2025 ஹோண்டா ஆக்டிவா 125 விற்பனைக்கு அறிமுகம்.. விலை 94 ஆயிரம் மட்டும்தானா.. OBD2B தர எஞ்சின் உடன் அறிமுகம்!!
முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் (Honda Motorcycle & Scooter India), 2025 ஆக்டிவா 125 (2025 Activa 125) ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுகமாக இந்த ஸ்கூட்டருக்கு 94 ஆயிரத்து 422 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பல்வேறு அப்டேட்டுகளுடன் இந்த ஸ்கூட்டரை ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
மிக முக்கியமாக ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கும் டிஎஃப்டி திரையை ஹோண்டா நிறுவனம் அப்டேட் செய்திருக்கின்றது. ப்ளூடூத் இணைப்பு மற்றும் நேவிகேஷன் வசதிக் கொண்டதே இந்த திரை ஆகும். இதுமட்டுமில்லைங்க, செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளையும் இந்த திரை வாயிலாக தெரிந்துக் கொள்ள முடியும்.

இந்த அம்சங்களை 'ஹோண்டா ரோடு சிங்க்' ( Honda Road-Sync) செயலி உடன் இணைப்பதன் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த டிஎஃப்டி திரையின் அளவு 4.2 அங்குலம் ஆகும். இதுதவிர, யுஎஸ்பி (USB) டைப் சி வகை சார்ஜிங் போர்ட்-ம் 2025 ஆக்டிவா ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், மற்றுமொரு மிக முக்கியமான அப்டேட்டாக ஓபிடி2பி (OBD2B) தர எஞ்சினே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் மைலேஜுக்கு வழி வகுக்கும். இந்த திறனுக்காக ஸ்கூட்டரில் ஐடிலிங் ஸ்டாப் சிஸ்டம் (Idling Stop System)ம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலே பார்த்த அப்டேட்டுகளை தவிர வேறு எந்த மாற்றுமும் ஹோண்டா ஆக்டிவா 125-இல் மேற்கொள்ளப்படவில்லை. இது மொத்தமாக இரண்டு விதமான வேரியண்டுகள் மற்றும் 6 விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. டிஎல்எக்ஸ் (DLX) மற்றும் எச்-ஸ்மார்ட் (H-Smart) ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும்.
நிற தேர்வுகளாக பிளாக் (Black), மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் (Matt Axis Gray Metallic), பியர்ல் டீப் கிரவுண்ட் கிரே (Pearl Deep Ground Gray), பியர்ல் சைரன் ப்ளூ (Pearl Siren Blue), ரிபெள் ரெட் மெட்டாலிக் (Rebel Red Metallic) மற்றும் பியர்ல் ப்ரீசியஸ் ஒயிட் (Pearl Precious White) ஆகியவையே அவை ஆகும்.
ஸ்கூட்டரில் 123.92 சிசி, சிங்கிள் சிலிண்டர் பிஜிஎம் எஃப்ஐ (PGM Fi) எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 6.20 kW பவரையும், 10.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே 2025 ஆம் ஆண்டு மாடல் ஆக்டிவா ஸ்கூட்டரை இந்தியர்களைக் கவரும் நோக்கில் ஹோண்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்து உள்ளது. இதுவும் விற்பனையில் புதிய புதிய சதானைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் லுக்கில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படாதது சற்றே ஏமாற்றமாக இருக்கின்றது. விரைவில் இதன் ஸ்டைலிலும் அப்டேட் செய்யபப்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாட்டின் பெஸ்ட் செல்லிங் டூ-வீலர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது. இதன் பக்கம் வாடிக்கையாளர்களைக் கூடுதலாக கவர்ந்திழுக்க வேண்டும் என்பதில் ஹோண்டா நிறுவனம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே 2025 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்னரே முந்திக் கொண்டு 2025 மாடல் ஆக்டிவாவை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








