இவங்க கொஞ்சம் கொஞ்சமா காட்டுறத பாத்தா இதுதான் சிஎன்ஜி ஸ்கூட்டரோ! நாளை மறுநாள் அறிமுகமாகும் டிவிஎஸ் ஸ்கூட்டர்!
டிவிஎஸ் (TVS) நிறுவனம் நாளை மறு நாள், அதாவது, ஆகஸ்டு 22 ஆம் தேதி அன்று ஓர் ஸ்கூட்டர் (Scooter) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனமும் தற்போது டீசர் (Teaser) படங்களை வெளியிடத் தொடங்கி இருக்கின்றது. வாகனத்தின் அங்கங்களை வெளிக்காட்டக் கூடிய டீசர் படங்களையே நிறுவனம் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அந்த படங்களில் வாகனம் முழுமையாகக் காட்சியளித்து விடக் கூடாது என்பதற்காக மிகவும் கஞ்சத் தனமாக அதன் பாகங்களை டிவிஎஸ் காண்பித்து வருகின்றது.
நிறுவனத்தின் இத்தகைய செயலை வைத்து பார்க்கையில் இது நிறுவனத்தின் சிஎன்ஜியில் இயங்கும் ஸ்கூட்டராக இருக்குமோ என சந்தேகிக்க வைக்கின்றது. நிறுவனமும் தனது முதல் சிஎன்ஜி-யில் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதில் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக சமீப சில தினங்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனத்தின் இந்த டீசர் வெளியீடு செயலும் தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், மறுபக்கம் இது நிறுவனத்தின் புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஜுபிடர் 110 (Jupiter 110) மாடலின் அப்டேட் வெர்ஷனின் டீசர் படங்கள என கூறப்படுகின்றது.
நிறுவனம் இந்தியாவில் சிஎன்ஜி ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் மட்டுமல்ல தன்னுடைய தயாரிப்புகளைப் புதுப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையிலேயே அது ஜுபிடர் 110 மாடலையும் புதுப்பித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் வருகையின் பக்கம் இரண்டு சக்கர வாகன காதலர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே டிவிஎஸ் நிறுவனம் தற்போது அதன் டீசர் படங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
முன்னதாக கூறியதைப் போல இதன் வெளியீட்டு நிகழ்வு வருகின்ற ஆகஸ்டு 22 ஆம் தேதி அன்றே அரங்கேற இருக்கின்றது. தற்போது வெளியாகி இருக்கும் டீசர் படங்களின் அடிப்படையில் நிறுவனம் ஜுபிடர் 110 ஸ்கூட்டரை வேற லெவலுக்கு அப்டேட் செய்திருக்கும் என நம்பப்படுகின்றது.
குறிப்பாக ஸ்கூட்டரின் முன், பின் மற்றும் பக்கவாட்டு பகுதிகளுக்கு புதிய தோற்றத்தை வழங்கக் கூடிய மாற்றங்களையே அது செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதை டீசர் படங்களும் உறுதிப்படுத்துகின்றன. இதன் லைட்டுகளும் மாற்றப்பட்டு இருப்பதையும் டீசர் படங்கள் உறுதி செய்திருக்கின்றன. புதிய டிஆர்எல் மற்றும் ஹெட்லைட்டே புதிய ஜுபிடர் 110-இல் எதிர்பார்க்கப்படுகின்றது
இதுதவிர, புதிய டிஜிட்டல் திரை, ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் இந்த ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரையில் கூடுதல் அம்சமாக திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதியையும் எதிர்பார்க்கலாம். ஆனால், எஞ்சின் இன்னும் சில விஷயங்களில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகின்றது.
ஆகையால், அதே தற்போது விற்பனையில் இருக்கும் ஜுபிடர் 110 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே 109.7 சிசி திறன் கொண்ட எஞ்சினே இதில் இடம் பெற இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.88 பிஎஸ் பவரையும், 8.80 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிவிஎஸ் நிறுவனம் ஜுபிடர் 110 ஸ்கூட்டரை ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டியாக இருக்கும் நோக்கிலேயே நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த போட்டியை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது டிவிஎஸ் தற்போது புதுப்பிக்கப்பட்ட ஜுபிடர் 110 ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த பணியில் மிக தீவிரமாக அது இறங்கியிருப்பதை இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் டீசர் படங்கள் உறுதி செய்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா ஆக்டிவா இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டர் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இதற்கு டஃப் கொடுக்கும் வகையிலேயே இந்தியாவில் ஜுபிடர் ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கின்றது. இந்த போட்டியை இரட்டிப்பாக்கும் வகையிலேயே ஜுபிடரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








