பைக்கை இந்த கலரில் வாங்கினால் எல்லார் கண்ணும் உங்க மேல தான் இருக்கும்!! யமஹாவை இதுக்காகவே பாராட்டனும்!
யமஹா (Yamaha) நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில மோட்டார்சைக்கிள்களை அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது. இந்த வகையில் விற்பனைக்கு வந்துள்ள புதிய யமஹா 2-வீலர்களை பற்றியும், அவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அப்டேட்களை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
யமஹா, இந்தியாவில் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பிட்ட காலத்தில் அவ்வப்போது 2-வீலர்களை அப்டேட் செய்துவிடும் யமஹா, மீண்டும் இந்திய மார்க்கெட்டில் அதன் எம்டி-15 பைக்கையும், ஃபேஸினோ மற்றும் ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களையும் மெருக்கேற்றி உள்ளது. இந்த யமஹா 2-வீலர்களில் டெக்னிக்கல் அப்டேட்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

வாகனத்தில் கொடுக்கப்படும் கிராஃபிக்ஸ் மாற்றப்பட்டுள்ளது மற்றும் புதிய நிறங்களில் பெயிண்ட் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, 2024 யமஹா எம்டி-15 பைக்கிற்கு சைபர் க்ரீன் என்கிற புதுமையான பெயிண்ட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பெயிண்ட் ஆப்ஷனில் எம்டி-15 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்து 72,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சியான் ஸ்டோர்ம் டி.எல்.எக்ஸ் பெயிண்ட் ஆப்ஷனில் எம்டி-15 பைக்கின் கிராஃபிக்ஸில் சிறிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றுடன், எம்டி-15 பைக்கின் டி.எல்.எக்ஸ் வேரியண்ட்டில் புதியதாக ஹசார்ட் ஃபங்க்சன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது, பயணத்தின்போது ஓட்டுனருக்கான எச்சரிக்கைகளை வழங்கும்.

இவை தவிர்த்து, யமஹா எம்டி-15 பைக்கில் வேறெந்த அப்டேட்டும் கிடையாது. வழக்கம்போல், 2024 எம்டி-15 பைக்கையும் டார்க் மேட் நீலம், மெட்டாலிக் பிளாக், ஐஸ் ஃப்ளூ வெர்மிலியன், ரேசிங் நீலம் மற்றும் மெட்டாலிக் கருப்பு உள்ளிட்ட பெயிண்ட் ஆப்ஷன்களில் வாங்கலாம். இந்த பைக்கில் ஆர்-15இல் பொருத்தப்படும் அதே 155சிசி சிங்கிள்-சிலிண்டர் 4-வால்வு லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.
யமஹா எம்டி-15 பைக்கில் தொழிற்நுட்ப அம்சங்களாக டிராக்ஷன் கண்ட்ரோல், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டம், வால்வு செயல்பாட்டு தொழிற்நுட்பம் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன. அலுமினியத்தில் ஸ்விங்கார்மை பெறும் இந்த பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் தலைக்கீழான ஃபோர்குகள் பொருத்தப்படுகின்றன. யமஹா ரே இசட்.ஆர் 125 ஹைப்ரீட் ஸ்கூட்டரில் சியான் நீலம் என்கிற பெயிண்ட் ஆப்ஷன் புதியதாக வழங்கப்பட்டுள்ளது.

ஃபேஸினோ 125 ஸ்கூட்டரை பொறுத்தவரையில், இதன் ஹைப்ரீட் வெர்சனுக்கு சியான் நீலம், மேட் காப்பர், சில்வர் & மெட்டாலிக் வெள்ளை உள்ளிட்ட பெயிண்ட் ஆப்ஷன்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன. ஃபேஸினோ 125 ஹைப்ரீட் ஸ்கூட்டரில் ஏற்கனவே அடர் மேட் நீலம், கூல் நீலம் மெட்டாலிக் மற்றும் விவிட் சிவப்பு உள்ளிட்ட பெயிண்ட் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன்களில் ஃபேஸினோ 125 ஸ்கூட்டர் கிடைக்கிறது. இதில் டிரம் பிரேக் வேரியண்ட்டுக்கு புதியதாக மெட்டாலிக் பிளாக் என்கிற ஒரேயொரு பெயிண்ட் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. யமஹவின் இந்த ஹைப்ரீட் ஸ்கூட்டர்களில் 125சிசி ஃப்யுல்-இன்ஜெக்டட் பிஎஸ்6 OBD2 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் ஆனது 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கக்கூடியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா எம்டி-15 பைக்கும், ஃபேஸினோ மற்றும் ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களும் மிகவும் ஸ்டைலிஷானவை என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. இருப்பினும், எப்போதும் கஸ்டமர்களை கவர வேண்டும் என்றால், இவ்வாறு வாகனங்களை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியமாகும். இதனை யமஹா நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளியில், தவறாமல் செய்து விடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









