1 இல்ல 2 ஹெல்மெட்டகூட வைக்கலாம்.. அசத்தலான வசதிகளுடன் வந்திருக்கும் டிவிஎஸ் ஜுபிடர் 110.. இதோ டாப் 5 தகவல்!

கொஞ்சம் நாட்களாகவே டீசர் படமா வெளியிட்டு இந்திய வாகன உலகை பரபரப்பான நிலையிலேயே வைத்திருந்த டிவிஎஸ் (TVS) நிறுவனம், நேற்று (ஆகஸ்டு 22) இறுதியாக அதன் புதுப்பிக்கப்பட்ட ஜுபிடர் 110 (Jupiter 110) ஸ்கூட்டர் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. முன்பு விற்பனையில் இருந்ததைக் காட்டிலும் முற்றிலும் அழகான மற்றும் மாறுபட்ட தோற்றத்தில் ஜுபிடர் 110 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. அதுமட்டுமில்லைங்க பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய ஸ்கூட்டர் மாடலாகவும் இதனை தற்போது டிவிஎஸ் தயார் செய்திருக்கின்றது.

ஆகையால், இரண்டு சக்கர வாகன காதலர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய டூ-வீலராக டிவிஎஸ் ஜுபிடர் 110 மாறி இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன? மற்றும் புதிய ஜுபிடர் 110 ஸ்கூட்டரின் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Tvs jupiter 110 top things

டிசைன்: மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட ஸ்கூட்டர் மாடலாக புதிய 2024 ஜுபிடர் 110 காட்சியளிக்கின்றது. இதன் புதிய தோற்றத்திற்காக பெரிய எல்இடி டிஆர்எல் லைட் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதிலேயே திருப்பத்தை சிக்னல் செய்யக் கூடிய இன்டிகேட்டர்களும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த இரண்டும் சேர்ந்தே புதிய ஜுபிடர் 110-க்கு மாடர்ன் லுக்கை வழங்குகின்றன. இதுமட்டுமில்லைங்க, இதன் பாடி பேனல்களும் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஆகையால், இது பார்க்க டிவிஎஸ்-இன் புதிய தயாரிப்பைப் போல காட்சியளிக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இதன் இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ் அளவும் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இரண்டு அரை முக ஹெல்மெட்டுகளை வைத்துக் கொள்வதற்கான இட வசதி தற்போது ஜுபிடர் 110 ஸ்கூட்டரில் கிடைத்திருக்கின்றது. ஆனால், முழு முக ஹெல்மெட்டை 2 வைப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும் என தெரிகின்றது. 33 லிட்டர் ஸ்டோரேஜையே அது கொண்டிருக்கின்றது.

புதிய தொழில்நுட்பம்: ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் திரை இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை திருப்பத்திற்கு திருப்பம் வழித்தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதிக் கொண்டது. இதுதவிர, செல்போனுக்கு வரும் அழைப்பு, நோடிஃபிகேஷன் ஆகியவற்றையும் அறிய முடியும்.

இத்துடன் வாய்ஸ் அசிஸ்ட் அம்சமும் இந்த திரையில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த சிறப்பம்சங்கள் அனைத்தையும் டிவிஎஸ் ஸ்மார்ட்-எக்ஸோன்னெக்ட் செயலி வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். என்னை கண்டுபிடி (Find me) வசதி மற்றும் ஃபாலோ மீ ஹெட்லேம்ப் (Follow me Headlamps) ஆகிய அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

பாதுகாப்பு அம்சம்: ரேபிட் ஃப்ளாஷிங் இன்டிகேட்டர் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. எமெர்ஜென்சி நேரத்தில் இது ஒளிர்ந்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். குறிப்பாக, அவசரமாக பிரேக் பிடிக்கும் இது தானாக ஆனாகி மற்றவர்களை எச்சரிக்கை செய்யும். இத்துடன், தானாகவே இன்டிகேட்டர்கள் ஆஃப் ஆகும் வசதியும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஒரு முறை ஆன் செய்த பின்னர் 100 மீட்டர் அல்லது 20 செகண்டுகளுக்கு பின்னர் அது தானாக ஆஃப் ஆகும். இத்துடன், டிஸ்க் பிரேக் வசதியும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர டிரம் பிரேக் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. இந்த ஸ்கூட்டரின் பாடி பேனல் மெட்டலால் உருவாக்கப்பட்டு இருப்பதாக டிவிஎஸ் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், இது நீடித்து உழைக்கும் என தெரிகின்றது.

நிற தேர்வு மற்றும் வேரியண்ட் விபரம்: புதிய ஜுபிடர் 110 ஸ்கூட்டரை நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது டிவிஎஸ். டிரம் (Drum), டிரம் அலாய் (Drum Alloy), ஸ்மார்ட்-எக்ஸோன்னக்ட் (SmartXonnect Drum) மற்றும் ஸ்மார்ட்-எக்ஸோன்னக்ட் டிஸ்க் (SmartXonnect Disc) ஆகியவையே அவை ஆகும்.

நிற தேர்வை பொருத்த வரை இதில் ஆறு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஸ்டார்லைட் ப்ளூ க்ளாஸ் (Starlight Blue Gloss), டைட்டானியம் கிரே மேட் (Titanium Grey Matte), லூனார் ஒயிட் க்ளாஸ் (Lunar White Gloss), மீட்டியோர் ரெட் க்ளாஸ் (Meteor Red Gloss), டான் ப்ளூ மேட் (Dawn Blue Matte) மற்றும் கேலக்டிக் காப்பர் மேட் (Galactic Cooper Matte) ஆகியவையே அவை ஆகும்.

எஞ்சின் விபரம்: 113 சிசி திறன் கொண்ட மோட்டாரே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 8 எச்பி மற்றும் 9.8 என்எம் டார்க்கை வெளியேற்றும். இது முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் அதிக திறன் என்பது குறிப்பிடத்தகுந்தது. 0.1 எச்பி மற்றும் 1 என்எம் டார்க்கே அதிகம் ஆகும்.

இந்த மோட்டாருடன் சேர்த்து ஐகோ அசிஸ்ட் (iGO Assist) அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ-ஹைபிரிட் தொழில்நுட்பம் ஆகும். 110 சிசி பிரிவில் இந்த அம்சத்தைப் பெறும் முதல் ஸ்கூட்டர் மாடல் இதுவே ஆகும். இத்துடன், இன்டக்ரேடட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் மோட்டாரும் கூடுதல் திறனுக்காக வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலையை மட்டுமே அறிவித்து இருக்கின்றது. ரூ. 73,700 விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். விரைவில் மற்ற தேர்வுகளின் விலையும் அறிவிக்கப்பட உள்ளன. இதில் கூடுதல் ஓர் சிறப்பாக சுலபமாக எரிபொருள் நிரப்பும் விதமாக முன் பக்கத்தில் எரிபொருளை நிரப்புவதற்கான வாய் பகுதி வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், பல நிலைகளில் மாறுபட்ட வாகனமாக புதிய டிவிஎஸ் ஜுபிடர் 110 ஸ்கூட்டர் காட்சியளிக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, August 23, 2024, 5:00 [IST]
English summary
2024 tvs jupiter 110 launched here is top things to know
மேலும்... #tvs motor #2024 TVS Jupiter 110 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+