இந்த ஸ்கூட்டர் கையில இருந்தா எலைட் பாய் போல காட்சியளிப்பீங்க.. தங்க நிற வீலுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்!
இந்திய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று என யமஹா ரே-இசட்ஆர் (Yamaha RayZR) மாடலைச் சொல்லலாம். அந்த அளவிற்கு பலரின் பிடித்தமான வாகனமாக காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே யமஹா (Yamaha) நிறுவனம் இந்த ஸ்கூட்டரின் பக்கம் இந்திய இளைஞர்களை வளைத்துப் போடும் விதமாக ரே-இசட்ஆர் ஸ்ட்ரீட் ரேலி (RayZR Street Rally) பதிப்பை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. வழக்கமான ரே-இசட்ஆர் மாடலைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான அலங்கரிப்பைக் கொண்டதாக இதனை யமஹா நிறுவனம் தயார் செய்துள்ளது.
ஆகையால், வரும் நாட்களில் இரட்டிப்பான வரவேற்பை அது பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் அடுத்தடுத்த என முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றன. இந்த பண்டிகைக் காலத்தில் புதிதாக வாகனத்தை வாங்க திட்டம் போட்டுக் கொண்டிருப்பவர்களை வளைத்து போடும் பொருட்டே ரே-இசட்ஆர் ஸ்ட்ரீட் ரேலி எடிசனை யமஹா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 98,130 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். விலைக்கு ஏற்ப மிகவும் கவர்ச்சியான ஸ்கூட்டராக இது காட்சியளிக்கின்றது. கட்டாயம் பார்வையாளர்களைக் கவரக் கூடிய ஓர் டூ-வீலராக இது இருக்கும். அந்த அளவிற்கு அதன் அலங்கரிப்பு இருக்கின்றது.
குறிப்பாக புதிதாக பயன்படுத்தப்பட்டு இருக்கும் வண்ணங்கள் அதற்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்திருக்கின்றது. சைபர் கிரீன், ஐஸ் ஃப்ளூ வெர்மில்லியன் மற்றும் மேட் பிளாக் ஆகிய வண்ண ஆப்ஷன்களிலேயே இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் ஐஸ் ஃப்ளூ வெர்மில்லியன் நிற தேர்வு மட்டும் பிரத்யேகமாக ப்ளூ ஸ்கொயர் ஷோரூமில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து, இந்த அழகிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக இதன் வீல்கள் மாறுபட்ட நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அந்தவகையில், அதன் வீல்கள் தங்கம் அல்லது பால் பச்சை நிற அலங்கரிப்பால் அழகுப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க தொழில்நுட்பங்கள் விஷயத்திலும் இந்த ஸ்கூட்டர் மிகவும் அசத்தலானதாக உள்ளது.
அந்தவகையில், புதிய அம்சமாக ஆன்ஸர் பேக் எனும் அம்சம் மற்றும் பகல்நேரத்தில் ஒளிரும் புதிய டிஆர்எல் ஆகியவையே வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஆன்ஸர் பேக் அம்சத்தின் வாயிலாக, ஸ்கூட்டர் இருக்கும் இடத்தை துள்ளியமாக அறிந்துக் கொள்ள முடியும். உதாரணமாக, வாகனங்கள் நிறைந்துக் காணப்படும் பார்க்கிங் ஏரியாவில் நம்முடைய வாகனம் எங்கு இருக்கின்றது என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.
எல்இடி லைட் மற்றும் பஸ்ஸரை ஒலிர விட்டே வாகனம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கும். தொடர்ந்து, ரைடை சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு இந்த ஸ்கூட்டரில் டூ-லெவல் அமைப்பைக் கொண்ட இருக்கை வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, இது இரண்டு நிறத்தாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இது ஸ்கூட்டருக்கு கூடுதல் ஷார்ப்பான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது. இதுபோன்று அலங்கரிப்பில் மட்டுமே இந்த ஸ்கூட்டர் வழக்கமான ரே-இசட்ஆர் இடமிருந்து மாறுபட்டுக் காட்சியளிக்கும். அதேவேளையில், எஞ்சின் மற்றும் பிறவற்றில் இது இரண்டும் ஒரே மாதிரி காட்சியளிக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ஸ்கூட்டரில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் ஏர் கூல்டு மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்டட் வசதிக் கொண்ட மோட்டார் ஆகும். ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் அம்சமும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது வேகமான, ஈசியமான மற்றும் அமைதியான இயக்கத்தை வழங்கும். தொடர்ந்து, ஆட்டோ ஸ்டாப் மற்றும் ஸ்டார்ட் அம்சம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவற்றுடன், ஸ்கூட்டரின் முரட்டுத் தனமான தோற்றத்திற்காக பிரஷ் குவார்டு, மெட்டல் பிளேட்டுகள் மற்றும் பிளாக் பேட்டர்ன் டயர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாகன உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் புதிய மற்றும் சிறப்பு பதிப்பு வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே யமஹா நிறுவனம் எலைட் வாகனம் என கூறும் அளவிற்கு சிறப்பான தோற்றம் கொண்ட ரே-இசட்ஆர் ஸ்ட்ரீட் ரேலி-யை விற்பனைக்குக் களமிறக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications








