இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா! புத்தாண்டு பொறந்ததும் காளையை களத்துல எறக்கி விட போறாங்க!

இந்தியாவை சேர்ந்த பெரும்பாலானோருக்கு ஒரு முறையாவது ராயல் என்பீல்டு (Royal Enfield) பைக்கை சொந்தமாக வாங்கி விட வேண்டும் என்ற கனவு உள்ளது. சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் இந்த லட்சியத்தை கொண்டுள்ளனர். ஆனால் ராயல் என்பீல்டு, பிரீமியம் பைக்குகளை தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். எனவே அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களாலும், ராயல் என்பீல்டு பைக்குகளை சொந்தமாக்க முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350).

மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் (Most Affordable Royal Enfield Bike) என்ற பெருமையை தற்சமயம் கைவசம் வைத்திருப்பது, ஹண்டர் 350 பைக்தான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1.50 லட்ச ரூபாய் மட்டுமே.

Royal Enfield Hunter 350 Side Design

இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இதை விட குறைவான விலையில் எந்தவொரு ராயல் என்பீல்டு பைக்கையும் வாங்க முடியாது. மிகவும் விலை குறைவானதாக இருப்பதால், நிறைய பேர் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை வாங்கி வருகின்றனர்.

இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும், சிறப்பான விற்பனை எண்ணிக்கையை, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் பதிவு செய்து வருகிறது. ஆனால் இந்த விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரித்து கொள்ள ராயல் என்பீல்டு நிறுவனம் விரும்புகிறது. எனவே ஹண்டர் 350 பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Royal Enfield Hunter 350

இதன் ஒரு பகுதியாக அப்டேட் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் சோதனை ஓட்டம், தமிழக சாலைகளில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கூடிய விரைவில் புத்தம் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் வட்ட வடிவிலான புதிய எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் இருக்கும் மிகப்பெரிய குறை என்னவென்றால், அதன் சஸ்பென்ஸன் செட்-அப் ஆகும். ஆனால் இந்த குறையை ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய மாடலில் போக்கும் என தெரிகிறது.

ஆனால் இன்ஜினில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. தற்போதைய மாடலில் வழங்கப்படும் அதே 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் ஆப்ஷனே தொடர்ந்து வழங்கப்படும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படலாம். இன்ஜின் ஆப்ஷனில் மாற்றம் இல்லை என்றாலும் கூட, புதிய கலர் ஆப்ஷன்களை நாம் எதிர்பார்க்கலாம். அத்துடன் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஆப்ஷன்களையும் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய அப்டேட்கள் காரணமாக ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விலை சிறிய அளவில் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என நாங்கள் கருதுகிறோம். அனேகமாக வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில், புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2024, 15:38 [IST]
English summary
2025 royal enfield hunter 350 india launch details new updates
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+