிப்புக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது0 ஸ்டாண்டர்ட் எடிசன் ஸ்கூட்டரில் வெளிப்புறம் பெட்ரோல் நிரப்பும் பகுதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுலபமாக பெட்ரோலை நிரப்பி கொள்ள முடியும். இதுபோக சீட்டுக்கு அடியில் 21.8 லிட்டர் ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்கூட்டரில் ஸ்போர்ட்டியான ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கம் இன்டிகேட்டர்கள் போல அமைக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட் மற்றும் பின்பக்க லைட்டுகள் எல்இடி லைட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இது ஸ்கூட்டருக்கு ஸ்போர்ட்டியான லுக்கை கொடுக்கிறது. ப்ளோர் போர்டு பகுதி அதிக இட வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. ஹேண்டில் பார் சற்று உயரமாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த ஸ்கூட்டரின் சீட் பகுதி ஸ்டெப் வடிவில் வழங்கப்பட்டுள்ளது. அதனால் ஓட்டுநருக்கு போதுமான இட வசதி கிடைக்கிறது. பின்பக்கம் இருப்பவர்கள் சற்று உயரமான இடத்தில் அமர்வது போன்ற வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரை கையாள்வது சுலபமாக இருக்கும். ஒட்டு மொத்தத்தில் இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பு இளைஞர்களை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் ப்ளூடூத் உடன் கூடிய டிஜிட்டல் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக முன்பக்க பாக்ஸில் யூஎஸ்பி சாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சைட் ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் இன்ஜின் ஸ்டார்ட் ஆகாத தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது இதுபோக இன்ஜின் கில் ஸ்விட்ச் மற்றும் முன்பக்கத்தில் 12இன்ச், பின்பக்கத்தில் 10 இன்ச் கொண்ட அலய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆவெனீஸ் ஸ்கூட்டரில் ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் உள்ள அதே சஸ்பென்ஷன் பிரேம் மற்றும் வீல் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் உரிமையாளர் தனது செல்போன் மூலம் சுஸூகி ரைட் கனெக்ட் ஆப்பை இணைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கால் அலர்ட், எஸ்எம்எஸ் அலாட், வாட்ஸப் மெசேஜ் அலாட் உள்ளிட்ட அம்சங்களும் அதிக வேகமாக செல்லும்போது வார்னிங்கும், போன் பேட்டரி அளவு மற்றும் பயண நேரம் குறித்த விபரங்களையும் பெற முடியும்.
இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜினை பொறுத்தவரையில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 8.5 பிஎச்பி பவரையும் 10 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரை விட சற்று கீழான பொசிஷனல் விற்பனைக்கு வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸூகி நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பிருக்கிறது. இது இந்நிலையில் நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்கூட்டர் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படுவதால் இளைஞர்கள் பலர் இந்த கூட்டத்தை வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இன்று 2010ம் ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்கள் பலர் இந்த ஸ்கூட்டரை விரும்ப துவங்கி விட்டார்கள்.


Click it and Unblock the Notifications









